என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்து கேஎல் ராகுல் சாதனை
- அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
- 129 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை கேஎல் ராகுல் எட்டினார்.
ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 1 சிக்ஸ் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக 200 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.
129 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை கேஎல் ராகுல் எட்டினார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவர் வெறும் 69 இன்னிங்ஸ்களில் 200 சிக்சர்கள் அடித்துள்ளார். 97 இன்னிங்ஸ்களில் 200 சிக்சர்கள் அடித்த ஆண்ட்ரே ரஸல் 2 ஆம் இடத்தில உள்ளார்.






