என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    X

    ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வுக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    • ரகானே 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • நூர் அகமது 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். 2ஆவது ஓவரை கம்போஜ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் குர்பாஸ் 9 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. 8ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் சுனில் நரைன் (17 பந்தில் 26) ரன், ரகுவன்ஷி (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் விளையாடிய ரகானே 33 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ரகானே ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.

    5ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் அந்த்ரே ரசல் ஜோடி சேர்ந்தார். அந்தரே ரசல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரசல் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.

    6ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். கொல்கத்தாவுக்கு 18ஆவது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. 19ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். மொத்தமாக 4 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 19 ஓவர் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க கொல்கத்தா 179 ரன்கள் குவித்துள்ளது. மணிஷ் பாண்டே 28 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    Next Story
    ×