என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: பவர்பிளேயில் அதிரடி- டெல்லிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
- கொல்கத்தா முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் குவித்தது.
- குர்பாஸ் 12 பந்தில் 26 ரன்களும், சுனில் நரைன் 16 பந்தில் 27 ரன்களும் அடித்தனர்.
ஐபிஎல் 2025 தொடரின் 48ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தையே குர்பாஸ் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட 8 ரன்கள் கிடைத்தன.
2ஆவது ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சுனில் நரைன் சிக்சருக்கு விரட்டினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் கிடைத்தன.
ஸ்டார்க் வீசிய 3ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்த குர்பாஸ் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குர்பாஸ் 12 பந்தில் 26 ரன்கள் விளாசினார். குர்பாஸ் ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா 3 ஓவரில் 48 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். கொல்கத்தா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் குவித்தது. 7ஆவது ஓவரை நிகம் வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 16 பந்தில் 27 ரன்கள் அடித்தார்.
ரகானே 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கொல்கத்தா 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.
ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக விளையாடி ஸ்கோரை 200 நோக்கி அழைத்துச் சென்றனர். கொல்கத்தா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது.
ரகுவன்ஷி 32 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 18 ஓவரில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரில் 14 ரன்களும், 20 ஓவரில் 9 ரன்களும் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்துள்ளது.