என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐ.பி.எல் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன்: ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனை
    X

    ஐ.பி.எல் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன்: ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனை

    • முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
    • லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.

    மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், ஐ.பி.எல். வரலாற்றில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற புதிய சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.

    Next Story
    ×