என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    18 வயதானால் வாக்காளராக பதிவு செய்யுங்கள் - RCB அணிக்கு வாழ்த்து தெரிவித்த தேர்தல் ஆணையம்
    X

    18 வயதானால் வாக்காளராக பதிவு செய்யுங்கள் - RCB அணிக்கு வாழ்த்து தெரிவித்த தேர்தல் ஆணையம்

    • ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
    • 18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    18 வருட காத்திருப்புக்கு பின்பு பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், 'காத்திருந்தது போதும், 18 வயதானால் வாக்காளராக பதிவு செய்யுங்கள்' என கோரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×