என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டம்- திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை?
- முதல் 2 போட்டிகளில் திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கொல்கத்தா:
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் திக்வேஷ் ரதி. இவரது பந்து வீச்சு எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது.
25 வயதான திக்வேஷ் ரதி இந்த ஐ.பி.எல்.லில் அறிமுகமாகி 5 ஆட்டத்தில் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரன்களை விட்டுக் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக வீசி வருகிறார்.
அவர் விக்கெட்டுகளை கைப்பற்றும்போது வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக பிரியான்ஷ் ஆர்யாவை அவுட் செய்தபோது திக்வேஷ் ரதி அருகே வந்து கையில் நோட்புக்கில் கையெழுத்திடுவது போல் கொண்டாடினார். இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மும்பைக்கு எதிராகவும் இதே மாதிரியான நோட்புக் கொண்டாட்டத்துக்காக 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மொத்தமாக 2 தகுதி குறைப்பு புள்ளிகளை பெற்றார்.
இந்த நிலையில் அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நேற்றைய ஆட்டத்தில் அவர் கொல்கத்தா தொடக்க வீரர் நரைனை அவுட் செய்தார். அப்போது அவர் தனது வழக்கமான லெட்டர் பேட் கொண்டாட்டத்தை தற்போது திடலில் கொண்டாடினார். ஆடுகளத்தில் கையெழுத்திடுவது போல சைகை செய்தார்.
கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






