என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: 8 ஐபிஎல் சீசனில் 500+ ரன்கள் - RCB வீரர் விராட் கோலி புதிய சாதனை
- இந்த சீசனில் 505 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பையை விராட் கோலி கைப்பற்றினார்.
- ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 8,509 ரன்கள் எடுத்துள்ளார்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர். தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் இந்த சீசனில் 505 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பையை கைப்பற்றினார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக முறை ஒரு சீசனில், 500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதுவரை 8 சீசன்களில் 500 ரன்களுக்கும் மேல் கோலி அடித்துள்ளார். கோலிக்கு அடுத்தபடியாக வார்னர் 7 முறையும் கே.எல்.ராகுல் 6 முறையும் தவான் 5 முறையும் 500 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 263 போட்டிகளில் விளையாடி 8 சதம், 62 அரைசதம் உள்பட 8,509 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா 267 போட்டிகளில் விளையாடி 6,921 ரன்னும், ஷிகர் தவான் 222 போட்டிகளில் விளையாடி 6,769 ரன்னும் எடுத்துள்ளனர்.






