என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகள் - மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை
- நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது
271 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 150 வெற்றிகளுடன் முதல் இடத்திலும், 248
போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 வெற்றிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.






