என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூரை எங்கே?- ஹர்பஜன் சிங் கேள்வி
- பெர்த் டெஸ்டில் நிதிஷ் குமாரை களம் இறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
- ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? என ஹர்பஜன் சிங் கேள்வி.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நிதிஷ் ரெட்டி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோ எங்கே என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:-
உங்களுக்கு ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல்-ரவுண்டர்கள் தேவை. நிதிஷ் ரெட்டியை களம் இறக்குவதை விட உங்களுக்கு வேறு ஆப்சன் இல்லை. ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? அவர்களை ஒயிட்பால் கிரிக்கெட் வடிவத்திற்குள் சுருக்கிவிட்டோம். இரண்டு மூன்று வருடங்களுக்காக ஷர்துல் தாகூரை உருவாக்கினோம். தற்போது அவரை எங்கே? திடீரென இந்த தொடரில் நிதிஷ் குமார் போன்ற பந்து வீச அழைக்கிறீர்கள்.
சவுரவ் கங்குலி போன்று ஒன்றிரண்டு ஓவர்கள் நிதிஷ் ரெட்டியால் வீச முடியும். அவர் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினால் அது அவருக்கு போனஸ்ஆக இருக்கும். பந்து வீச்சில் கங்குலி இந்திய அணிக்கு செய்தது போன்று நிதிஷ் ரெட்டி செய்ய முடியும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஷர்துல் தாகூர் வேகப்பந்து வீச்சு பேட்ஸ்மேன் ஆவார்.
ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்திருந்தார்.