என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐ.பி.எல். ஏலம் தொகை குறைப்பு தொடர்பாக ஸ்டார்க் நோக்கி கோஷம் எழுப்பிய இந்திய ரசிகர்கள்
    X

    ஐ.பி.எல். ஏலம் தொகை குறைப்பு தொடர்பாக ஸ்டார்க் நோக்கி கோஷம் எழுப்பிய இந்திய ரசிகர்கள்

    • முதல் இன்னிங்சில் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி இந்திய பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்தார்.
    • ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி அணி அவரை 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு பிங்க்-பால் போட்டியாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்தான். இவர் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். நேர்த்தியான பவுன்சர் மற்றும் ஸ்விங் மூலம் இந்திய பேட்டிங் ஆர்டரை சீரிகுலைத்தார்.

    இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் ஸ்டார்க்கை நோக்கி ஐபிஎல் தொடரில் சம்பளம் குறைக்கப்பட்டது தொடர்பாக கோசம் எழுப்பினர்.

    கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் 11.75 கோடி ரூபாய்க்கு டெல்லி எடுத்தது.

    அவருடைய சம்பளம் 13 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த மிட்செல் ஸ்டார்க்கை நோக்கி இந்திய ரசிகர்கள், ஐபிஎல், ஐபிஎல், ஸ்டார்க்கிற்கு ஐபிஎல் பிடிக்கும். கே.கே.ஆர்., கே.கே.ஆர். என கோஷம் எழுப்பினர்.

    மேலும் கே.கே.ஆர். சம்பளத்தில் இருந்து எவ்வளவு (Howmuch) குறைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் கோசம் எழுப்பினர்.

    Next Story
    ×