என் மலர்
கிரிக்கெட் (Cricket)

IND Vs WI டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம் - முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 121/2
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
- 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ்
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும் பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை சேர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் 36 ரன்கள் மற்றும் சாய் சுதர்சன் 7 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.
கே.எல்.ராகுல் (53), கில் (18) ஆகியோர் களத்தில் உள்ள நிலையில் இந்திய அணி 41 ரன்கள் பின் தங்கியுள்ளது.






