என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வங்காளதேசம் செல்லும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழு
    X

    வங்காளதேசம் செல்லும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழு

    • இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது.
    • இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்காளதேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது.

    வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

    இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது. இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது. ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்காளதேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. தங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தது.

    இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஐ.சி.சி. குழு இன்று வங்காளதேசம் செல்கிறது. 2 பேர் கொண்ட குழு வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.

    இது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறும்போது,

    'ஐ.சி.சி. குழு வருவது உண்மைதான். அனைத்துவித சூழல் குறித்து விவாதிக்கப்படும். வங்காளதேச அரசின் சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×