என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கடைசி நிமிடத்தில் ஏலம் போனார் அர்ஜூன் டெண்டுல்கர்
- ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது.
- இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கவுள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. ஏலத்தின் முடிவில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் ஏலம் போகவில்லை.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அதன்பின் ஏலம் முடிந்த பிறகு கையில் இருக்கும் தொகையின் அடிப்படையில் எந்த வீரரையும் எடுக்கலாம். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நிமிடத்தில் அர்ஜூனை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவர் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
அர்ஜூனை ஏலத்தில் எடுத்தது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளும் மீம்ஸ்களும் உலா வருகின்றனர். பலர் சச்சின் மகன் என்பதால் அவரை ஏலம் எடுத்ததாகவும் இவரை போன்றவர்களால் தான் பல திறமையுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி என்றாலே நடுவரையும் வாங்கி விடுவார்கள் என மற்ற அணி ரசிகர்கள் கூறுவதுண்டு. முக்கியமாக சிஎஸ்கே ரசிகர்கள் அதை வைத்து கலாய்ப்பதுண்டு. அந்த வகையில் ஏலம் முடிந்த பிறகும் ஒரு வீரரை வாங்க முடியும் என்றால் அது மும்பை அணியால் மட்டுமே முடியும் எனவும் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.






