என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    Iran war | துபாயில் நடைபெற இருந்த ஆப்கன், இலங்கை போட்டிகள் ஒத்திவைப்பு
    X

    Iran war | துபாயில் நடைபெற இருந்த ஆப்கன், இலங்கை போட்டிகள் ஒத்திவைப்பு

    • வளைகுடா நாடுகளில் போர் வெடித்துள்ளது.
    • இதனால் இந்தப் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையே துபாயில் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் டி20 தொடரும், அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடத்த முடிவானது.

    இரு அணிகள் இடையிலான டி20 போட்டிகள் மார்ச் 13, 15, 17 ஆகிய தேதிகளில் ஷார்ஜாவிலும், தொடர்ந்து, மார்ச் 20, 22, 25 ஆகிய தேதிகளில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டிகளை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.

    இந்நிலையில், வளைகுடா நாடுகளில் போர் வெடித்துள்ளதால், ஆப்கன், இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போட்டிகளை தள்ளிவைப்பது என முடிவானது.

    Next Story
    ×