என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    4-வது T20 போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
    X

    4-வது T20 போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

    • டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 28 ரன்கள் அடித்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிங்கிய சிவம் துபே 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார 20 ரன்னிலும் திலக் வர்மா 5 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    கடைசி நேரத்தில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. அக்சர் பட்டேல் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா அணி தரப்பில் எல்லீஸ், ஆடம் சாம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    Next Story
    ×