என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 251 ரன்கள் குவித்த இந்திய மகளிர் அணி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 251 ரன்கள் குவித்த இந்திய மகளிர் அணி

    • இந்திய தரப்பில் கவூர், பிரதிகா ராவல் அரை சதம் விளாசினர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங், அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- பிரதிகா ராவல் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 78 ரன்கள் குவித்தது. மந்தனா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிகா ராவல் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 52 ரன்கள் இருக்கும் போது தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11, தீப்தி சர்மா 1, அமன்ஜோத் கவுர் 13 என நடையை கட்டினர்.

    இதனையடுத்து கேப்டன் கவூர் - ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிச்சா 19 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காஷ்வி கௌதம் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கவூர் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 54 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங், அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×