என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஐசிசி டி20 தரவரிசை - டாப் 10 இடத்தை இழந்த விராட் கோலி
Byமாலை மலர்19 Dec 2021 12:34 AM GMT (Updated: 19 Dec 2021 12:34 AM GMT)
ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் டேவிட் மலான் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
துபாய்:
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், டி20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வரலாறு காணாத அளவு சரிவைக் கண்டுள்ளார்.
டாப்-10 இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி இம்முறை டாப் 10-ல் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ரம் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 4-வது இடத்திலும், இந்தியாவின் கே.எல்.ராகுல் 5-வது இடத்திலும் உள்ளனர்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி 657 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 11-வது இடத்திற்கு சரிவடைந்துள்ளார். ரோகித் சர்மா 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவரும் இடம்பெறவில்லை.
இதையும் படியுங்கள்...ஐஎஸ்எல் கால்பந்து - ஒடிசாவை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது சென்னை
Next Story
×