என் மலர்
விளையாட்டு

ஜோ ரூட்- டேவிட் மலான் ஜோடி
பகலிரவு டெஸ்ட் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் டேவிட் மலான், ஜோ ரூட் ஜோடி 138 ரன்கள் சேர்த்தது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வார்னர் 95 ரன்னில் அவுட்டானார். லாபஸ்சேன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 93 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹமீத் 6 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 4 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டேவிட் மலானும், ஜோ ரூட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். மலான் 80 ரன்னிலும், ரூட் 62 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் 34 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயான் 3 விக்கெட்டும், கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 237 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் 13 ரன்னில் வெளியேறினார்.
மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 21 ரன்னுடனும், நீசர் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையும் படியுங்கள்...தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாகிறார் கே.எல்.ராகுல்
Next Story






