என் மலர்

  செய்திகள்

  விராட் கோலி
  X
  விராட் கோலி

  பந்தை பார்க்காமலேயே கோலி அடித்த சிக்ஸர்... அதிர்ந்த ஷர்துல் தாக்கூர்... ஆர்ப்பரித்த மைதானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸின் 4வது ஓவரை சென்னை அணிக்காக ஷர்துல் தாக்கூர் வீசினார். ஓவரின் நான்காவது பந்தை கோலி, நின்ற இடத்திலிருந்து சிக்ஸருக்கு விரட்டினார்.
  ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது.

  இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர், 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கோலி, 53 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால், அவரின் சிறப்பான பேட்டிங் வெற்றி பெறுவதற்கு உதவவில்லை.

  அதே நேரத்தில் போட்டியின் முதல் இன்னிங்ஸின் 4வது ஓவரை சென்னை அணிக்காக ஷர்துல் தாக்கூர் வீசினார். ஓவரின் நான்காவது பந்தை கோலி, நின்ற இடத்திலிருந்து சிக்ஸருக்கு விரட்டினார்.

  இந்த ஷாட்டின்போது பந்து செல்லும் திசையை கோலி பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் பந்து 82 மீட்டர் பறந்துசென்று மைதானத்துக்கு வெளியே விழுந்தது. கோலியின் அசாத்திய பேட்டிங் காரணமாக இது குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  வீடியோவைப் பார்க்க - https://www.iplt20.com/video/239793/out-of-sharjah-virat-s-mammoth-six?tagNames=ipl-magic,indian-premier-league,ipl-magic
  Next Story
  ×