search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்ரிச் நோர்டியா
    X
    அன்ரிச் நோர்டியா

    டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அன்ரிச் நோர்டியா கொரோனாவால் பாதிப்பு

    டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அன்ரிச் நோர்டியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா கடந்த 6-ந் தேதி மும்பை வந்து 7 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து பாதியில் விலகிய அவர் சக வீரர் காஜிசோ ரபடாவுடன் இணைந்து இங்கு வந்தார். இந்த நிலையில் தனிமைப்படுத்தலின் போது அன்ரிச் நோர்டியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரிய கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறையின் படி அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். அப்போது அவரிடம் கடைசி 2 நாட்கள் உள்பட 5 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகு தான் களம் இறங்க முடியும். நோர்டியா கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 22 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், அதிவேகமாகவும் பந்துவீசி அசத்தினார். அவர் ஆடமுடியாமல் போய் இருப்பது டெல்லி அணிக்கு பின்னடைவாகும். ஏற்கனவே டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் கொரோனா பாதிப்புக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×