என் மலர்

  செய்திகள்

  தவான் - ரோகித் சர்மா
  X
  தவான் - ரோகித் சர்மா

  அதிக முறை 100 ரன்னுக்கு மேல் குவிப்பு: ரோகித் சர்மா-தவான் ஜோடி சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோகித் சர்மா-தவான் தொடக்க விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது.
  புனே:

  இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க ஜோடியான ரோகித் சர்மா - தவான் முதல் விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்தது.

  இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 17-வது முறையாக 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. இதன் மூலம் தொடக்க விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை படைத்தது.

  ரோகித் சர்மாவும், தவானும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கில்கிறிஸ்ட்-ஹைடன் ஜோடியை முந்தியது. இந்த ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 16 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.

  கங்குலி-தெண்டுல்கர் ஜோடி தான் தொடக்க விக்கெட்டுக்கு அதிக பட்சமாக 21 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.

  வெஸ்ட் இன்டீசின் கிரினீட்ச்-கெய்ன்ஸ் ஜோடி 15 முறையும், இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ்-ஜேசன்ராய் ஜோடி 13 தடவையும் 100 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டும் எடுத்து 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளது.

  மேலும் ரோகித் சர்மாவும், தவானும் இணைந்து தொடக்க முதல் விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன்னை எடுத்துள்ளனர். 112 இன்னிங்சில் இந்த ஜோடி 5023 ரன் எடுத்துள்ளது. சராசரி 45.25 ஆகும்.

  தெண்டுல்கர்-கங்குலி ஜோடிக்கு அடுத்தப்படியாக 5 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மா-தவான் பெற்றனர்.

  சர்வதேச அளவில் 5 ஆயிரம் ரன்னை எடுத்த 7-வது ஜோடி ஆகும்.
  Next Story
  ×