search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி
    X
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி

    கப்பா அல்லது பெர்த் எதுவாக இருந்தாலும் ‘பிங்க் பால்’ சவாலுக்கு தயார்: விராட் கோலி

    ஆஸ்திரேலியாவில் பிங்க் பால் டெஸ்ட் கப்பா அல்லது பெர்த் என எங்கு நடைபெற்றாலும் கவலை இல்லை. அதற்கு நாங்கள் தயார் என்று விராட் கோலி கம்பீரமாக பதிலடி கொடுத்துள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெருமளவில் மைதானம் வந்து பார்க்க வைப்பதற்காக பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ஐசிசியை திட்டமிட்டது.

    இந்த போட்டியை அடிலெய்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா முதல்முதலாக நடத்தியது. அதன்பின் ஆஸ்திரேலியா செல்லும் அணிகள் ஒரு போட்டியை பிங்க் பாலில் விளையாடும்படி ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டது.

    அதன்படி ஆஸ்திரேலியா செல்லும் அணிகள் பிங்க் பால் டெஸ்டில் விளையாடுகிறது. ஆனால் கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க் பால் டெஸ்டில் விளையாட மறுத்தது.

    இந்தியா பிங்க் பால் டெஸ்டில் விளையாட தயங்குகிறது. விராட் கோலி எதையும் எளிதாக எதிர்கொள்ளக்கூடிய கேப்டன். இதனால் இந்த வருடம் இறுதியில் நடைபெறும் தொடரின்போது பிங்க் பால் டெஸ்டில் விளையாட இந்தியா சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா நம்புகிறது.

    அதேவேளையில் இந்தியா பிங்க் பால் டெஸ்டில் விளையாடாமல் இருந்தது. முதன்முதலாக இந்தியா கொல்கத்தாவில் வங்காளதேச அணியை எதிர்த்து பிங்க் பாலில் விளையாடியது.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை தூண்டும் வகையில் பேசிக் கொண்டே இருந்தனர்.

    இந்நிலையில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டியளித்தார். அப்போது பிங்க் பால் டெஸ்டிற்கு தயார் என்று கம்பீரமாக சவால் விட்டார்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி சக வீரர்களுடன்

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவில் பகல்-இரவு டெஸ்டில் விளையாடியுள்ளோம். அந்த போட்டி சென்ற வீதம் மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தவொரு டெஸ்ட் தொடராக இருந்தாலும் பிங்க் பால் போட்டி மிகவும் ஆர்வமானதாக மாறியுள்ளது. நாங்கள் பகல்-இரவு டெஸ்டில் விளையாட திறந்த மனதுடன் இருக்கிறோம். சவாலை எதிர்கொள்ள நாங்கள் ரெடி.

    நாங்கள் சவாலுக்கு தயார். கப்பா (பிரிஸ்பேன்) அல்லது பெர்த் என்றாலும் எங்களுக்கு பெரிய விஷயம் அல்ல. உலகின் எந்தவொரு இடத்திலும் எந்த அணியையும் எதிர்த்து ஒரு அணியாக விளையாடும் திறனை பெற்றுள்ளோம். அது ஒயிட் பால், ரெட் பால், பிங்க் பால் என எதுவாக இருந்தாலும் சரி’’ என்றார்.
    Next Story
    ×