search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா - இந்தியா தொடரில் அதிக ரன்கள் குவிப்பவர் விராட் கோலி அல்ல, கவாஜாதான்- ரிக்கி பாண்டிங்
    X

    ஆஸ்திரேலியா - இந்தியா தொடரில் அதிக ரன்கள் குவிப்பவர் விராட் கோலி அல்ல, கவாஜாதான்- ரிக்கி பாண்டிங்

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உஸ்மான் கவாஜாதான் அதிக ரன்கள் குவிப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா அணியை இந்தியா எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.

    ஆனால் இந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும், உஸ்மான் கவாஜா அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார் என்று முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘கவாஜா பேட்டிங்கில் தலைசிறந்து விளங்குகிறார். ஆஸ்திரேலியா மண்ணில் அவரது பேட்டிங் சாதனை அபாரமானது. இந்திய பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும் ஆஸ்திரேலியா மண்ணில், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்வார்.



    விராட் கோலி கடந்த முறை ஆஸ்திரேலியா தொடரில் 692 ரன்கள் குவித்தார். இந்த முறை கவாஜா விராட் கோலியை முந்துவார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் ரன்கள் குவித்தார். இதனால் இந்த தொடரிலும் ரன்கள் குவிப்பார். கடந்த முறை ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு சிறப்பானதாகவே அமைந்தது.

    இரண்டு அணிகளின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதை விட, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள்’’ என்றார்.
    Next Story
    ×