search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானை எளிதில் வென்றது - பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு
    X

    பாகிஸ்தானை எளிதில் வென்றது - பந்து வீச்சாளர்களுக்கு ரோகித்சர்மா பாராட்டு

    ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்தது என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #INDvPAK #RohitSharma
    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் நேற்று மாலை நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஹாங் காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள நாங்கள் விரும்பினோம். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. பந்துவீச்சு முறை மிகவும் சிறப்பாக இருந்தது. ஆடுகளம் பந்துவீச்சு ஏற்ற வகையில் இல்லாவிட்டாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்கள் பணியை செய்தனர்.

    ஹாங் காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து மேம்பட்டு விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு விளையாடினோம். பாபர் ஆசம்- சோயிப் மாலிக் ஜோடியின் ஆட்டம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஆனால் நாங்கள் அச்சம் அடையவில்லை. கேதர் ஜாதவின் பந்துவீச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எங்களது பேட்டிங்கும் நன்றாக இருந்தது. அம்பதி ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK #RohitSharma
    Next Story
    ×