என் மலர்
செய்திகள்

ஓய்வு அளிக்கப்பட்டதால் வாட்டர் பாயாக மாறிய டோனி
இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான டோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். #MSDhoni #INDvIRE #WaterBoyDhoni
அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. ராகுல் 70 ரன்களும், ரெய்னா 69 ரன்களும், பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி, 12.3 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியில் முன்னாள் கேப்டனான டோனி விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த போட்டியில் விளையாடாத டோனி, இந்திய அணி பேட்டிங் பிடித்து கொண்டிருந்தபோது, பேட்ஸ்மேன்களின் கிட்பேக் சுமந்தபடி மைதானத்திற்குள் வந்தார். அதோடு பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீரும் கொண்டு வந்தார். பொதுவாக அணியின் புதிதாக இடம்பிடித்தவர்களே இந்த வேலையை செய்வார்கள்.

ஆனால் அணியின் மூத்த வீரரான டோனியின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டோனியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். #MSDhoni #INDvIRE #WaterBoyDhoni
Next Story