என் மலர்

  செய்திகள்

  2-வது டி20-யில் இந்தியா பேட்டிங்- டோனி, புவி, பும்ரா, தவானுக்கு ஓய்வு
  X

  2-வது டி20-யில் இந்தியா பேட்டிங்- டோனி, புவி, பும்ரா, தவானுக்கு ஓய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயர்லாந்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கிறது. டோனி, புவி, பும்ரா, தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IREvIND
  இந்தியா - அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அயர்லாந்து கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

  அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. முதல் போட்டியில் களம் இறங்கிய எம்எஸ் டோனி, புவனேஸ்வர் குமார், தவான், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. கேஎல் ராகுல், 2. ரோகித் சர்மா, 3. விராட் கோலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. தினேஷ் கார்த்திக், 6. மணிஷ் பாண்டே, 7. உமேஷ் யாதவ், 8. குல்தீப் யாதவ், 9. சாஹல், 10. சித்தார்த் கவுல், 11. ஹர்திக் பாண்டியா.
  Next Story
  ×