என் மலர்

  செய்திகள்

  டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கி புகைப்படம் எடுத்துக் கொண்ட துரைமுருகன்
  X

  டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கி புகைப்படம் எடுத்துக் கொண்ட துரைமுருகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, டோனியின் ஆட்டோகிராஃப் போடப்பட்ட டி-ஷர்ட்டையும் பரிசாக பெற்றார். #CSK #MSDhoni
  சென்னை:

  இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் டோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

  கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அணி நிர்வாகத்தினர், நிர்வாகத்தினருக்கு நெருங்கியவர்கள் ஆகியவர்களுடன் வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

  சென்னையில் முக்கிய நபர்களை டோனி சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், டோனியை சந்தித்து பேசினார், அப்போது தான் கையெழுத்திட்ட டிஷர்டை டோனி பரிசளித்துள்ளார். தோனியுடன் துரைமுருகன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  அரசியலில் பரபரப்பாக இருந்தாலும் துரைமுருகன் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகர். #CSK #MSDhoni #DuraiMurugan  Next Story
  ×