search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
    X

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvKKR
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் இதே ஓவரின் 5-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ரன் ஏற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது. சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ரன்னைத் தொட்டது. கடைச ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

    5-வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் சிக்ஸரும் விளாச கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    Next Story
    ×