என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    விக்கெட் கீப்பிங்கில் மேலும் ஒரு சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்
    X

    விக்கெட் கீப்பிங்கில் மேலும் ஒரு சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பராக விரிதிமான் சஹா செய்த ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #KKRvRR #DineshKarthik

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும், கொல்கத்தா அணியினரின் சிறப்பான பந்துவீச்சினால் 142 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான தினேஷ் கார்த்திக், மற்றொரு இந்திய விக்கெட் கீப்பரான விரிதிமான் சஹாவின் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார்.



    நேற்றை போட்டியில் தினேஷ் கார்த்திக் 3 கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் செய்து எதிரணி வீரர்கள் நான்கு பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார்.  தினேஷ் கார்த்திக், ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்கள் விழ காரணமாக இருந்தது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இந்திய விக்கெட் கீப்பரான விரிதிமான் சஹா இந்த சாதனையை படைத்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்கள் விழ காரணமாக இருந்ததன் மூலம் சஹாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார். #VIVOIPL #IPL2018 #KKRvRR #DineshKarthik
    Next Story
    ×