என் மலர்
செய்திகள்

ஐபிஎல் 2018- சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ்
புனேயில் நடைபெற்று வரும் போட்டியில் ஜடேஜா, ஹர்பஜன் சிங் பந்து வீச்சால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 120 ரன்னில் சுருட்டியது சென்னை. #IPL2018 #CSKvRCB
ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் புனேயில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மெக்கல்லம், பார்தீவ் பட்டேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பார்தீவ் பட்டேல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பவர் பிளே வரை நின்று விளையாடியது. பார்தீப் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது.
பவர் பிளேயின் அடுத்த ஓவரான 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 11 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 1 ரன்கள் எடுத்த நிலையில் 8-வது ஓவரில் ஸ்டம்பிங் ஆனார்.
அதன்பின் வந்த வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மந்தீப் சிங் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் பார்தீவ் பட்டேல் மட்டும் தாக்குப்பிடித்து 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கொலின் டி கிராண்ட்ஹோம் 8 ரன்னிலும், முருகன் அஸ்வின் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 100 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது. பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தாக்குப்பிடித்து விளையாட 17.1 ஓவரில் 100 ரன்னைத் தாண்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். அவர் 26 பந்தில் 36 ரன்கள் சேர்க்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Next Story