search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?
    X

    ஐபிஎல் போட்டி: வீராட்கோலி அணியை டோனி மீண்டும் வீழ்த்துவாரா?

    ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. புனேயில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. #ipl2018 #csk #rcb

    புனே:

    ஐ.பி.எல். போட்டியில் 29-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. புனேயில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூர், டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தது. பஞ்சாப், மும்பை, கொல்கத்தா அணிகளிடம் தோற்று இருந்தது. பெங்களூர் அணியை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் சூப்பர் கிங்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. இதேபோல பீல்டிங்கிலும் வீரர்கள் சொதப்பினர். இதனால் வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்கலாம். ஜடேஜா தொடர்ந்து மோசமாக விளையாடுவது அணிக்கு பாதிப்பே. டோனி, அம்பதி ராயுடு, வாட்சன் ஆகியோரது அதிரடி ஆட்டத்தை பொறுத்தே ரன் குவிப்பு இருக்கும்.

    பெங்களூர் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. ஏற்கனவே சென்னை அணியிடம் தோற்றதால் பதிலடி கொடுத்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.


    காய்ச்சல் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்புவது கூடுதல் பலமே. குயின்டன் டிகாக் இடத்தில் பார்த்தீவ் பட்டேல் இடம் பெறலாம். வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் பெங்களூர் அணி ஆடும். தோல்வியில் இருந்து புதுப்பொலிவு பெற சூப்பர் கிங்ஸ் போராடும். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. டெல்லி அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

    ஐதராபாத் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதுவும் குறைந்த ஸ்கோர் எடுத்து திறமையான பந்துவீச்சால் வெற்றி பெற்றது. அந்த அணி மும்பை, ராஜஸ்தான் அணிகளை தலா 2 முறையும், பஞ்சாப், கொல்கத்தா அணிகளை தலா 1 முறையும் வென்று இருந்தது. பஞ்சாப், சென்னை அணிகளிடம் தோற்று இருந்தது. டெல்லியை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

    டெல்லி அணி தொடர்ந்து வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஐதராபாத்தின் தொடர் வெற்றிக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணியில் ரி‌ஷப்பண்ட் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை பொறுத்தே அணியின் நிலை இருக்கிறது. கேப்டன் ஷிரேயாஸ் அய்யர், பிரித்விஷா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 4-வது வெற்றி ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. #ipl2018 #csk #rcb

    Next Story
    ×