search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை- டோனி
    X

    எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை- டோனி

    கொல்கத்தாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை என அந்த அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSK #KKR #Dhoni
    கொல்கத்தா:

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. கேப்டன் டோனி 43 ரன்னும், வாட்சன் 36 ரன்னும், ரெய்னா 31 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய கொல்கத்தா 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இளம் வீரரான சுப்மான் கில் 36 பந்தில் 57 ரன்னும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 3-வது தோல்வி இதுவாகும். கொல்கத்தா 5-வது வெற்றியை பெற்றது.

    தோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:-

    ஓட்டு மொத்தமாக இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக பந்து வீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

    எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை. இதனால் கடைசி வரை பவுலர்களை மாற்றி கொண்டே இருந்தேன்.

    அவர்கள் தங்களது வேகம் மற்றும் சரியான திசைகளில் வீசுவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பேட்ஸ்மேன்களின் பலம் பற்றி பந்து வீச்சாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் நெருக்கடிதான் ஏற்படும்.

    பேட்ஸ்மேன்கள் பலம் அறிந்து பந்து வீசுவது பவுலர்களில் இருந்து வரவேண்டும். நாங்கள் எப்படி பீல்டிங் செய்வோம் என்பதை அறிவேன்.

    ஆனால், இப்போட்டியில் பீல்டிங் மோசமாக இருந்தது. பீல்டிங்கில் ரன்களை கொடுத்தால் நீங்கள் மெதுவாக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

    பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவதில் சிறந்த உதாரணம் மைக்கேல் ஹஸ்சி. அவரை போன்ற பங்களிப்பு எங்களுக்கு தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “19 வயதுக்குப்பட்டோருக்கான அணியில் விளையாடிய இளம் வீரர்களை தேர்ந்தெடுத்ததற்காக அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    சுப்மான் கில் நன்றாக பேட்டிங் செய்தார். எங்கள் பந்து வீச்சாளர்கள் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தினர்” என்றார். #IPL2018 #CSK #KKR #Dhoni
    Next Story
    ×