என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  X

  ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #KKRvCSK #VIVOIPL

  கொல்கத்தா:

  ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவிற்குப் பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். வாட்சன் 36 ரன்களும், ரெய்னா 31 ரன்களும், டு பிளஸ்சிஸ் 27 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி பந்துவீச்சில் பியூஸ் சாவ்லா, சுனில் நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.  பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லைன், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரில் லைன் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் லைன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து உத்தப்பா களமிரங்கினார். அடுத்த ஓவரை ஆசிப் வீச, அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரேன் சிக்ஸர் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் நரேன் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார்.

  நிகிடி வீசிய மூன்றாவது ஓவரில் கொல்கத்தா அணிக்கு மூன்று பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் உத்தப்பா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷுப்மான் கில் களமிறங்கினார். 6-வது ஓவரை வாட்சன் வீச அந்த ஓவரில் ஷுப்மான் கில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது. 

  7-வது ஓவர் ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் நரேன் 8 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்தை நரேன் தூக்கியடிக்க, அந்த பந்தை பிராவோ கேட்ச் பிடித்தார். நரேன் 20 பந்தில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 12-வது ஓவரின் நான்காவது பந்தில் ரிங்கு சிங் போல்டானார். அவர் 16 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.  15-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரில் கில் இரண்டு சிக்ஸர்களும், தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் அடித்தனர். இதனால் அந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம் ஆகும். கொல்கத்தா அணி 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அப்போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கில், தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பெற வைத்தனர்.

  கொல்கத்தா அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. ஷிப்மான் கில் 57 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #KKRvCSK #VIVOIPL
  Next Story
  ×