என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?
  X

  ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. #IPL2018 #CSK #KKR
  கொல்கத்தா:

  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  டோனி தலைமையிலான சென்னை அணி வழக்கம் போல இந்த சீசனிலும் வலுவான அணியாக விளங்கி வருகிறது. இதுவரை 8 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் சென்னை அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

  சென்னை அணியின் பேட்டிங்கில் டோனி, ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் கலக்கி வருகிறார்கள். சுரேஷ்ரெய்னா எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. வெய்ன் பிராவோ பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளார். சென்னை அணியின் பேட்டிங்குடன் ஒப்பிடுகையில் பந்து வீச்சு சற்று பலம் குறைந்ததாகவே உள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் கே.எம். ஆசிப், நிகிடி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியில் 4 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டாலும், அந்த ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பலத்தை நிரூபித்தது.

  தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 8 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை சாய்த்து இருந்தது.

  கொல்கத்தா அணி கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தையே அதிகம் நம்பி இருக்கிறது. இந்த 3 பேரும் நிலைத்து நின்று விட்டால் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ராபின் உத்தப்பா, இளம் வீரர் சுப்மான் கில் ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து வருகிறார்கள். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் சுனில் நரின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

  சென்னையில் நடந்த இந்த இரு அணிகள் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க கொல்கத்தா அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்க சென்னை அணி முனைப்பு காட்டும். வலுவான சென்னை அணியை கொல்கத்தா அணி எப்படி சமாளிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும் எனலாம்.

  ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 11 முறையும், கொல்கத்தா அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IPL2018 #CSK #KKR
  Next Story
  ×