என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் 2018- இளம் வயதில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார் பிரித்வி ஷா
  X

  ஐபிஎல் 2018- இளம் வயதில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார் பிரித்வி ஷா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்கத்தா அணிக்கெதிராக 44 பந்தில் 62 ரன்கள் சேர்த்ததன் மூலம் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார் பிரித்வி ஷா. #IPL2018 #DD
  ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா களம் இறங்கினார். இவர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை கைப்பற்றியவர்.  இவர் டெல்லி அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி 44 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். இது அவருடைய 2 ஐபிஎல் போட்டியாகும். 2-வது போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன், இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் சாதனையுடன் ஒட்டிக் கொண்டார்.  சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது 18 வயது, 169 நாட்களில் 2013 தொடரில் ஆர்சிபி அணிக்காக 41 பந்தில் 63 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது பிரித்வி ஷா 18 வயது, 169 நாட்களில் 44 பந்தில் 62 ரனகள் எடுத்து சாதனையை பகிர்ந்துள்ளார். ரிஷப் பந்த் கடந்த ஆண்டு 18 வயது 212 நாட்களில் அரைசதம் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.
  Next Story
  ×