என் மலர்

  செய்திகள்

  முதல் இரண்டு இடத்தில் கொலின் முன்றோ, மேக்ஸ்வெல்- கோலி 6-வது இடத்திற்கு பின்னடைவு
  X

  முதல் இரண்டு இடத்தில் கொலின் முன்றோ, மேக்ஸ்வெல்- கோலி 6-வது இடத்திற்கு பின்னடைவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐசிசியின் டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் கொலின் முன்றோ முதல் இடத்தையும், மேக்ஸ்வெல் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கோலி 6-வது இடத்திற்கு சரிந்துள்ளார். #ICCT20Rankings
  இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி சரியாக விளையாடவில்லை. 3-வது போட்டியில் பங்கேற்கவில்லை.

  அதேவேளையில் கடந்த 21-ந்தேதியுடன் முடிவடைந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கொலின் முன்றோ, மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் கொலின் முன்றோ மூன்று இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். மேக்ஸ்வெல் ஐந்து இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.



  பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் முதல் இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 2 இடங்கள் பின்தங்கி 4-வது இடத்தை பிடித்துள்ளார். மார்ட்டின் கப்தில் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

  இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 இடங்கள் சரிந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். டி20-க்கான தரவரிசையில் விராட் கோலி நீண்ட காலமாக முதல் ஐந்து இடத்திற்குள் இருந்தார். தற்போது முதல் ஐந்து இடத்திற்கு வெளியில் சென்றுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திலும், ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளார்.



  தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் 122 புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  Next Story
  ×