என் மலர்

  செய்திகள்

  ஆஷஸ்: மெல்போர்ன் டெஸ்டில் என்னை நீக்கியிருக்க முடியும்- குக் சொல்கிறார்
  X

  ஆஷஸ்: மெல்போர்ன் டெஸ்டில் என்னை நீக்கியிருக்க முடியும்- குக் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தேர்வாளர்கள் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இருந்து என்னை நீக்கியிருக்க முடியும் என்று இரட்டை சதம் அடித்த குக் கூறியுள்ளார். #AUSvENG #Ashes #AlastairCook
  ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த்தில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து தோல்வியடைந்து தொடரை 0-3 என இழந்துள்ளது.

  இந்நிலையில் 4-வது டெஸ்ட் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் மெல்போர்னில் தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் இங்கிலாந்து தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக் 244 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் மெல்போர்ன் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த வீரர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சந்தர்பால், லாரா ஆகியோரை முந்தி சாதனைப் படைத்துள்ளார்.

  ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் 6 இன்னிங்சில் 104 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அலஸ்டைர் குக் மீது விமர்சனம் எழும்பியது. ஆனால் கேப்டன் ஜோ ரூட் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மெல்போர்ன் டெஸ்டில் இருந்து என்னை நீக்கியிருக்க முடியும் என்று அலஸ்டைர் குக் கூறியுள்ளார்.  இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி என்னை நீக்கியிருக்க முடியும். அதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருந்தனர். ஏனென்றால், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு டெஸ்டுகள், தற்போது ஆஷஸ் தொடரில் முதல் மூன்று டெஸ்டில் நான் சரியாக விளையாடவில்லை.

  ஆனால், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. கடுமையாக பயிற்சி செய்து இங்கிலாந்து அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நினைப்பு எப்போதுமே என்னிடம் உண்டு. இந்த தொடரில் என்னால் ரன்கள் அடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதுபோன்ற மோசமான ஆட்டத்தை நான் விரும்பவில்லை’’ என்றார்.
  Next Story
  ×