என் மலர்

  செய்திகள்

  ஆட்டோ டிரைவர் மகனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு
  X

  ஆட்டோ டிரைவர் மகனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் ஆட்டோ டிரைவர் மகனான முகமது சிராஜ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
  ஐதராபாத்:

  நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் ஆகிய 2 புதுமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  இதில் முகமது சிராஜ் ஆட்டோ டிரைவரின் மகன் ஆவார். 23 வயதான அவர் ஐதராபாத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீரர் ஆவார்.

  ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அவர் ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தார். முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-

  இந்திய அணிக்கு இவ்வளவு சீக்கிரத்தில் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது தேர்வு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்னால் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.

  இந்திய அணியில் இடம் பெற்றதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. கடந்த சீசனில் 40 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் எனது நம்பிக்கை அதிகரித்தது.  என்னை ஊக்குவித்த ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள புவனேஸ்வர்குமார், ஆசிஷ் நெக்ராவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் பரத் அருணும் எனக்கு உதவியாக இருந்தார்.

  எனது தந்தையை ஆட்டோ ஓட்ட மீண்டும் அனுமதிக்க மாட்டேன்.

  இவ்வாறு முகமது சிராஜ் கூறியுள்ளார். அவரது பெற்றோர் பெயர் முகமது கவுஸ்- ‌ஷபானா பேகம் ஆகும்.
  Next Story
  ×