என் மலர்

  செய்திகள்

  நியூசிலாந்துடன் நாளை 2-வது போட்டி: வெற்றி நெருக்கடியில் இந்தியா
  X

  நியூசிலாந்துடன் நாளை 2-வது போட்டி: வெற்றி நெருக்கடியில் இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.
  புனே:

  வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

  இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

  இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

  வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் வெற்றி பெற இந்திய வீரர்கள் அனைவரும் கடுமையாக போராடவேண்டும்.

  தொடர்ச்சியாக இந்திய அணி 6 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தொடரை இழக்கவில்லை. அதை தக்க வைத்துக்கொள்ள வீரர்கள் முயற்சிப்பார்கள்.

  நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் வரிசையில் நீக்கப்பட்ட மனிஷ் பாண்டே இடம் பெற்றால் கேதர் ஜாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் கழற்றிவிடப்படலாம்.

  பந்துவீச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் குல்தீப்யாதவும், யசுவேந்திர சஹால் திறமையுடன் வீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதேபோல வேகப்பந்திலும் புவனேஷ்வர்குமாரும், பும்ராவும் நேர்த்தியாக வீசுவது அவசியமானது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகின்றனர்.

  பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் நியூசிலாந்து அணி நாளைய போட்டியிலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

  நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர், டாம் லாதம், முன்ரோ போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போல்ட், சவுத்தி, மிலின் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

  இரு அணிகளும் நாளை மோதுவது 100-வது போட்டியாகும். இதுவரை நடந்த 99 ஆட்டத்தில் இந்தியா 49-ல், நியூசிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’ஆனது. 5 ஆட்டம் முடிவு இல்லை.

  பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

  இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர்ஜாதவ், டோனி, ஹர்த்திக்பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சஹால், பும்ரா, ரகானே, மனிஷ்பாண்டே, அக்‌ஷர் பட்டேல், ‌ஷர்துல் தாக்கூர்.

  நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், முன்ரோ, டெய்லர், டாம் லாதம், நிக்கோலிஸ், கிராண்ட்ஹோம், சான்ட்னெர், ஆடம்மிலின், சவுத்தி, போல்ட், ஹென்றி, பிலிப்ஸ், சோதி, ஜார்ஜ் வொர்க்கர்.
  Next Story
  ×