என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி
    X

    இந்திய அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மே.இந்திய தீவுகள் அணி

    4-வது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 206 ரன்களை இந்தியாக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    ஜமைக்கா:

    மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் மோதி வருகிறது. இதில் முதல் போட்டி மழை காரணமாக தடையானது. மற்ற மூன்று போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது.

    4-வது ஒருநாள் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக லீவிஸ் மற்றும் கைல் ஹோப் களமிறங்கினர். லீவிஸ் 9 ரன்களில் வெளியேற, கைல் ஹோப்புடன் ஜோடி சேர்ந்தார் ஷாய் ஹோப். இருவரும் நிதமான ஆட்டத்தை வெளிப்படுத்த மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரன் உயரத் தொடங்கியது.



    இதில் கைல் ஹோப்  46 (50) ரன்களும், ஷாய் ஹோப் 51 (98) ரன்களும் எடுத்த ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற 50 ஓவர்கள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்ததது.

    இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்களும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி களமிறங்க உள்ளது. 
    Next Story
    ×