search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    4-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

    ஆன்டிகுவா நகரில் நடைபெற்று வரும் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
    ஆன்டிகுவா:

    இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், யுவராஜ் சிங் மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு மொகமது ஷமி, தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் கைல் ஹோம் தலா 35 ரன்களை குவித்தனர். நிதான துவக்கத்தை அளித்த ஜோடியை பாண்டியா பெவிலியனுக்கு அனுப்பினார். துவக்க ஜோடியை  தொடர்ந்து களமிறஹ்கிய ஷை ஹோம் 25 ரனக்ளுடனும், ராஸ்டன் சேஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.



    வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்ற வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது.

    இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். 190 என்ற வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.
    Next Story
    ×