என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • நமக்கு நாமே உரிமை கொண்டாடலாம்.
    • உரிமைகள் மட்டுமல்ல; கடமைகள் பற்றியும் பேசுகிறது நமது சாசனம்.

    உலக நாடுகள், இந்தியாவை வியந்து பார்க்கின்றன. இன்றைக்கும் கூட பலரால் நம்ப முடியவில்லை - 'எத்தனை சாதிகள், மதங்கள், மொழிகள், இனங்கள், இன்னும் எத்தனை எத்தனை பிரிவுகள்! இத்தனையும் தாண்டி இந்தியா எவ்வாறு ஒன்றாக இருக்கிறது...? அது எப்படி 140 கோடிக்கு மேலான மக்கள், அமைதியாய்

    இணக்கமாய் இணைந்து வாழ்கிறார்கள்..?'

    இதற்கு அடித்தளம் அமைத்தவை இரண்டு -

    மகாத்மா காந்தி காண்பித்து வைத்த அமைதியான அறவழிப் போராட்டம்.

    ஆயுதப் புரட்சியால் விடுதலை அடைந்த நாடுகள், இன்னமும் வறுமையின் பிடியில் இருந்து விலகிய பாடில்லை. இங்கெல்லாம் கலவரம், வன்முறை, ஆட்சிக் கவிழ்ப்பு... தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

    இந்தியாவில்...?

    அரசியல் கட்சிகளுக்கு இடையே எத்தனை ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுத் தேர்தல், வாக்களிப்பு, ஆட்சி மாற்றம்... எல்லாம் இயல்பாக அமைதியாக நடந்து வருவதைப் பார்க்கிறோம்.

    1951-52-ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதன் பிறகு 72 ஆண்டுகளில், நாடாளுமன்ற/ சட்டமன்றத் தேர்தல்களில் எத்தனை ஆட்சி மாற்றங்கள்! நம் நாட்டில், எந்தக் கலவரமும் / குழப்பமும் இன்றி வெகு அமைதியாக, இயல்பாய் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது.

    'அமைதிப் புரட்சி' என்கிற சொல்லுக்கு இலக்கணமாய் அமைந்துள்ளது இந்திய ஜனநாயகம்.

    இதற்கு நம்மை இட்டுச் சென்றது மகாத்மா காந்தியின் அகிம்சை நெறிமுறைகள்.

    இதற்கு இணையாக, மேலும் ஆழமாக, ஒரு ஜனநாயகக் குடியரசாக இந்தியா வலிமையுடன் திகழ முக்கிய காரணம் - நமது - 'சாசனம்'.

    மிகச் சிறந்த சட்ட மாமேதை

    பாபாசாஹிப் டாக்டர் அம்பேத்கர்,

    சாசன வரைவுக் குழுவின் தலைவராக இருந்து ஒட்டுமொத்த இந்திய மக்களின் கனவுகளை ஆசைகளை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் மக்களுக்கான சாசனம் வகுத்துத் தந்தார்.

    எல்லாருக்கும் நன்மை பயப்பதாக, எல்லாரும் உரிமை கொண்டாடுவதாக, எல்லாரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக நமது சாசனம் உயர்ந்து விளங்குகிறது. இதனை இவ்வாறு வடிவமைத்து தந்தவர் அண்ணல் அம்பேத்கர். அதனால் இவரை நாம் 'சாசனத்தின் தந்தை' என்று நன்றியுடன் போற்றி வணங்குகிறோம்.

    சாசனத்தின் முகப்புரை கூறுகிறது:

    ''நாம், இந்திய மக்கள், இந்த சாசனத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்."

    இதற்கு என்ன பொருள்...? சாசனம் நமக்கு ஏராளமான உரிமைகளை வழங்கி உள்ளது. இவை எல்லாம், ஒருவர் கொடுத்து, நாம் பெறுவது அல்ல; இவற்றில் எதையும் நாம் யாரிடமும் கெஞ்சிப் பெற வேண்டியது இல்லை.

    நமது சாசனம், அதில் உள்ள உரிமைகள்.. இந்திய மக்களாக, நமக்கு நாமே வழங்கிக் கொண்டது.

    உதாரணத்துக்கு, நமக்கு ஒரு மின் இணைப்பு, அல்லது, 'கேஸ்' இணைப்பு தேவை என்றால் என்ன செய்வோம்..? ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்து பெற வேண்டும். ஆனால் அடிப்படை உரிமைகள், உதாரணத்துக்கு - பேச்சுரிமை... எங்கும் சென்று விண்ணப்பம் செய்து பெற வேண்டியது இல்லை. நமக்கு நாமே உரிமை கொண்டாடலாம்.

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

    இப்பொழுது புரிகிறதா...? அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்த இந்த சாசனம், அதிகாரம் முழுதையும் மக்களுக்கே வழங்குகிறது.

    மக்களை முன்னிறுத்துகிற, மக்களுக்கு முழு அதிகாரம் வழங்குகிற, மக்களால் மக்களுக்காக வகுக்கப்பட்ட மக்கள் சாசனம் இது.

    சுதந்திரமாய்ப் பேச, எழுத, பயணிக்க, பணி செய்ய, ஒன்று சேர்ந்து அமைதியாய்ப் போராட, விருப்பத்துக்கு ஏற்ப தங்கவும் வாழவும் சாசனம் நமக்கு அத்தனை உரிமையும் வழங்குகிறது.

    ஆறு, ஏரி, குளம், சாலை, மின்சாரம், பொதுப் போக்குவரத்து... எல்லாருக்கும் பொதுவானவை. இவற்றைப் பயன்படுத்த எல்லாருக்கும் சம உரிமை இருக்கிறது. இதனை சாசனம் உறுதி செய்கிறது.

    அதேசமயம், சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு, பின்தங்கிய வகுப்பினருக்கு, கல்வியில் வேலைவாய்ப்பில் சிறப்பு முன்னுரிமை (இட ஒதுக்கீடு) வழங்குவதை சாசனம் அனுமதிக்கிறது.

    'எல்லாரும் சமம்' என்கிற போது இது எப்படி சரியாகும் என்று சிலர் கேட்கலாம். ஒரு தாய்க்கு தனது பிள்ளைகள் எல்லாரும் சமமானவர்கள் தான். ஆனாலும் ஊட்டச்சத்து அதிகம் தேவைப்படுகிற பிள்ளைக்கு அந்தத் தாய் கூடுதல் கவனம் செலுத்துவது நியாயமானது தானே..? இப்படித்தான் பல்லாண்டுகளாய் உரிமை மறுக்கப்பட்ட, ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களிடம் அரசு, கூடுதல் அக்கறை செலுத்தி முன்னுரிமை தந்து அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த சாசனம் வழி செய்கிறது.

    தீண்டாமை தடை செய்யப்படுகிறது. எந்த வடிவத்திலும் தீண்டாமை, தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சாசனம்.

    சாமானிய அடித்தட்டு மக்களுக்கு அதிகார சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

    ஒரு நபரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கான காரணம் அவருக்கு முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். அவரைக் கைது செய்த 24 மணி நேரத்துக்குள் நீதிபதியின் முன் அவரை சமர்ப்பிக்க வேண்டும். ஒரே குற்றத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை தண்டிக்கக் கூடாது. தனக்கு எதிராகத் தானே சாட்சியம் அளிக்குமாறு அவரைக் கட்டாயப் படுத்தக் கூடாது. குற்றம் சாட்டப்பட்ட நபரால் இயலாத பட்சத்தில், அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை அரசு இலவசமாக செய்து தர வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவருக்கு விருப்பமான வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள முழு உரிமை இருக்கிறது.

    இதையெல்லாம் விட மிக முக்கியமானது சாசனம் பிரிவு 21 கூறும் அடிப்படை உரிமை - ஒருவர் உயிருடன் வாழவும் அவரது அந்தரங்க உரிமையைப் பாதுகாத்துக் கொள்ளவும் உள்ள உரிமை, யாருக்கும் மறுக்கப்பட மாட்டாது.

    அதாவது, உயிர் வாழ்வது என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. இதேபோல எந்த ஒரு நபரின் அந்தரங்க விஷயத்திலும், அரசாங்கம் உட்பட யாரும் தலையிட முடியாது.

    இதேபோன்று, எந்த நபருக்கும், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, அது குறித்துப் பேச, வழிபாடு செய்ய முழு உரிமை உள்ளது.

    மதம் மற்றும் மொழி சிறுபான்மையோர் தமக்கென்று சிறப்புக் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொள்ள சாசனம் உரிமை வழங்குகிறது.

    இதெல்லாம் சரி... ஒருவேளை ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் ...? அப்போது அவர் என்ன செய்யலாம்..?

    இந்தியக் குடிமகன் யாரும், தனக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது, நேரடியாக நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அணுக, பிரிவு 32 - உரிமை, அதிகாரம் வழங்குகிறது.

    தனது அடிப்படை உரிமை மட்டும் அல்ல, பிறரின் உரிமைகள் பாதிக்கப்படும் போது கூட, பொதுநலன் கருதி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர எல்லாக் குடிமக்களுக்கும், சாசனம் உரிமை அளிக்கிறது.

    18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தமது பெயரைப் பதிவு செய்து கொள்ள சாசனம் உரிமை வழங்குகிறது.

    நாட்டின் ஜனாதிபதி தொடங்கி கிராமப் பஞ்சாயத்துகள் வரை எவ்வாறு தேர்தல் நடைபெற வேண்டும்; ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகார வரம்பு என்ன..., என்றெல்லாம் சாசனம் விரிவாக எடுத்துரைக்கிறது.

    அரசுப் பணிக்கான தேர்வு நடத்தி ஊழியர்களைத் தேர்ந்து எடுத்து அனுப்பி வைக்க தனியே தேர்வாணையம் அமைக்க சாசனம் வழி செய்கிறது.

    அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அதிகாரம், தனித்து இயங்குகிற தேர்வாணையத்துக்கு மட்டுமே உண்டு.

    உரிமைகள் மட்டுமல்ல; கடமைகள் பற்றியும் பேசுகிறது நமது சாசனம். அரசு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும், அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகள் குறித்தும் சாசனம் விரிவாகப் பேசுகிறது.

    சமமான வேலைக்கு சமமான ஊதியம்; ஆண்-பெண் இருபாலருக்கும், பாகுபாடு அற்ற சம ஊதியம்; தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு, கிராமப் பஞ்சாயத்துகளை வலுவாக்கி அவை தன்னிறைவு கொண்டு தனித்து இயங்குகிற அமைப்பாக செயல்படுவதற்கு தேவையான அதிகாரங்களை (மாநில அரசு) வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான வழிகாட்டி நெறிமுறைகளை சாசனம் முன் வைக்கிறது.

    இந்தியாவின் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மக்கள் நல அரசுகளாக இயங்க வேண்டும் என்று சாசனம் விரும்புகிறது. இந்திய மக்களின் உடல் நலன், ஆரோக்கியம், கல்வி மற்றும் அறிவுத் திறன் சிறப்பாக அமைய வேண்டும் என்கிற உயரிய நோக்கில் சாசனம், வழிகாட்டு நெறிமுறைகளை அரசுக்குப் பரிந்துரைக்கிறது. அவற்றில் ஒன்று - முழு மதுவிலக்கு.

    மருத்துவ காரணங்களுக்கு அன்றி மற்ற பயன்பாட்டுக்கு போதைப் பொருட்கள் போதை மருந்துகள் போதை பானங்கள் கூடாது என்று சாசனத்தின் பிரிவு 47 வலியுறுத்திக் கூறுகிறது. மதுவுக்கு ஆதரவான எந்தச் செய்கையும், மக்கள் நல அரசுக்கு சாசனம் கூறும் நெறிமுறைகளுக்கு எதிரானது.

    நாட்டின் நிர்வாக அதிகாரம் முழுதும் ஜனாதிபதியிடமே இருக்கும். (பிரிவு 53) இதேபோன்று மாநிலத்தின் நிர்வாக அதிகாரம், ஆளுநர் வசமே இருக்கும் என்கிறது சாசனம். (பிரிவு 154) அரசியல் குறிப்பீடுகள் இன்றி சுதந்திரமாக நியாயமாக நடுநிலையுடன் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

    அரசுத் துறை நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படாது இருக்க, தனித்தனியே மூன்று அதிகார பட்டியல்களை சாசனம் கொண்டுள்ளது. இதன்படி, ராணுவம், விண்வெளி ஆராய்ச்சி, கடல், வான் பயணம், வருமான வரி உள்ளிட்டவை நாடாளுமன்ற வரம்புக்குள் வருகிற மத்திய பட்டியலில் அடங்கும்.

    கல்வி நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் மத்திய மாநில அரசுக்கு பொதுவான இசைவுப் பட்டியலில் உள்ளன.

    சட்டம் ஒழுங்கு சுகாதாரம் மின்சாரம், ஏரி குளங்கள் உள்ளிட்டவை மாநிலப் பட்டியலில் அடங்கும்.

    இந்த மூன்று பட்டியல் களிலும் உள்ள துறைகள் அதன் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு குறித்து சமீப காலத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய விவாதங்களை நாம், ஒரு மோதலாக அல்லாமல், ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளமாகவே பார்க்க வேண்டும்.

    சாசனத்தின் பிரிவு 1 கூறுகிறது:

    "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் ஆக இருக்கும்."

    இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் - "இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம் ஆக இருக்கும்" என்றுதான் சாசனம் கூறுகிறதே அன்றி, மாநிலங்களின் ஒன்றியம் இந்தியாவாக இருக்கும் என்று சொல்லவில்லை.

    'கூட்டுறவுக் கூட்டாட்சி முறை' (cooperative federalism) என்கிற வகையில் மத்திய மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று இணக்கமாய் செயல்படுவதையே சாசனம் விரும்புகிறது. இந்த முறைமைதான், நாட்டின் ஜனநாயகத்துக்கு, நாட்டு மக்களின் நலனுக்கு நல்லது பயக்கும்.

    சாசனத்தின் பிரிவுகளை, அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு பாதகம் இன்றி, திருத்தி அமைத்துக் கொள்ள நாடாளுமன்றத்துக்கு சாசனம் அதிகாரம் வழங்குகிறது. இந்த வகையில் இதுவரை நமது சாசனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை எதுவும் சாமானிய மக்களுக்கு சாசனம் வழங்கும் உரிமையை நீதியை சமத்துவத்தை சற்றும் பாதிக்காமல் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுவதாய் அமைதல் வேண்டும். இதனை உறுதி செய்வதே, நமது சாசனத்தை வடிவமைத்த தன்னலமற்ற தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாய் இருக்கும்.

    • அருணகிரிநாதர் தனது திருப்புகழில் 84 பாடல்களை திருச்செந்தூர் முருகன் மீது பாடியுள்ளார்.
    • திருச்செந்தூர் முருகன் வழிபாடு எப்போது தோன்றியது என்பதை இதுவரை யாராலும் கணிக்க இயலவில்லை.

    ஆதி தமிழர்களுக்கு இறைவன் மீது முதன் முதலாக எப்போது நம்பிக்கை ஏற்பட்டதோ அப்போது அவர்கள் அந்த இறைவனுக்கு வைத்த பெயர்களில் ஒன்று முருகன். தமிழகத்தின் தென் பகுதிகளில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் இது பல தடவை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    என்றாலும் தமிழ்க்கடவுள் முருகனின் அவதார பிறப்பு மீது பலருக்கும் தேவையற்ற சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அத்தகைய சந்தேகங்களை தீர்க்கும் வகையில்தான் சங்க கால இலக்கியங்களில் முருகன் பற்றி மிக மிக சிறப்பாக சொல்லப்பட்டு இருப்பதை கடந்த வாரம் பார்த்தோம்.

    அதிலும் திருச்செந்தூர் முருகன் பற்றி தான் சங்க கால இலக்கியங்களில் அதிகளவு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. சங்க காலத்தில் திருச்செந்தூர் என்ற பெயர் சூட்டப்படவில்லை. திருச்செந்தூரில் கடல் அலைகள் ஓயாமல் மீண்டும் மீண்டும் கரைக்கு வந்து வந்து முருகனின் காலடிகளை தொட்டு சென்றதை பார்த்த சங்க கால மக்கள் "அலைவாய்" என்று அந்த ஊரை அழைத்தனர்.

    அதன் பிறகு "சீரலைவாய்" என்று அழைத்தனர். அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் "திரு" அடைமொழி சேர்க்கப்பட்டு "திருச்சீரலைவாய்" என்று அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் மருவி "திருச்செந்தூர்" என்று உருவானது.

    சங்க காலத்தில் திருச்செந்தூருக்கு அருகில் கொற்கை மாநகரம் பாண்டியர்களின் தலைநகராக இருந்ததால் திருச்செந்தூர் மிக மிக சிறப்பான, செழிப்பான ஊர்களில் ஒன்றாக திகழ்ந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், திருப்புகழ், கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா உள்பட ஏராளமான நூல்கள் திருச்செந்தூரின் பழமை சிறப்பை நமக்கு இன்னமும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

    தொல்காப்பியத்தில் திருச்செந்தூரை முருகன் தீம்புனல் அலைவாய்-(களவு சூத்23) என்று கூறப்பட்டுள்ளது.

    புறநானூற்றில்-வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில் நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகநானூற்றில்- திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)-என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருமுருகாற்றுப்படையில்- உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலப்பதிகாரத்தில்- சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றம் என்று கூறப்பட்டுள்ளது.

    அருணகிரிநாதர் திருச்செந்தூர் முருகன் பற்றி கூறுகையில், "செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே" என்று கூறியுள்ளார்.

    சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், முருகனின் வேலாயுதத்தை சிறப்பித்து கூறியுள்ளார். வேலின் பெருமையை சொல்ல வந்த அவர் தமிழகத்தில் சிறப்பான முருகன் தலங்களை வரிசைப்படுத்தி உள்ளார். அதில் முதலிடம் பிடித்து இருப்பது திருச்செந்தூர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சங்க காலத்துக்கு பிறகு வந்த முருகன் அடியார்களும் ஏராளமான பாடல்களை திருச்செந்தூர் மீது பாடியுள்ளனர். குமரகுருபரர், அருண கிரிநாதர், பகழிக்கூத்தர், ஆதி சங்கரர், வென்றி மாலை கவிராயர் போன்ற வர்கள் திருச்செந்தூர் முருகன் மகிமைகளை பட்டியலிட்டுள்ளனர்.

    சமீபத்தில் கந்தசஷ்டியை உருவாக்கிய தேவராய சுவாமிகள் திருச்செந்தூர் தலத்தில் அமர்ந்துதான் அதை எழுதினார். இப்படி இலக்கியங்களுடன் திருச்செந்தூர் முருகனுக்கு உள்ள தொடர்பை சொல்லிக் கொண்டே போகலாம்.

    அருணகிரிநாதர் தனது திருப்புகழில் 84 பாடல்களை திருச்செந்தூர் முருகன் மீது பாடியுள்ளார். அதை பாட.... பாட... திருச்செந்தூர் முருகன் மீது தனி மயக்கமே வந்து விடும்.

    சங்க இலக்கியங்களில் திருச்செந்தூர் முருகன் பற்றி இப்படி ஏராளமான புலவர்கள் பல விதங்களில் பாடியுள்ளனர். தமிழகத்தில் எந்த தலத்தில் உள்ள முருகப்பெருமானுக்கும் இல்லாத சிறப்பு இதுவாகும்.

    சங்க காலத்தில் மட்டுமின்றி அதற்கு முன்பே திருச்செந்தூர் முருகன் வழிபாடு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் புகழ் பெற்று இருந்தது. புராண காலத்திலும் திருச்செந்தூர் தலம் சிறப்பாக இருந்ததற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன.

    ஒரே ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.... ஸ்ரீமத் பாகவதத்தில் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பலராமர் தீர்த்த யாத்திரை செல்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி தீர்த்த யாத்திரை செல்லும் பலராமர் திருச்செந்தூர் தலத்துக்கும் வந்து சென்றது குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் முருகன் வழிபாடு எப்போது தோன்றியது என்பதை இதுவரை யாராலும் கணிக்க இயலவில்லை. அந்த அளவுக்கு திருச்செந்தூர் தலமும், அங்குள்ள வழிபாடும் மிக மிக பழமையானதாகும்.

    நாடு முழுவதும் இருந்து மன்னர்கள், முனிவர்கள், சித்தர்கள், புலவர்கள், பண்டிதர்கள் திருச்செந்தூருக்கு வந்து முருகனை வழிபட்டு சென்றனர் என்பதற்கு வரலாற்று புத்தகங்களில் ஆதாரங்கள் இருக்கின்றன.

    ஆதிசங்கரர் தனது வயிற்று வலியை தீர்த்துக் கொள்வதற்காக திருச்செந்தூருக்கு வந்து முருகனை வழிபட்டு 'சுப்பிரமணிய புஜங்கம்' என்ற அழகிய நூலை படைத்தார்.

    கடைசங்கத்துக்கு தலைமை தாங்கிய நக்கீரர் எழுதிய திருமுருகாற்று படையில் திருச்செந்தூர் முருகன் பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகனின் 6 முகங்கள், 12 கைகள், வேல், மயில், சேவல்கொடி பற்றி நக்கீரர் அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளார்.

    அது மட்டுமின்றி திருச்செந்தூர் தலம் உலகம் போற்றும் புகழ் உடையது என்றும் நக்கீரர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் திருச்செந்தூர் முருகனை பலவிதங்களில் புகழ்ந்துள்ளார். சூரனை அழித்த முருகனின் சுடர்வேலை போற்றியுள்ளார்.

    கடந்த 500 ஆண்டுகளில் திருச்செந்தூர் முருகன் பற்றி புலவர்கள் பாடிய பாடல்கள் ஏராளம். தமிழகத்தில் வேறு எந்த தலத்துக்கும் இல்லாத வகையில் திருச்செந்தூர் முருகன் மீதுதான் அதிக பக்தி இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

    சுவாமிநாத தேசிகர் எழுதிய திருச்செந்தூர் கலம்பகம், குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா, கந்தசாமி புலவர் எழுதிய திருச்செந்தூர் நெண்டி நாடகம், தேவராய சுவாமிகள் எழுதிய கந்தசஷ்டி கவசம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய திருச்செந்தில் பிரபந்தம், அண்ணாமலை ரெட்டியாரின் காவடி சிந்து ஆகியவற்றை அந்த பக்தி இலக்கியங்களுக்கு உதாரணமாக சொல்லலாம்.

    பகழிக்கூத்தர் என்ற வைணவ பக்தர் எழுதிய திருச்செந்தூர் முருகனின் பிள்ளை தமிழ் மிக மிக அருமையான நூலாகும். இதில் பல்வேறு வகையான உவமைகளுடன் முருகன் புகழ் பாடப்பட்டுள்ளது.

    இவை மட்டுமின்றி அந்த காலத்து நாட்டுப்புற பாடல்களிலும் திருச்செந்தூர் முருகன் பற்றி மக்கள் மத்தியில் ஏராளமான பாடல்கள் உலா வந்தன. திருச்செந்தூர் தலம் அந்த காலத்தில் சந்தனமலையில் சந்தன மரங்கள் சூழ நந்தவனமாக இருந்ததை நாட்டு பாடல்களில் பலவிதமாக அந்த காலத்து புலவர்கள் பாடி வைத்து இருந்தனர்.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நாட்டுப்புற பாடல்கள் மக்கள் மத்தியில் பாடப்பட்டு வந்தன. துரதிருஷ்டவசமாக அந்த நாட்டுப்புற பாடல்களை தொகுத்து பாதுகாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடாததால் நிறைய நாட்டுப்புற பாடல்களை நாம் இன்று இழந்து இருக்கிறோம்.

    என்றாலும் சூரபத்மனை வேலாயுதத்தால் அழித்துப் போரில் வென்றபின் செந்தில் எனும் பெயர் பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் ஜெயந்திநாதனாய் வெற்றிக்கோலத்தோடு முருகப்பெருமான் எழுந்தருளியதைத் தமிழ் இலக்கியப் பதிவுகளில் காணமுடிகிறது.

    கந்தபுராண வரிகள் பகைவனுக்கும் அருள்புரியும் கந்த வேலின் உயர் நெஞ்சத்தை உணர வைக்கிறது.

    அருணகிரி நாதரின் கந்தர் அலங்காரத்தில் ஓசைநயத்தோடு திருச்செந்தூர் கடற்கரையில் போர்க்கோலம் பூண்டுவந்த முருகனை காண முடிகிறது. அருணகிரிநாதர் கந்தர லங்காரத்தில் சூரசம்ஹாரக் காட்சியை மிகப்பிரமாதமாக வர்ணித்துள்ளார்.

    அருணகிரிநாதரின் திருப்புகழ் திருச்செந்தூர் சூரசம்ஹாரக் காட்சியை அழகான ஓசை நயத்தோடு நேரலை போல் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. ரிஷிகளைத் துன்புறுத்திய அரக்கனை அழிக்க ஆறுமுகத்தான் கிளம்பி வருவதைப் பார்க்கிறார்

    அருணகிரியார், "ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே, ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே, கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே, குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே, மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே, வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே, ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!" என்று மனமுருகிப் பாடுகிறார். மாறுபடு சூரரை வதைத்த முருகனின் வீரத்தை திருப்புகழில் விளக்குகிறார்.

    மாறுபடு சூரரை வதைத்து ஜெயந்திநாதனாய் திருச்சீரலைவாயில் ஆறுமுகங்களோடும் பன்னிருகரங்களோடும் முருகன் அருள்பாலிப்பதைத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் அழகாகப் பாடியுள்ளார்.

    குமரகுருபரசுவாமிகள் அருளிய கந்தர்கலி வெண்பாவில் முருகக் கடவுளின் திருவிளையாடல்களை விளக்குமிடத்து சூரசம்ஹாரக் காட்சிகளை முன்வைக்கிறார். "கொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியுந் தூளாக வீர வடிவேல் வடித்தோனே! சிங்கமுகனை வென்று வாகை முடித்தோய்! மாவாய்க் கிடந்த நெடுஞ் சூருடலங்கீண்ட சுடர் வேலோய்! என்று விளக்குகிறார்.

    சங்கப் புலவர் பரணர் பாடிய அகநானூற்றுப் பாடலில் முருகனின் போர்ச் சிறப்பை விளக்கி "அழகிய மணிவிளக்குகளையுடைய அலைவாய் எனும் இடத்தில் வீற்றிருந்தருள் புரியும், போர் வலிமை மிகுந்த முருகனோடும் பொருத்தி, என்னை மணந்தபோது செய்த சூளுரையே எனக்குத் துன்பம் தருவதாகும்" என்று தலைவனை மறுத்துத் தலைவி கூறுவதாய் அமைகிறது.

    மாபெரும் வெற்றி வீரனான ஜெயந்திநாதன் மீது சூளுரைத்துப் பின்னர் மீறிய தலைவன் செயலைத் தலைவி "திருமணி விளக்கின லைவாய் செருமிகு சேஎயொடு உற்ற சூளே" எனக் கடிந்துரைப்ப தாய் எழுதப்பட்ட இப்பாடல் முருகனின் சிறப்பை அழகாக விளக்குகிறது.

    இவற்றின் மூலம் திருச்செந்தூர் தலத்தின் பழமை சிறப்பை நம்மால் உணர முடியும். தமிழ் இனம் தோன்றிய போதே முருகனும் உருவாகி விட்டான் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். இத்தகைய சிறப்புடைய திருச்செந்தூரில் முருகன் ஆலயம் எப்படி தோன்றியது என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம். இதற்கு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விடை காணலாம்.

    • ரஜினி சார் அப்படி சொன்னதிலும் ஒரு அர்த்தம் உண்டு.
    • சங்கவி தான் தனக்கு தெரியும் என்று அழைத்து சென்று டாலர் மாற்றி தந்தார்.

    இந்த மீனா இருக்காங்களே... இன்னும் சின்ன பிள்ளை மாதிரிதான்... உங்களோடு ஒரு படம் நடிக்க முடியாமல் போனதை நினைத்து பட்டபாடு இருக்கே... அப்பப்பா... என்று ரஜினி சார் சொல்லவும் எதிரே இருந்த கமலின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தது.

    அவர்கள் அருகே தான் நானும் அமர்ந்து இருந்தேன். இந்த உரையாடல் சிங்கப்பூர் ஓட்டலில் வைத்து நடந்தது. ரஜினி சார் அப்படி சொன்னதிலும் ஒரு அர்த்தம் உண்டு.

    சிவாஜி சார், கமல் சார் காம்பினேசனில் உருவான 'தேவர் மகன்' படத்தில் நடிக்க எனக்குதான் முதலில் வாய்ப்பு வந்தது.

    அந்த படத்துக்காக மேக்-அப்பெல்லாம் போட்டு இரண்டு காட்சிகளும் எடுத்தார்கள். ஆனால் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகும் ஒன்றிரண்டு முறை முயற்சித்தும் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது.

    இருபெரும் நடிப்பு சக்கரவர்த்திகளோடு இணைந்து நடிக்க கிடைத்த அந்த வாய்ப்பை நான் வேண்டுமென்றே விடுவேனா? அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து இன்றும் வருத்தப்படுகிறேன்.

    அதைதான் ரஜினி சாரிடம் பலமுறை 'கமல் சாரோடு நடிக்கும் வாய்ப்பு போச்சு சார் என்று கூறி வருதப்பட்டு புலம்பியிருக்கிறேன்.

    அதைதான் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்த அந்த தருணத்தில் நினைவு படுத்தி கமல் மனதில் 'வேண்டுமென்றே தான் மீனா கால்ஷீட் தந்திருக்க மாட்டாரோ?' என்று லேசான தவறான புரிதல் இருந்திருக்கலாம். அதை தான் ரஜினி பேசி தீர்த்து வைத்தார்.


    ரஜினி பேசியதை கேட்டதும் 'மீனா, அப்படியெல்லாம் நான் எதுவும் நினைக்கலீங்க...' என்று சாதாரணமாக சொன்னார் கமல் சாரும். ஒருவேளை லேசான சந்தேகம் கமல் மனதில் இருந்திருந்தாலும் அதை பக்குவமாக தீர்த்து வைத்து விட்டார் ரஜினி. பெரியவர்களும், அவர்களுடைய அனுபவமும் எப்போதுமே தனிதான் என்பதை புரிந்து கொண்டேன்.

    நான் அடிக்கடி பேசியதை வைத்தே ஒரு வேளை கமல் மனதிலும் அப்படி ஒரு தவறான புரிதல் இருக்கலாமோ என்று நினைத்து அதையும் கிளியர் செய்துவிட்டார். அதுதான் பெரியவரின் அனுபவம்.

    அதன்பிறகு பேச்சு திசை மாறியது. அது ரஜினி, கமல் முதல் சிம்பு வரை மொத்த சினிமா நட்சத்திரங்களும் சிங்கப்பூரில் ஒன்றாக திரண்டு இருந்த நேரம். நடிகர் சங்க நிதிக்காக சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு நடிகர் சங்க தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தார்கள். மொத்த நடிகர்-நடிகைகளும் வந்து விட்டார்கள். மூன்று பேரும் மும்மூர்த்திகள் போல் செயல்பட்டார்கள். குடும்ப திருவிழா போல் குதூகலமாக இருந்தது. நடிகைகள் எல்லோரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். எங்களை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே வெளியில் திரண்டு நிற்கும் கலை நிகழ்ச்சிக்கு புறப்படும் போது அந்த கூட்டத்தை சமாளித்து செல்வது எளிதானதல்ல.

    அப்போது அந்த மும்மூர்த்திகளும் தான் பவுன்சர்கள் போல் எங்களை பாதுகாப்பார்கள். ம்ம்... சீக்கிரம் வாங்க.. வாங்க.. என்று விரட்டுவார்கள். எங்கள் அருகில் ஒருவரை கூட நெருங்க விடாமல் பஸ்சுக்குள் ஏற்றி விடுவார்கள். அதேபோல் தான் நிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும் அவர்கள் கண்பார்வைக்குள் எங்களை வைத்திருப்பார்கள்.

    சங்கவி, ரம்பா, நான் மூவரும் தான் ஒரு கூட்டணி. ஷாப்பிங் செல்லும் போதும் பெரும்பாலும் ஒன்றாகவே செல்வோம். சங்கவியின் அம்மாவும், என் அம்மாவும் நெருங்கிய தோழிகள். எங்களைப் போல் அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்று வருவார்கள்.

    ஒரு நாள் ஷாப்பிங் சென்ற போது என் கையில் இருந்த டாலர்கள் தீர்ந்து விட்டன. நம் நாட்டு ரூபாய் என்னிடம் இருந்தது. ஆனால் அதை டாலராக மாற்ற எங்கே செல்வது என்று தெரியவில்லை.

    அப்போது சங்கவி தான் தனக்கு தெரியும் என்று அழைத்து சென்று டாலர் மாற்றி தந்தார். அது முதல் எங்கள் நட்பு மேலும் நெருக்கமானது.

    பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஷாப்பிங் அனுபவமே தனி. நான் தோழிகளோடு சென்றாலும் சரி. தனியாக சென்றாலும் சரி கடைகளில் ஷூட்டிங்குக்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்ன புதிதாக வந்துள்ளன என்பதை தான் தேடுவேன்.



     மேக்கப் சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் புதிதாக எது கண்ணில் பட்டாலும் உடனே வாங்கி விடுவேன்.

    எங்கள் தேடல் இப்படியென்றால் எங்க அம்மா தேடல் வேறு வகையாக இருக்கும். அதாவது சமையல் செய்வதற்கு உதவும் பொருட்களை... அதாவது ஜூசர், காய்கறி நறுக்குவது என்று சமையறைக்கு தேவையான புது, புது மாடல்களில் என்னென்ன பொருட்கள் அறிமுகமாகி இருந்தாலும் அவற்றை எல்லாம் வாங்கி வருவார்கள்.

    ஏன்னா, ஷூட்டிங் செல்லும் இடங்களுக்கு அதையெல்லாம் கையோடு எடுத்து வருவாங்க... அப்பதானே எனக்கு விதவிதமாக செய்து தர முடியும்...!

    சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட அந்த கலை நிகழ்ச்சிகள் போல் இதுவரை கலை நிகழ்ச்சிகள் எங்கும் நடக்கவில்லை. இனி அந்த மாதிரி நடத்தவும் முடியாது.

    அன்று எல்லோரும் ஒரு குடும்பம் போல் பழகினோம். எல்லோரிடமும் சுய நலத்தை தாண்டிய பொது நலமும் இருந்தது.

    அதனால் தான் கமல், ரஜினி முதல் சிம்பு வரை அத்தனை பேரும் ஒரே குடையின் கீழ் திரண்டு இருந்தார்கள். இனி அப்படி எல்லோரும் திரளுவார்களா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல மனத்தை விட பணமே இப்போது முக்கியமாகி விட்டது.

    அப்போது ஓய்வு நேரங்களில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவோம். அப்படிப்பட்ட சந்தோச காலங்கள் மீண்டும் வரப்போவதில்லை. நடிகர், நடிகைகளுக்கு அந்த காலம் ஒரு வசந்த காலம் என்றே சொல்ல வேண்டும்.

    இந்த கலை நிகழ்ச்சிக்குத் தான் சென்னையில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் போய் சேர்ந்ததும் ரஜினி சார் தனது பெட்டி சாவியை காணாமல் தவித்தார். பின்னர் வீட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பெட்டியில் ஒரு அறையில் தான் சாவி வைத்திருப்பதை சொன்னார்கள். அதன் பிறகு தான் பெட்டியை திறந்து நிகழ்ச்சிக்கு தயாரானார். இப்படி எவ்வளவோ நினைவுகள், சம்பவங்கள். மீண்டும் ஒரு சம்பவத்தோடு அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன்.

    சேவையின் மூலம் கிடைக்கும் நிம்மதியும், சந்தோசமும் ரொம்ப அமைதியானது. நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் முழுநேரமும் பொதுசேவை செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. இப்போதும் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். எனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எனக்கு தெரிந்த பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு செல்வன். அவர்களுக்கு தேவையான துணிமணிகள், பொருட்கள் வாங்கி கொடுப்பது, உணவு வழங்குவது போன்ற என்னால் முடிந்த உதவிகளை தவறாமல் செய்கிறேன். பொது சேவை என்பது மன நிறைவை தருவது. முழுநேரமும் பொது சேவையில் ஈடுபடுவதற்கு இன்னும் நிறைய நாட்கள் ஆகலாம்.

    (தொடரும்...)

    • ராமாயணத்தினை படிக்கும்போது பல நிகழ்வுகளை பாபா நேரில் பார்த்ததை சொல்வார்.
    • ராபர்ட் ஆல்பர்ட் என்ற விஞ்ஞானி பாபாவின் தீவிர பக்தராகி பாபா ராமாஸ் என்று அழைக்கப்பட்டார்.

    நம் இந்தியாவுக்கு உரித்தான பல பெருமைகளில் ஒன்று எண்ணற்ற சித்தர்களும், ஞானிகளும் இங்கே தோன்றியுள்ளனர் என்பதுதான். நம் பக்கத்தில் நாம் சித்தர்கள் என்கிறோம். வட இந்தியாவில் பாபாஜி, மகராஜ் என்கின்றனர். ஸ்ரீ சாய் பாபா, சாய் மகராஜ் ஜி என்பதெல்லாம் வட இந்தியாவில் அவர்கள் முறைப்படி அழைத்து வந்த திருப்பெயர்கள்தான்.

    அந்த வகையில் 'நீம் கரோலி பாபா' வைப் பற்றி இன்று பார்ப்போமா?

    எளிய தோற்றத்துடன் ஒரு கட்டம் போட்ட போர்வையுடன் புகைப்படங்களில் இவரை அநேகர் தரிசனம் செய்திருப்பார்கள்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் 1900-ல் பிரோசாபாத் என்ற இடத்தில் பிறந்தார். இயற்பெயர் லஷ்மண் நாராயண் ஷர்மா. மிக வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதில் அவருக்கு திருமணம் செய்கின்றனர். அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தந்தையோ தேடி அலைந்து அழைத்து வந்தார். பின் அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் பிறந்தனர்.

    மீண்டும் 1958-ம் ஆண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறினார். டிக்கெட் இல்லாமல் ரெயிலில் அமர்ந்தார். டிக்கெட் இல்லாத அவரை டிக்கெட் பரிசோதகர் வழியில் இறக்கி விட்டார். அவர் இறங்கிய இடம் 'நீம் கரோலி' என்ற கிராமம். பாபாவோ அமைதியாய் இறங்கி ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார். ஏனோ ரெயிலினை மறுபடியும் ஓட்ட முடியவில்லை. எல்லா முயற்சி செய்தும் ரெயில் நகரவில்லை.

    அனைவரும் இவரை இறக்கி விட்டதாலேயே ரெயில் நகரவில்லை என்று கூற டிக்கெட் பரிசோதகர் பாபாவினை ஒரு மகான் என்று உணர்ந்து மீண்டும் ரெயிலில் அமருமாறு பாபாவிடம் பணிவோடு வேண்டினார். பாபா இரண்டு நிபந்தனைகளை விதித்தார். ஒன்று நீம் கரோலி கிராமத்தில் ரெயில் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும். ஏனெனில் அக்கிராம மக்கள் ரெயில் நிலையத்திற்காக வெகு தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்தது. இரண்டாவது நிபந்தனை, துறவிகளை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதாகும். பிறகு பாபா ரெயிலில் அமர ரெயில் இயல்பாய் ஓடியது. அன்று முதல் இவர் "நீம் கரோலி பாபா" என்று அழைக்கப்பட்டார்.

    வட இந்தியா முழுவதும் சென்றார். 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டன. அவர் தங்கியிருந்த கடைசி பத்தாண்டுகள் கைஞ்சிதாம் ஆசிரமம் ஆகியது. 1964-ல் அனுமன்ஜி கோவிலும் கட்டப்பட்டது. இந்த ஆசிரமமும் இக்கோவிலும் உலகெங்கிலும் உள்ள ஆன்மீக நாட்டம் உள்ள மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கின்றது.

    நீம் கரோலி பாபா 1973-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு தன் பூத உடலை விட்டு விட்டார். ஆனால் அவர் உலகெங்கும் பரவி உள்ளார்.

    'கடவுள் பக்தியே அவரது உயர்ந்த தத்துவம்'

    பல பெயர்களால் பல பகுதிகளில் அவர் அறியப்பட்டாலும் அவர் கூறியவாறே அவர் 'யாருமில்லை' என்பது போல் எத்தனை சத்தம் இருந்தாலும் அவர் ஆழ்ந்த தியானத்தில் வேறொரு உலகில் இருப்பார். அதன் காரணமாகவே அவர் உடன் இருப்பவர்கள் ஒரு ஆனந்த மயமான அமைதியில் இருந்தனர். அங்கு வந்து செல்பவர்களுக்கு இன்றும் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுகின்றது.

    'ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி' 1976-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் சக உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது. இவர் 'மிராக்கிள் பாபா' என்று அழைக்கப்படும் நீம் கரோலி பாபா பற்றி கேள்விபட்டு 1974-ம் ஆண்டு அவ ரது ஆசிரமம் வந்தார். 1973-ம் ஆண்டு பாபா மகா சமாதி அடைந்ததனை அறிந்து சற்று மனம் வேதனைப்பட்டாலும் அவர் அங்கே தங்கி மற்ற குருமார்களின் சீடர்களின் வழி காட்டுதல்படி பிரார்த்தனை மற்றும் தியான பயிற்சியில் ஈடுபட்டார்.

    இதனால் அவர் மனதில் அமைதியும், தெளிவும் பிறந்தது. அவர் தனது வியாபாரத்தில் குழப்பமும், முன்னேற்றமும் இல்லாத நிலையில்தான் அங்கு வந்தார். பிறகு சில தினங்களில் ஆசிரமத்தினை விட்டு கிளம்பியபோது அவருக்கு ஒரு ஆப்பிள் பிரசாதமாக கொடுக்கப்பட்டது. ஆசிரமத்திற்கு வரும் அனைவருக்கும் ஆப்பிள்தான் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. பாபாவிற்கு ஆப்பிள் பிடிக்குமாம். இதனைக் கொண்டே ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஆப்பிள்' நிறுவனத்தினை தொடங்கினார்.

     

    இதே போன்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர் பர்க் அவரது வியாபாரத்தில் சில பிரச்சினைகளால் கஷ்டப்பட்டபோது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சை சந்தித்துள்ளார். அவரது அறிவுரையின் பெயரில் இந்தியா வந்து நீம் கரோலி பாபாவின் ஆசிரமம் சென்று சில தினங்கள் தங்கி தியானம் செய்து சென்றார். அவர் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியும், மாற்றமும் ஏற்பட்டது. இதனை அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

     நீம் கரோலி பாபா தீவிர ஆஞ்சநேய பக்தர்

    ராமாயணத்தினை படிக்கும்போது பல நிகழ்வுகளை பாபா நேரில் பார்த்ததை சொல்வார். நிறைய ஆஞ்சநேயரினைப்பற்றி குறிப்பிடுவார். அநேகர் இவரை ஆஞ்சநேயர் அவதாரமாகவே குறிப்பிடுகின்றனர்.

    எந்நேரமும் 'ராம்... ராம்....' என்று சொல்லியபடியே இருப்பார்.

    ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருப்பவர். ஒரு கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும், தான் இருக்கும் இடத்திலும் ஒரே நேரத்தில் இருந்தவர்.

    ராபர்ட் ஆல்பர்ட் என்ற விஞ்ஞானி பாபாவின் தீவிர பக்தராகி பாபா ராமாஸ் என்று அழைக்கப்பட்டார்.

     

    நீம் கரோலி பாபாவின் ஓர் ஆசிரமம் இமயமலை அருகில் உள்ள 'கைஞ்சி டாம்' என்பது. மற்றொரு ஆசிரமம் 'பிருந்தா வன்' இடத்தில் உள்ளது. செல்ல விரும்புபவர்கள் ஆசிரமத்தினை தொடர்பு கொண்டு சீதோஷண நிலை, இட வசதி இவைகளை அறிந்து செல்வது நல்லது.

    ஆசிரம விதிமுறைகள்படி பொதுவில் வீடியோ உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அது மிகப்புனிதமான தியான இடம். சுற்றுலா தலம் அல்ல.

    நீம் கரோலி பாபா தன் தியானத்தினை அதிக காலம் குஜராத்திலும் மேற்கொண்டவர். பிருந்தாவனத்தில் இவர் பெயரில் உருவாகிய கோவில்கள் ஏராளம். பிருந்தா வனத்தில் நீம் கரோலி பாபாவின் சமாதி கோவிலும் உள்ளது.

    லேரி கிராண்ட் என்ற மருத்துவர் தன் மனைவியுடன் இந்தியா வருகிறார். மனைவி சொன்னதினாலே வருகிறார். இந்தியா வந்ததும் அவரது மனைவி இமயமலை சென்று நீம் கரோலி பாபாவினை தரிசிக்க வேண்டும் என்கிறார். இவர் விஞ்ஞானம் படித்தவர் அல்லவா? அவ்வளவு உயர்வான மகானா அவர்? அப்படியானால் இந்த இடத்தில் அவரால் வானவில்லை தோற்றுவிக்க முடியுமா? என தமாஷாக மனைவியிடம் வேண்டினார். சில நிமிடங்களில் அங்குள்ள ஏரி பகுதியின் மேல் ஒரு அழகான வானவில் தோன்றியது. விஞ்ஞானம் மெய்ஞானத்தினைக் கண்டு சற்று அரண்டு போனது எனலாம். இருவரும் 'கைஞ்சி டாம்' ஆசிரமம் சென்றனர்.

    அங்கு பாபாவின் கால்கள் லேரி கிராண்ட் மேல்பட்டது. அவர் அப்போது அதனை பெறுதற்கரிய ஆசிர்வாதம் என்பதனை உணர்ந்திருக்க முடியாது. பாபா அவரைப் பார்த்து 'நீ துறவறம் மேற்கொள்ளாதே பல நோய்களை தடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடு' என்றார். அவரும் நாடு திரும்பி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல தொற்று நோய், பூஞ்சை இவற்றிற்கான இவரது மருந்து ஆராய்ச்சிகள் மனித சமுதாயத்திற்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம்.

    11 வயதில் வீட்டை விட்டு சென்ற பாபா சுமார் 14 வருடங்கள் யாரும் அறியாமல் குஜராத் பகுதியில் தியானம், தவம் என இருந்தவர். அவரது அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் வீடு திரும்பினாலும் அவர் மனம் 'ராம்... ராம்...' என்றே சொல்லிக் கொண்டிருந்தது. பின்பு அவரது ஆன்மீக பாதை அவரைத் தேடி வந்து விட்டது.

    அவரது 'ராம்... ராம்...' குரல் ஒலிப்பதிவினை கடும் சோதனைகளுக்குப் பிறகே அவரது பக்தர்களால் திரும்ப பெற முடிந்தது. அதனை நீங்கள் 'கூகுள்' மூலம் 'யூடியூப்'பில் கேட்கலாம்.

     

    கமலி ஸ்ரீபால்

    ரிச்சர்ட் ஆல்பர்ட் என்பவர் அமெரிக்காவில் மிக உயர்ந்த ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். சில போதைப் பொருட்களையும் பற்றி ஆராய்ச்சி செய்தவர். 1967-ம் ஆண்டு இந்தியா வந்த அவருக்கு நீம் கரோலி பாபாவுடன் ஏற்பட்ட அனுபவங்களால் தன்னை ஆன்மீக பாதையில் முழுமையாய் மாற்றிக் கொண்டவர். இவர் 'ராம தாஸ் பாபா' என்றே அறியப்படுகின்றார். அமெரிக்காவில் நீம் கரோலி பாபாவின் ஆசிரமத்தினை அமைத்தவர். இப்படி எண்ணற்ற நிகழ்வுகளை மேலும் விரிவாக கூறிக் கொண்டும், எழுதவும் செய்யலாம். மிக உயர் ஆத்மாக்கள் மக்களை நன்வழியில் திரும்பச் செய்பவர்களே.

    'நீம் கரோலி பாபா' வினை மனதால் வழிபட்டாலும், அனுமான் சாலிஸ் படிக்கவோ, கேட்கவோ செய்வதும், ராம நாமத்தினை ஜபிப்பதும் இமயமலை ஆசிரமம் சென்று வருவதும் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன என்பது அனைவரின் ஒரு மித்த கருத்தாகவே உள்ளது.

    • பொதுநல வாழ்க்கை என்பதுகூட ஒருவிதமான தியாக வாழ்க்கைதான்.
    • நம்மாலான பனையளவு உதவி செய்ய முடியாவிட்டாலும், தினையளவுத் துன்பத்தையாவது செய்யாமல் இருப்பதும் ஒருவகை உதவிதானே!.

    பயனுள்ள வாழ்க்கையையே பண்பட்ட வாழ்க்கையாகக் கருதும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!

    இந்த உலகத்தில் நாம் மனிதராகப் பிறந்திருப்பதால் நமக்கு என்ன பயன்?; நம்மை விடுங்கள்; நமக்கு முன்னால் பிறந்தவர்களுக்கோ, அல்லது நமக்குப் பின்னால் பிறக்கப் போகிறவர்களுக்கோ நம்மால் என்ன பயன்?. சரி இதை இப்படிக் கேட்போம், இந்த பூமியில் பிறந்துள்ள நம்மால் இந்த பூமிக்குத்தான் என்ன பயன்?. இந்த மாதிரி வினாக்களை அடுக்கிக்கொண்டே போவதனால் கேள்விக்குறிகள் நீளுமேயொழிய, அறிவார்ந்த பதில்களினால் ஆச்சரியக்குறிகள் தோன்றி முற்றுப்புள்ளி நிலைத்திடுமா?.

    இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது?; எதனால் இயங்கிக் கொண்டிருக்கிறது?; அதற்கான ஆற்றல் எங்கிருந்து பெறப்படுகிறது? என்பன போன்ற வினாக்களுக்கான விடைகளை நாம் விஞ்ஞானத்தில் புகுந்து ஆராய்ந்து பெறலாம். ஆனால் இரத்தமும் சதையுமாக மனித சமூகம் உலவிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உயிர்ப்புடன் சுழன்று கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? என்று சற்றே மானுடம் சார்ந்த முறையில் அணுகிப் பார்ப்போம். பார்த்தால் வள்ளுவப் பேராசானே வடிவான பதிலுடன் வந்து

    "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

    அதுஇன்றேல்

    மண்புக்கு மாய்வது மன்"

    என்று விடை பகர்ந்து நிற்பதை அறிந்துகொள்ளலாம். "எவ்வழி நல்லவர் ஆடவர்… அவ்வழி நல்லை வாழிய நிலனே!" என்று ஔவையாரும்கூட இக்கருத்தையே முன்மொழிந்தும் நிற்கிறார். ஆம்! இந்த உலகம் நல்லவர்களாகிய பண்பட்ட மனிதர்களையே சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது; நல்ல பண்புடை மனிதர்களின் சார்தல் அற்றுப்போகத் தொடங்கியிருந்தால் இந்த உலகம் என்றோ மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கும். எவ்வளவு உண்மையான கவிக்கூற்றுகள் பார்த்தீர்களா? .

    சிலர் அகம்பாவத்தோடு மார்தட்டிக்கொண்டு சொல்வதைக் கேட்டிருக்கலாம், " நான் மட்டும் இல்லையென்றால்…. இந்த வீட்டில் எதுவுமே இல்லை!". இந்தத் தொடரில் வரும் 'வீட்டில்' என்கிற சொல்லுக்குப் பதிலாக, 'அலுவலகத்தில்', 'நிறுவனத்தில்', 'நாட்டில்', 'சமூகத்தில்', 'உலகத்தில்' என்று எந்தச் சொல்லை வேண்டுமானாலும் மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். மனிதர் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக் குறைபாட்டிற்கேற்ப, வீடு தொடங்கி உலகம் வரை, ஆணவச் செருக்கோடுதான் உலவிக் கொண்டிருக்கிறார்கள். தான் என்கிற அகம்பாவத்தின் உச்சச் சொல்தான், "இந்த உலகில் தான் இல்லையென்றால் எதுவுமே இல்லை" என்கிற அகம்பாவம். ஆனால் உண்மையில் இந்த உலகம் ஆணவத் தன்மையற்ற பண்பட்ட மனிதர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    சுந்தர ஆவுடையப்பன்

    நாட்டில், சமூகத்தில் அடிக்கடி நடைபெறும் மோசமான குற்றங்களையும், அவலங்களையும் பார்த்தால், இன்னுமா இந்த உலகம் அழிந்துபோகாமல் இயங்கிக்கொண்டு இருக்கிறது? என்று ஆச்சரியத்தோடு சிந்திக்கத் தோன்றும். இந்தச் சிந்தனை இன்று நேற்றல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இருந்திருக்கிறது. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்கிற பாண்டிய மன்னனின் எண்ணத்தில் இந்த ஐயப்பாட்டுச் சிந்தனை எழுந்திருக்கிறது.

    இன்னும்… இவ்வளவு கொடுமைக்காரர்களின் கூடாரமாக இந்த உலகம் மாறிப்போனாலும்… இன்னும் நன்மைகள் வழங்கும் உயிர்ப்போடு இந்த உலகம் அழிந்து போகாமல் இருப்பதற்கு என்ன காரணம்?. கேள்விக்கான பதிலை வழங்குவதற்காகவே, 'உண்டால் அம்ம இவ்வுலகம்!' எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடலை வடித்துக் காட்டியுள்ளான் பெருவழுதி. சாவாமருந்தாகிய தேவாமிர்தமே கிடைத்தாலும் சுய நன்மையைக் கருதித், தான் மட்டுமே உண்ணாமல், அடுத்தவர்க்கும் கொடுத்துப் பகிர்ந்துண்ணும் பண்புடையாளர்கள், கோபமே கொள்ளாத குணவான்கள், சோம்பல் அற்றவர்கள், அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சி வாழ்பவர்கள், ஒரு செயலைச் செய்வதன்மூலம் பழியேற்படுமாயின் பரிசாக உலகமே கிடைக்குமாயினும் செய்யாதவர்கள், செய்கிற செயலுக்குப் புகழ் ஏற்படும் ஆனால் உயிரை இழக்கநேரிடும் என்றாலும் உயிர்விடத் துணியும் புகழாளர்கள், சோர்வடையாதவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் சுயநலச் சிந்தையோடு தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழும் பொதுநலத் தொண்டர்கள் ஆகிய இவர்களால் தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.

    'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்கிற ஔவையின் மூதுரைப் பாடலும்கூட, ஊரில் பல அயோக்கியர்கள் இருந்தாலும், ஒரு நல்லவன் இருந்தால் போதும்; அவனுக்காக மழை பெய்யும்; அது அடுத்தவர்களும் பயன்படும்படி ஆகும்! என்கிறது. எல்லாருக்கும் பயன்படும்படி வாழுகின்ற வாழ்க்கையே பயனுள்ள வாழ்க்கை; தனக்கு மட்டுமே பயனுள்ள வாழ்க்கை வாழ்வது என்பது சுயநல வாழ்க்கை ஆகும். பொதுநல வாழ்க்கை என்பதுகூட ஒருவிதமான தியாக வாழ்க்கைதான்.

    இந்த உலகில் வாழ்க்கை என்பது ஒருவகை தொடரோட்டம்தான். இதுவரை வாழ்ந்து, ஓடி முடித்திருப்பவர்கள் ஒருவகையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பார்கள்; அவர்கள் முடித்த இடத்திலிருந்து நம்முடைய ஓட்டம் தொடங்கப்பட வேண்டுமானால், நாம் ஒருகனம் பின்னோக்கியும் பார்க்கவேண்டும்; ஒருகனம் முன்னோக்கியும் பார்க்க வேண்டும். இந்த பூமியின் இத்தனை ஆண்டுகாலச் சுழற்சியில் எத்தனையோபேர், தங்களைத் தியாகம் செய்துகொண்டு பூமியை வளப்படுத்திச் செழுமைப் படுத்தியிருக்கலாம்; அவர்களைத் தொடர்ந்து வாழ்க்கைக் களத்தில் புகும் நாம் நமது பங்கிற்காக, யாதானும் ஓர் துரும்பையாவது கிள்ளிப்போட்டு, இந்தச் சமூகத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் செயலில் ஈடுபட வேண்டாமா?. உலகத்திற்கும் சமூக மானுடத்திற்கும் நம்மாலான பனையளவு உதவி செய்ய முடியாவிட்டாலும், தினையளவுத் துன்பத்தையாவது செய்யாமல் இருப்பதும் ஒருவகை உதவிதானே!.


    ஒரு ஜென் குருவைத் தேடி அவருடைய மடத்திற்கு ஓர் இளைஞன் சென்றான். "நான் வாழ்க்கையைப் பயனுள்ள வகையில் வாழ்ந்து வெற்றிபெற்றவனாக வாழ விரும்புகிறேன் வழிகாட்டுங்கள்!" என்று கேட்டான். " என்ன படித்திருக்கிறாய்?" குரு கேட்டார். " ஒன்றும் படிப்பறிவு இல்லை!". "சரி வித்தைகள், தொழில்கள் ஏதாவது தெரியுமா?" ஜென் குருவின் கேள்விக்கு இளைஞன் சொன்ன பதில், " அப்படி எதுவும் சிறப்பாகத் தெரியாது; கொஞ்சம் சதுரங்கம் விளையாடத் தெரியும்!. அவ்வளவுதான்".

    "ஓ! இது போதுமே!. யாரங்கே!" தனது சீடர்களில் ஒருவனை அழைத்த ஜென்குரு, ஒரு புத்த பிக்குவின் பெயரைச்சொல்லி அவரை அழைத்து வா! என்று அனுப்பினார். மடத்திற்குள் இருந்த புத்த பிக்கு, வந்த சீடனிடம் 'ஏன்? எதற்கு?' என்று எந்தக் கேள்வியும் கேட்காமல், குருவை நோக்கி வந்து சேர்ந்தார். ஜென் குரு மற்றொரு சீடரை நோக்கி, உள்ளே சென்று சதுரங்கப் பலகையையும் காய்களையும் எடுத்து வரச் சொன்னார்; வந்ததும், நடுவில் ஒரு மேஜையில், சதுரங்கப் பலகையையும் காய்களையும் வைத்து இருபுறமும் இரண்டு சேர்களைப்போட்டு, ஒரு சேரில் இளைஞனையும் மற்றொரு சேரில் அந்த புத்த பிக்குவையும் அமரச் சொன்னார் ஜென்குரு.

    இளைஞனுக்குப் புரிந்து விட்டது; நமக்குச் சதுரங்க விளையாட்டுத் தெரியுமென்று சொன்னதால் ஜென்குரு நாம் விளையாடுவதற்காக இந்த ஏற்பாடு செய்கிறார் என்று உணர்ந்துகொண்டான். எதிர்த்தாற்போல் அமர்ந்திருக்கும் புத்த பிக்குவிற்குச் சதுரங்க விளையாட்டுப் பற்றி எதுவும் தெரியாது; இந்தப் பலகையையும் காய்களையும் நாலாவதாகவோ ஐந்தாவது முறையாகவோ பார்க்கிறார் அவ்வளவுதான். ஆனாலும் குரு எதற்காக இங்கே நம்மை உட்காரச் சொல்கிறார்? என்பதைப்பற்றி எந்தக் கவலையும் உணர்வும் இன்றி அவர் அந்தச் சதுரங்கப் பலகை முன் அமர்ந்திருக்கிறார். குரு முதலில் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார்; பிக்குவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, " நீர் எனக்காக எதையும் செய்யத் துணிவீர்!; உயிரைவிடச் சொன்னாலும் விட்டுவிடத் தயாராய் இருப்பீர்! சதுரங்க ஆட்டத்தில் தோற்றால் சிரச்சேதம் உறுதி!; அதே நேரத்தில் சொர்க்கமும் உறுதி!" என்று சொன்னார். இளைஞனைப் பார்த்து, " கவனமாக விளையாடு இளைஞனே! தோற்றால் தலை துண்டிக்கப்படும்!" என்று அவனிடமும் ஆட்ட விதிமுறை கூறினார் குரு.

    ஆட்டம் தொடங்கியது; இளைஞன் தனக்குத் தெரிந்ததைக்கொண்டு ஆடத்தொடங்கினான். பிக்குவோ சதுரங்கம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றாலும், எந்தப் பதட்டமுமின்றி ஆட்டத்தை ஆரப்பித்தார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, புத்தபிக்குவுக்கு ஆடத்தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட இளைஞன், அவரைத் தோற்கடிக்கும் உத்வேகத்தோடு ஆட ஆரம்பித்தான். ஆனாலும், தான் தோற்றுவிடுவோம் என்கிற அச்சமோ, தோற்றால் தலை துண்டிக்கப்பட்டுவிடும் என்கிற கவலையோ சிறிதுமின்றிச் சாந்தமாக ஆடிக்கொண்டிருந்த பிக்குவைப் பார்த்து மனம் மாறினான் இளைஞன். மரணம் நெருங்குகிறது என்பதைத் துல்லியமாக அறிந்திருந்தும், ஞானக்களை மாறாமல் ஆடிக்கொண்டிருக்கும் இவர் சாக வேண்டுமா? எந்த ஆதரவும் இல்லாமல், இறந்தால் வாழ்வில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்கிற நிலையில் இருக்கிற நாம் செத்துப்போனால் என்ன நட்டம் வந்துவிடப்போகிறது? என்று யோசித்தான். ஆட்டத்தைக் கண்ணா பிண்ணா என ஆடத்தோடங்கினான்.

    இளைஞன் தோற்றுப்போவதற்கான ஆட்டத்தைத் தொடங்கியிருப்பதை உணர்ந்த ஜென்குரு, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், சதுரங்கப் பலகையைக் கவிழ்த்துவிட்டு, ஆட்டம் முடிந்தது; யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என்று அறிவித்தார். "இளைஞனே! நீ பயனுள்ள வாழ்க்கையைக் கற்றுக்கொண்டாய். பயனுள்ள வாழ்க்கை என்பது, நம்மிடமுள்ள எந்த மதிப்புடைய பொருளையும் அடுத்தவர் நலத்திற்காக இழக்கத் துணியும் தியாக வாழ்க்கை. சலனப்படாமல் குருவார்த்தைக்காக உயிரையும் இழக்கத் துணிந்துவிட்ட பிக்குவிற்காக இரங்கி உன்னுயிரை இழக்க இப்போது துணிந்துவிட்டாய். தியாகத்தை இப்போது நீ தெரிந்துகொண்டாய். கொஞ்சகாலம் என்னோடு இரு!" என்று இளைஞனைப் பார்த்துக் கூறினார் ஜென்குரு.

    தியாக வாழ்வே திறமான வாழ்வு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒழுக்கமும் உயிருமே மிக உயர்ந்த மதிப்புமிக்க பொருண்மைகள். ஒழுக்கத்தோடு வாழ்வது, தன்னுயிர் இழக்கும் தருணம் வந்தாலும், பிற இன்னுயிர்க்காகப் பாடுபடுவது இதுவே பயனுள்ள வாழ்க்கை. தற்பயன் கருதாமல், அடுத்தவர்க்கு உதவும் நற்பயன் கருதுவதே பயனுள்ள வாழ்க்கை.

    வாழ்க்கை நமக்கே நமக்கானதுதான்; நமக்கான வாழ்க்கையை நாம்தான் வாழ்ந்தாக வேண்டும். ஆனாலும் நான் என்பதில் நாமும் இருக்கிறது; நம்முடைய வாழ்வியலில் இந்த உலகமும் கலந்திருக்கிறது.அடுத்தவர்க்குப் பயனுள்ள வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கும்போது நமக்கான பயனும் அதில் அடங்கிப் போகிறது.

    தொடர்புக்கு 943190098

    • ஆளவருவார் அவர் வரும் நாளிது காண் எனக் கணித்து, மன்னர்க்குப் புரோகிதன் உரைத்தனன்.
    • பூவண்டனார் மொழி கேட்டுப்பொங்கி எழுந்தான் மன்னன்.

    திருவிதாங்கூரை அப்போது சுவாதித் திருநாள் மன்னர் (1829-1847) ஆண்டு வந்தார். சங்கீத சிரோன்மணிகளுக்கு இவருடைய ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாகவே விளங்கிற்று. இம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் பிற மன்னர்களை காட்டிலும் ஏராளமாக பணம் செலவு செய்யப்பட்டு, திருமாடம்பு, ஹிரண்ய கர்ப்பதானம் எனப் பல்வேறு வைதீக சடங்குகள் நடத்தப்பட்டன. கொல்லம் வருடம் 1009-ம் ஆண்டு தை 6-ம் நாள் ஹிரண்ய கர்ப்பதானமாக ரூ.27236 செலவிடப்பட்டது. அது முடிந்து, ஸ்ரீபத்மநாபதாச பாலராமவர்ம குலசேகரப்பெருமாள் எனப் பெயர் பெற்று தை 7-ம் நாள் படியேற்றம் நடந்ததில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் செலவாயிற்று. தனது தாயாருக்குப் பாவ பரிகாரத்திற்காக சர்வ பிராயசித்தம் செய்தபோது 1009 பசுக்கள் தானம் கொடுக்கப்பட்டன. தானம் தட்சணை முதலிய வகைகளில் அன்றைய தினம் மட்டும் 1,18,108 ¼ பணம் செலவிடப்பட்டது.

    இது தவிர கோவில்களுக்கு ஏராளமான அளவில் பணமும், விலை மதிப்புள்ள பொருட்களும் அளிக்கப்பட்டன. மன்னரின் இச்செய்கைகள் கோவிலை அண்டியிருந்த மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தன. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் அல்லல்கள் பொருட்படுத்தப்படாமலேயே இருந்தன. பெரும்பான்மையான மக்களின் நலனைப் புறக்கணித்து மேட்டுக்குடியினர் சிலரின் சுகபோக வாழ்விற்காக ஆட்சி செய்து வந்த திருவிதாங்கூர் மன்னனை சுவாமிகள் வெறுத்தார். முறையற்ற செய்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த மன்னனை "அனந்த நீசன்"" என்று சாடினார். ஆளும் வர்க்கத்தின் அராஜக அரசியலுக்கு எதிராக வைகுண்ட சுவாமிகள் ஓர் அமைதிப் புரட்சியை அரங்கேற்றினார். "அவன் பட்டத்தைப் பறித்திடுவேன், கொட்டிக் குலைத்திடுவேன்" என்று சூளுரைத்தார். இதையெல்லாம் கண்ணுற்ற ஓங்கு சாதியினர் வெகுண்டெழுந்தனர். வைகுண்ட சுவாமிகளை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.

    சுவாமிகளை பெருமைப்படுத்துவதாக கூறி மருந்துவாழ் மலையில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, உணவில் நஞ்சு கலந்து அளித்தனர். தன்னைக் கொல்லவே வஞ்சமும் சூழ்ச்சியுமாக விருந்து நடைபெறுகிறது என அறிந்திருந்தும், நச்சு உணவை மிக்க மகிழ்ச்சியுடன் உண்டார் சுவாமிகள். கடலினுள் மூன்று நாட்களையே கழித்த வைகுண்ட சுவாமியை நச்சுணவு ஒன்றும் செய்து விடவில்லை. ஓங்கு சாதியாரின் சதியிலிருந்து எளிதாக தப்பினார். தங்கள் முயற்சியில் தோல்வியுற்ற ஓங்குசாதி மக்கள் மனம் வெதும்பினர். எவ்வாறேனும் வைகுண்டரை கொன்றுவிட வேண்டும் எனத் தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    வைகுண்ட சுவாமியின் இயக்கம் பற்றியும், புரட்சி முழக்கம் பற்றியும் ஏற்கனவே பலமுறை மன்னனிடம் மேட்டுக்குடியினர் முறையிட்டிருந்தனர். மன்னர் ஒரு சமயம் சுசீந்திரம் வந்திருந்தபோது, அங்குள்ள கோயில் மண்டப அரங்கில் விசாரணை நடத்தினார். "நமக்கே உரியதாக இருந்த நம்முடைய நாடு. தற்போது ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குள் ஆகிவிட்டது. எனினும், நம் பேச்சுக்கு மறு சொல் நமது நாட்டில் இல்லாது இருந்து வருகிறது. இப்படியிருக்கும் வேளையில், இப்பூமியில் நமக்கு எதிரியாக யாராவது தோன்றியுள்ளனரா? என ஆய்ந்து விசாரித்துச் சொல்லும்" என அமைச்சரை வினவினார்.

    நமக்கு இறையிறுத்து நாடூழியங்கள் செய்யும்

    குமுக்காயினம் பெருத்த கூண்ட சாணாரினத்தில்

    வைகுண்டமாக வந்து பிறந்தோம் என்று

    மெய்கொண்ட பூமியெல்லாம் வேறு ஒருவர் ஆளாமல்

    நான்தான் முடிசூடி நாடு கட்டி ஆள்வேன் என

    தான் தானுரை பகர்ந்து சாதிபலதும் வருத்தி

    ஒரு தலத்தில் ஊட்டுவித்தானுற்ற நீரானதையும்

    அருகிருக்குஞ் சாணார்க்கு அதிக விதி தோணுதுகாண்

    ஆகாத பொல்லாரை அழித்துப்போடுவேன் என்றும்,

    சாகாவரங்கள் சாணார்க்கு ஈவேன் என்றும்

    சொல்லியிருக்கிறான் சுவாமி வைகுண்டமென்று

    தொல்லுலகில் இந்த சொல் கேட்குது.

    என வைகுண்டரை பற்றி மன்னனிடம் குற்றம் சாட்டினான். அம்மொழி கேட்டு, மன்னன் "எல்லோரிலும் தாழ்ந்த சாதியில் உள்ள ஒருவன் கூறுவானோ இம்மொழி; இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது" என உரைத்துப் புரோகிதனிடம் "இந்த தர்ம ராச்சியத்தில் எனக்கு எதிரி யாராவது உள்ளனரா பார்! எனக் கேட்டான்.

    மனுவாய்ப் பிறந்து வைகுண்டம் என்று சொல்லி

    தனுவையடக்கி தவசுமிக இருந்து

    நல்லோரையெல்லாம் நாடிமிக எடுத்து

    ஆளவருவார் அவர் வரும் நாளிது காண் எனக் கணித்து, மன்னர்க்குப் புரோகிதன் உரைத்தனன். அதனை கேட்ட மன்னன், "சோதிரியே! நீ சொன்னது யாவும் உண்மையானவையாக இருப்பினும் அவர் (விஷ்ணு) வந்திருக்கும் இனங்கள் என்ன? எனக் கேட்கையில், புரோகிதன்.

    "இன்ன வகை சாதியிலே இவர் வருவார் எனவே

    சொன்னகுறி வைத்து இயக்குது காண் என் மனங்கண்

    தர்மம் கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால்

    பொறுமை குலமாயிருக்கும் பெரிய வழியாய் இருக்கும்

    நம்மாலே சொல்லி நவிலக்கூடாது.

    எனக் கூறினான். இது கேட்டு மன்னன் மறுப்புரைத்தான்.


    அப்படித்தான் ஆனால் ஆதிமகா விட்டுணுவும்

    இப்படியே வந்து பிறக்க வேணுமென்றால்

    போத்தி நம்பூதிரி பிராமண சூத்திர குலத்தில்

    பிறக்காமல் இந்தப் பிறர் தீண்டாச் சாண் குலத்தில்

    பிறக்க வருவாரோ பெரிய நாராயணரும்

    சும்மா இந்த சாணான் சுவாமி என சமைந்ததெல்லாம்

    பம்மாத்தாய்க் காணுது பராக்கிரம மந்திரியே

    இப்போது ஓர் நொடியில் இந்த சாணான்தனையும்

    மெய்யாக கொண்டு விட வேணும் எந்தன்முன்னே"

    என அமைச்சரை ஏவினான்.

    அமைச்சரை மன்னன் பணித்தபோது, அங்கிருந்த ஆயிடையர் வழித்தோன்றலாகிய பூவண்டர் எழுந்துரைத்தார்.

    "சாணான் குலத்தில் மாயன்

    சார்வாரோ என்றெண்ண வேண்டாம்

    பாணனாய்த் தோன்றி நிற்பார்

    பறையனாய்த் தோன்றி நிற்பார்

    தூணெனத் தோன்றி நிற்பார்

    தோழனாய்த் தோன்றி நிற்பார்

    ஆணெனத் தோன்றி நிற்பார்

    அவர் உருகேட்டிலிரோ!

    குசவனின் குலத்தில் வந்தார்

    குறவனின் குலத்தில் வந்தார்

    மசவெனக் குலத்தில் வந்தார்

    மாடெனக் குலத்தில் வந்தார்

    வேடனின் குலத்தில் வந்தார்

    விசுவெனக் குலத்தில் வந்தார்

    அசுவெனக் குலத்தில் வந்தார்

    அவர் உரு கேட்டிலிரோ!

    இவ்விடந்தானாய் மேவி இருப்பவர்க்கெந்த சாதி

    அவ்விட மாகாது என்று அவர் தள்ள மாட்டாரையா

    செவ்விட மாலோன் சூட்சம் செப்பிடத் தொலையாதையா"

    எனக் கூறியதும் கோபமடைந்த மன்னன், "மன்றலத்தோர்க்கு ஏற்காத வார்த்தையை உரைத்த இவனை பிடித்து அடையுங்கள்" எனக் கூறி மேலுரை மொழிந்தான்.

    "நித்தமுன்னாலே லட்சம் நெடிய பொன்களிட்டு

    சத்திர சாலை தோறும் தர்மமு மளித்து நாமள்

    சித்திர திருநாள் நித்தமும் செய்கிற குலத்தைத் தள்ளி

    நித்தியம் வேலை செய்யும் எழில்குலம் புக்குவாரோ!

    பிரமனையொப்பாஞ் சாதி பிராமணக் குலத்தைத் தள்ளி

    சீரா மனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோயில்லை"

    வராகமாய் உதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டார்

    ஏதடா இந்த வார்த்தை என் முன்னே சொல்லி நின்றாய்!

    கருப்புடிச் சாணான் கையில் கைக் கூலி வேண்டிக் கொண்டு

    இப்படி மழுப்ப வந்தாயடா!"

    என வெகுண்டு மன்னன் உரைத்ததும் பூவண்டர் மறுமொழி நவின்றார்.

    ஆனையும் படையும் உந்தன் அரண்மனைக் கோவில்காலும் சேனையும் குடையும் வியாழ செல்வமும் சிறப்பு எல்லாம்

    ஏனமுமிகவே தோற்று எரிந்து நீ கரிந்து சாவாய்

    நானிதைச் சொல்ல வில்லை நாராயணர் உரைத்தார்.

    பூவண்டனார் மொழி கேட்டுப்பொங்கி எழுந்தான் மன்னன். இவனைக் கொண்டு போய் விலங்கிட்டுச் சிறை செய்" என்று கட்டளையிட்டான். மேலும், சாணான் சாமியைப் பார்க்கப் போக, சிங்கத் தண்டிகை எடுத்துவரும்படிப் பணித்தான். வைகுண்ட சுவாமியைப் பார்க்கப்போவோம் என மன்னன் சொன்னதும், யார்க்கு இது ஏற்கும் சாணான் அவனி டம் போவதென்ன! அவனைக் கைது செய்து கொண்டுவர சாஸ்திரி கடிகனை அனுப்பும் எனச் சொன்னதும், 'சுவாமி என்றுரைத்த சாணானைக் கட்டி என் முன்னே கட்டுடன் கொண்டு வருக' என மன்னன் ஏவலர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் செய்தது என்ன? அடுத்த தொடரில் பார்ப்போம்....

    • பழ வகைகளில் அத்திப்பழம் சிறந்த அளவு கால்சியம் சத்தை கொடுக்கும்.
    • நோய் எதிர்ப்பு ஆற்றலை ஒரு உடலில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு பயறு வகை உணவுகள் அவசியம்.

    பருவுடல் என்று எடுத்து கொண்டால் அதில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நமது எலும்புகளுக்கு தான். நாம் சாதாரணமாக பேசுவது நமது உடலில் கால்சியம் குறைபாடு என்றால், உடனே நமது நினைவுக்கு வருவது எலும்புகள்.

    கால்சியம் என்பது நம் எலும்புகளுக்கு பலத்தை கொடுப்பதாகும். நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் கெடாமல் இருக்க மற்றும் உடல் சோர்வை போக்கவும் கால்சியம் மிகவும் அவசியமாகும். இந்த கால்சியம் நமது உடலில் பலத்தை கூட்ட வேண்டும் என்றால், வைட்டமின் டி சத்து தேவைப்படும். இந்த வைட்டமின் டி சத்தை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் சூரிய ஓளியில் 15 முதல் 20 நிமிடம் நின்றாலே நமக்கு இயற்கையாகவே வைட்டமின் டி சத்து கிடைத்துவிடும்.

    இல்லையென்றால் இந்த கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு, நமக்கு இயற்கையாகவே கூட எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, சிறுவயதில் இருந்தே இதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

    குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நேரம், குழந்தை பிறப்புக்கு பிறகு தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டுவதால் கூட கால்சியம் பலம் குறையும். இதற்கு சூரிய ஒளி ஒன்றே போதுமானது. மருத்துவர்களின் ஆலோசனை என்பது நமக்கு தினமும் 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவைப்படும்.

    பாலில் கால்சியம் சத்து உள்ளது என்றாலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி முடிவு செய்யலாம். உடற்பயிற்சி, நடை பயிற்சி இதற்கு சிறந்த பலனை கொடுக்கும். உணவாக மோர், பழச்சாறு, கீரை போன்றவை தினசரி எடுத்து கொண்டால் நமக்கு தேவையான அளவு கால்சியம் சத்து கிடைக்கும்.

     

    பழ வகைகளில் அத்திப்பழம் சிறந்த அளவு கால்சியம் சத்தை கொடுக்கும். அதே போல கொய்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் இவைகளிலும் தேவையான அளவு சத்து கிடைக்கும். கீரை வகைகளில் கால்சியம் சத்து நிறைய கிடைக்கும். சிறுதானியங்களில் ராகியில் கால்சியம் சத்து அதகிம் கிடைக்கும். அது போல வெண்டைக்காய், வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகளை தினசரி உணவிலே எடுக்கும்போது கால்சியம் சத்து கிடைக்கும்.

    ஒரு மனிதர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் காலை அதிக உணவும், மதியம் மற்றும் இரவு தேவையான அளவு உணவு எடுத்துக் கொண்டால் போதுமானது. அதே போல நமக்கு இயற்கையாக மிக குறைந்த விலையில் மிக அதிகமான பலனை கொடுக்கக் கூடிய பிரண்டையில் எலும்புகளுக்கு பலம் மட்டும் இல்லாமல், கை, கால், இடுப்பு மற்றும் மூட்டு வலியும் வராமல் தடுக்கும்.

     

    அதே போல முருங்கை கீரையை வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ எடுத்து கொள்ளும்போது அது சிறந்த பலன்களை கொடுக்கும்.

    குறிப்பாக நமது தினசரி உணவிலே ஆறு சுவைகளுக்கும் முக்கியத்தும் கொடுத்து அதே நேரம் உணவிலே அளவு முறையும் கடைப்பிடிக்க வேண்டும். அது போல தினசரி உணவிலே நாம் சேர்த்து கொள்ள வேண்டியது வாழைப்பழம். சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தவிர மற்ற அனைவரும் எடுத்து கொள்ள வேண்டிய பழம் ஆகும்.

    வாழைப்பழம் எடுத்து கொண்டால், உடல் எடை கூடும் என்ற தவறான கருத்து நிலுவுகிறது. இதை அளவோடு எடுத்து கொண்டால் நம் தினசரி ஆற்றல் என்பது 2000 கலோரி என்றால் இதில் வாழைப்பழம் மட்டும் 70 முதல் 80 கலோரி கிடைக்கும். மேலும், வாழைப்பழம் என்பது கொழுப்பு இல்லாத பழம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    அடுத்ததாக நமது தினசரி உணவிலே எடுத்து கொள்ள வேண்டியது வெங்காயம். இது நுரையீரலுக்கு பலத்தையும், ஆற்றலையும் கொடுக்கும். வைட்டமின் சி அதிகமாக இதில் இருப்பதால் பெண்களுக்கு கருத்தரிக்க ஒரு தூண்டுகோலாக அமையும்.

    இன்றைய மருத்துவ ஆய்வில் வெங்காயத்தை எடுத்துக் கொள்ளும்போது மாரடைப்பு வருவதை தடுக்கவும் முடியும் என்கிறார்கள்.

    ஏனெனில், இதில் நம் உடலுக்கு தேவயைனா மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் கிடைக்கிறது. உப்பு சத்து மற்றும் நீர் சத்தும் கிடைத்துவிடும்.

    நோய் எதிர்ப்பு ஆற்றலை ஒரு உடலில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு பயறு வகை உணவுகள் அவசியம் ஆகும். குறிப்பாக சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள், முளை கட்டிய பச்சைப் பயறு, மூக்கு கடலை போன்ற உணவுகளை எடுத்து கொள்ளும்போது நல்ல பலனை கொடுக்கும்.

    பொதுவாகவே பயறு வகைகள் கொழுப்பு சத்து குறைந்து காணக்கூடிய ஒரு தானியமாகும். இது உடலுக்கு புரத சத்தையும் கொடுக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இந்த உணவோடு தோல் நீக்கிய இஞ்சி அல்லது பூண்டு சேர்த்து எடுக்கும்போது வாய்வு கோளாறு அவதி வராது. அது போல உடல் சோர்வு அதிகமாக இருந்தால், நாம் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் உடலில் இரும்பு சத்து குறைவாக உள்ளது என்று கூறுவார்கள். இதனால் நமது உடலில் வைட்டமின் சத்து குறைபாடு மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கு தினசரி உணவிலே இரும்பு சத்து உள்ள உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

    உணவில் புழுங்கல் அரிசி மற்றம் கைகுத்தல் அரிசி போன்றவை இயற்கையாகவே இரும்பு சத்தை கொடுக்கும். சிறு தானியத்தில் வரகு அரிசி இரும்பு சத்து அள்ளி தரும். முருங்கை கீரை, பாலக்கீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களில் கொய்யாப்பழம், தக்காளி, மாம்பழம், தர்பூசணி போன்றவைகளில் இருந்தும் கிடைக்கும். அதே போல கம்பு, தினை, ராகி போன்ற சிறு தானியங்களையும் உணவிலே அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக நீர் சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். தினசரி உணவிலே நீர் சத்து கொடுக்கக் கூடிய உணவுகளான பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், வெண் பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பல் துலக்கிய பிறகு ஒரு சொம்பு நீர் அருந்துவது நல்ல பலனை கொடுக்கும்.

    உடற்பயிற்சி செய்பவர்கள் நீர் அருத்திய 30 நிமிடத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்யலாம். அதே போல பொதுவாக உணவுக்கு முன்னும் பின்னும் சிறிது நேரம் கழித்து நீர் அருத்துவது உத்தமம் ஆகும். ஏனெனில், உணவு உண்ணும்போது இடையே அடிக்கடி நீர் அருந்தினால் உணவு செரிக்க வைக்கும் நொதிகள் நீர்த்து செரிமானம் சரியாக வராது. அதே நேரம் உணவு உண்ணும்போது விக்கல் வந்து விட்டால் கண்டிப்பாக நீர் எடுத்து கொள்ள வேண்டும். இரவு உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் நீர் அருந்துவது நல்லது. எனவே, நாம் தினசரி உணவை சரியான முறையிலே, அளவான முறையிலே எடுத்துக் கொண்டால் 90% உடல் ஆரோக்கியமும், மனம் ஆரோக்கியமும் கிடைக்கும்.

     

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன் போன்: 9444234348

    தினமும் 30 நிமிடம் கட்டாயமாக உடற்பயிற்சி செய்வோமேயானால் நீண்ட நாள் நோய் இன்றி வாழ முடியிம். இந்த முறையை தான் நமது முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள். நாம் இன்று பரபரப்பான வாழ்க்கை, வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் தான் நாம் இன்று சத்தான உணவு எடுத்து கொண்டாலும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் வருவதை தடுக்க முடியாமல் தவிக்கிறோம்.

    எனவே, முதலில் உணவு முறை பற்றிய ஒரு விழிப்புணர்வு நமக்கு மிகவும் அவசியமாகும். நம் அடுத்த தலைமுறைகளுக்கு நல்ல உணவு முறைகளை நாமே சிந்தித்து கொடுக்க வேண்டும். அப்போது தான் எதிர் வரும் சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ முடியும்.

    நல்ல ஆரோக்கியம் மற்றும் அறிவு, அழகுகுள்ள குழந்தைகள் பெற்றெடுக்க முடியும். இதில் பெற்றோர்களின் பங்கு அதிகமாகவும் அதே நேரம் இதை சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு வரும் சந்ததிகளுக்கும் வர வேண்டும்.

    • நித்திய கல்யாணி செடி கார்பன்-டை-ஆக்சைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது.
    • நித்திய கல்யாணி பூவில் சிறந்த ரத்த சர்க்கரை குறைவு பண்பு இருப்பதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

    நித்திய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதனை நயனதாரா, பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி, சுடுகாட்டுப்பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

    நித்திய கல்யாணியை ஆங்கிலத்தில் Periwinkle Flower என அழைப்பார்கள்.

    இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடு, மாடுகள் இதனை உட்கொள்வதில்லை.

    இதை பெரும்பாலும் அழகுக்காக தோட்ட செடியாக மட்டுமே பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் உள்ளது.

    நித்திய கல்யாணி செடி கார்பன்-டை-ஆக்சைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது. ஆகவே இதனை தாராளமாக நாம் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.

    வெறும் இரண்டு சென்டிமீட்டர் அளவு இருக்கும் இந்த மலர்கள் புற்றுநோய்க்கு தீர்வைக் கொடுக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது.

    குறிப்பாக இதற்கு சித்த மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் உள்ளது. இதன் பயன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

     

    புற்றுநோயைத் தடுக்கிறது:

    இதன் இலைகள் மற்றும் பூக்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் இது புற்றுநோய் நிலைகளுக்கு சக்தி வாய்ந்தவையாக உள்ளது. புற்றுநோய் கட்டியின் அளவை குறைக்க உதவுகிறது.

    இதில் உள்ள வின்கிரிஸ்டைன் மற்றும் வின்பிளாஸ்டைன் லுகேமியாவுக்கு பயனுள்ளதாக உள்ளது.

    இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும்.

    நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம். இது நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது.

    இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

    உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது:

    வெள்ளை நிறத்தில் இருக்கும் நித்திய கல்யாணி பூ மற்றும் இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த இலைகளின் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 மில்லி அளவு எடுத்து வரலாம்.

    நீரிழிவு கட்டுப்படும்:

    இது சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

    நீரிழிவு நோய் கப தோஷங்களின் அதிகரிப்பால் உண்டாக கூடியது.

    இதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேர்த்து வைக்கவும்.

    1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை எடுத்து கொள்ளவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து எடுக்கலாம்.

    நித்திய கல்யாணி பூவில் சிறந்த ரத்த சர்க்கரை குறைவு பண்பு இருப்பதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

    இந்த பூவின் சாறு எடுப்பதன் முலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியானது தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோசாக உடைப்பதை தடுக்கிறது.

    நித்திய கல்யாணியின் 5-6 பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.

    நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.

    ரத்த கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது:

    நித்திய கல்யாணி ரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு, டிரைகிளிசரைடுகள், எல்.டி.எல்., வி.எல்.டி.எல். போன்ற அளவுகளைக் குறைக்கிறது. இது நித்திய கல்யாணி இலைச் சாற்றில் உள்ள பிளாவனாய்டு, வின்போசெடின் ஏற்படுத்தும் ஆர்திரோஸ்க்லெரோடிக் எதிர்ப்பு நடவடிக்கையாகும்.

    சுவாச கோளாறுகளை தீர்க்கிறது:

    இது சுவாச குழாயில் இருந்து சளி படிவுகளை அகற்ற உதவுகிறது. அனைத்து வித கபத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த மலரில் இருக்கும் பெரும்பாலான உட்பொருள்கள் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி, சி.ஓ.பி.டி. இருமல் மற்றும் சளி அறிகுறிகள் போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான இறுதி தீர்வை அளிக்கிறது.

    சரும ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கிறது:

    சருமத்தை மேம்படுத்தும் பண்புகள் இதில் உள்ளது. சூரியக்கதிர்களால் ஏற்படும் ஆக்சிஜனேற்ற பிரீ ரேடிக்கல் சேதங்களுக்கு சிகிச்சையளிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.

    இதனால் சருமத்தில் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள், புள்ளிகள், கருவளையங்கள் போன்ற முதுமையின் பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. சரும பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. நித்திய கல்யாணி இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் எடுத்து மசித்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து மென்மையாக குழைத்து எடுக்கவும்.

    இதை முகத்தில் தடவி உலரவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

    முகப்பரு மற்றும் தோல் பிரச்சனை இருப்பவர்கள் மாற்றுநாளில் இதை செய்து வந்தால் தீவிரமாகாமல் தடுப்பதுடன் நோய்த்தொற்றை எதிர்த்து போராடவும் உதவும்.

     

    இயற்கை மருத்துவர் நந்தினி 9500676684

    காயங்களை குணப்படுத்தும்:

    இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் நிறைந்தவை.

    இது காயத்தை திறம்பட குணப்படுத்துகிறது. தோல் தொற்றுகளை தடுக்கிறது. அரிப்பு மற்றும் எரியும் உணர்வை தடுக்க செய்வதோடு தொற்று பரவாமலும் தடுக்கிறது. காயம் ஆற்றலை எளிதாக்குகிறது.

    மஞ்சள் மற்றும் நித்திய கல்யாணி இலைகளை பேஸ்ட் செய்து காயங்கள் மீது 2-3 முறை தடவினால் வேகமாக குணமாகும்.

    நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

    ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

    இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

    நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீழ் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.

    மாதவிடாயை ஒழுங்குப்படுத்துகிறது:

    பெண்கள் பெரும்பாலும் மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நித்திய கல்யாணி பூக்கள் இதை சரி செய்வதில் முதலிடத்தில் உள்ளது.

    மாதவிடாய் வயிறு வலி, ரத்தப்போக்கு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் சூதக வலியையும்

    குறைக்க செய்கிறது.

    காய்ச்சல் குறைய:

    காய்ச்சல் மற்றும் குளிர் சுரம் போன்றவற்றை உடனடியாக சரிசெய்யும் ஆற்றல் நித்திய கல்யாணி மலருக்கு உண்டு.

    நித்திய கல்யாணி இலைகளை அதன் தண்டோடு சேர்த்து கழுவி சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு பின் காலை, மாலை என இரண்டு வேளை குடித்து வர, காய்ச்சல் குறையும்.

    மூக்கில் வரும் ரத்தப்போக்கு மற்றும் வாய்ப்புண்களுக்கு:

    இந்த இலைகளை மாதுளை மொட்டுக்களுடன் சேர்த்து அரைத்து சாறு எடுத்து மூக்கில் செலுத்தப்படுகிறது.

    மூக்கில் ரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க, ஈறுகளில் ஏற்படும் ரத்தப்போக்குக்கும் இதை பயன்படுத்தலாம்.

    அறிவாற்றலை மேம்படுத்துகிறது:

    இந்த தாவரத்தில் உள்ள கூறுகள் மூளை செல்களின் ஆரம்ப வயதை குறைப்பதன் மூலம் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது.

    மூளை திசுக்களில் சரியான ரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது. மூளையின் பதற்றத்தை நீக்குவதால் இது மூளையின் பணியை மேம்படுத்துகிறது.

    வயிற்றுப்போக்கு:

    நித்திய கல்யாணி இலைச் சாறு வயிற்றுப்போக்கு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

    இரைப்பை குடல் உந்துவிசையைத் தடுக்கிறது. எனவே, இது வயிற்றுப்போக்கு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    நித்திய கல்யாணியின் முரண்பாடுகள்:

    அதிக அளவுகள் பயன்படுத்தினால் மிகக் குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    இதனை கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அருமருந்தான இதனை சிகிச்சைக்காக பயன்படுத்துவதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தவும்.

    • என்னால ரிசப்சனிஸ்ட் வேலை எல்லாம் சேர்த்து பார்க்க முடியாது... சாரி சார்! - பளிச்சென்று சொன்னாள்.
    • வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த திவ்யாவுக்கு, மனசு முழுக்க கவலை அப்பி கிடந்தது.

    மறுநாள் காலை...

    நெல்லை நகரம் கண் விழித்து தன் வழக்கமான பணிகளை செய்ய ஆரம்பித்த நேரம்.

    அன்றைய நாளிதழ் பார்த்த பின்பு, திவ்யா, டேவிட் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.

    நள்ளிரவில் பயங்கரம்... புதுமண தம்பதிகள் தாக்குதல்!

    ரவுடிகள் தப்பி ஓட்டம்

    போலீஸ் விசாரணை!!

    இப்படி தலைப்புடன், அன்று முன்தினம் இரவு நடந்த சம்பவம், அதைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சென்றது, கம்ப்ளைன்ட் கொடுத்தது, இப்படி நடந்த சம்பவங்களின் தொகுப்பாக அந்த செய்தி வெளியாகி இருந்தது தான் காரணம்.

    செய்தியை படித்தவுடன் இருவரும் ஒருவரை ஒருவர், மாறி மாறி பார்த்துக் கொண்டனர். பெருமாள் போலீஸ் ஸ்டேஷன் வந்தது உள்பட எல்லா விஷயங்களும், ஒன்று விடாமல் வரிக்கு வரி அப்படியே பிரசுரமாகி இருந்தது.

    'என்னடா இது? நம்மளைப் பற்றிய செய்தி இப்படியாக நாளிதழில் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லையே' என யோசித்தபடி திவ்யா டேவிட்டை பார்த்தாள்.

    "இதையெல்லாம் பெருசா எடுத்துக்காத திவ்யா! பத்திரிகைகாரங்க காற்று மாதிரி! எல்லா இடத்திலும் பூந்துருவாங்க. என்ன? நாம போற இடத்தில எல்லாம் நம்மகிட்ட இதைப் பற்றியே கேப்பாங்க. நாம கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லணும். அவ்வளவுதான். மத்தபடி, இதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதே" - அப்போதைக்கு திவ்யாவை சமாதானப்படுத்த டேவிட் இப்படி சொன்னாலும், மறுநாளே திவ்யா ஒரு பிரச்சினையை சந்திக்க வேண்டி வந்தது.

    அன்று நண்பகல் 11.30 மணி. அவள் வழக்கம் போல அலுவலகம் சென்று தன் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து, எம்.டி. அவளை அழைப்பதாக அட்டெண்டர் வந்து கூறியதும், சற்று குழப்பத்துடன் எழுந்து சென்றாள்.

    "உக்காருங்க..."-வழக்கத்தை விட சற்று கடுமையான குரலில் எம்.டி. கூறியது மனதை நெருடியது.

    இருந்தாலும், அவள் எம்.டி.யின் எதிரே இருந்த சேரில் அமர்ந்தாள். பக்கத்தில் மற்ற இரு போர்ட் ஆப் டைரக்டர்களும் அமர்ந்திருந்தனர்.

    'என்னமோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது' என்பதை திவ்யாவுக்கு அவளது உள் மனசு கூறியது. இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு எம்.டி.யின் முகத்தை பார்த்தாள்.

     

    இயக்குநர் A. வெங்கடேஷ்

    "நம்ம கம்பெனியோட ரிசப்ஷனிஸ்ட், மெட்டர்னிட்டி லீவ்ல ரெண்டு மாசம் போயிருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்?"- எம்.டி. கூற அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினாள் திவ்யா

    "அதனால இந்த இடைப்பட்ட காலத்துல, நாம ஒரு ரிசப்சனிஸ்ட டெம்ரவரியா அப்பாயிண்ட் பண்றதுங்கிறது, கம்பெனிக்கு ஒரு எக்ஸ்ட்ரா செலவு தான் இல்லையா? எம்.டி. கேட்க, அதற்கும் ஆமா என்பது போல் தலையாட்டினாள்.

    "அதனால, அவங்க லீவ்ல இருந்து திரும்ப வர வரைக்கும், ரிசப்ஷன் டூட்டியும் நீங்களே சேர்த்து பார்த்திருக்கீங்களா?"

    இப்படி அவர் கேட்கவும் திவ்யாவின் முகம் மாறியது. 'தற்காலிக ரிசப்பனிஸ்ட் நியமிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமும் அல்ல. அப்படி ஒரு ரிசப்ஷன்னிஸ்ட் நியமித்து அவளுக்கு சம்பளம் கொடுப்பதும் ஒரு பெரிய விஷயம் அல்ல'. ஆனாலும், ஒரு எச்.ஆர். ஆக இருக்கும் தன்னை, ரிசெப்ஷனிஸ்ட் வேலையும் சேர்த்து பார்க்க சொல்வது திவ்யாக்கு, சுயமரியாதையை இழப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது.

    அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "சார்... நான் பாக்குற வேலையே எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு! இதுல ரிசெப்ஷன் டூட்டியும் சேர்த்து பார்க்கிறதுங்கிறது எப்படி? - என இழுத்தாள்.

    "நான் இந்த கம்பெனிக்கு எம்.டி . எனக்கு தெரியும்! யாருக்கு எவ்வளவு வேலை? எவ்வளவு சுமை? யாருக்கு என்ன வேலை கொடுக்கலாம், வேண்டாம் அப்படின்னு..."

    திவ்யா பார்க்க, கடுமையான முகத்துடன் எம்.டி. பேச்சை தொடர்ந்தார். "ரெண்டு வேலையும் சேர்த்து பார்க்க முடியுமா... முடியாதா? அதான் என்னுடைய கேள்வி!" - என அவர் கேட்க, மவுனமாக இருந்தாள் திவ்யா.

    "அப்போ உங்களுக்கு ரெண்டு வேலையும் சேர்த்து பார்க்க பிடிக்கல... அப்படித்தானே?" என கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் திவ்யா மவுனம் காத்தாள். உங்களுக்கு கவுரவ பிரச்சினை. அப்படித்தானே திவ்யா?" நிமிர்ந்து அவரை பார்த்தாள். எம்.டி. தொடர்ந்தார்.

    "ஒரு எச்.ஆரா இருக்கிற நாம எப்படி ரிசப்ஷன் வேலை பார்க்க முடியும்? அப்படின்னு நினைக்கிறீங்க. இல்லையா?" சற்று கடுமையாக அவர் கேட்கவும், இதற்கு மேல் மவுனம் காக்க கூடாது என்று முடிவு செய்த திவ்யா, "ஆமா சார்... ஒரு எச்.ஆர் போஸ்ட்ல இருக்கிற எனக்கு, இதுக்கு மேல உள்ள போஸ்ட் ஏதாவது காலியா இருந்தா சொல்லுங்க. சேர்த்து பார்க்கிறேன். என்னால ரிசப்சனிஸ்ட் வேலை எல்லாம் சேர்த்து பார்க்க முடியாது... சாரி சார்!" - பளிச்சென்று சொன்னாள்.

    இப்படி திவ்யா பேசுவாள் என எம்.டி. எதிர்பார்க்கவில்லை. எனவே சற்று முகம் மாறி போக, "கவுரவ பிரச்சினை..." என தனக்குள் கூறியபடி தலையை ஆட்டினார் . "அப்கோர்ஸ்... கௌரவ பிரச்சினை தான் சார்!"- திவ்யா சற்று குரலில் கண்டிப்பையும், கனிவையும் சேர்த்து காட்டினாள்.

    இதற்காகவே காத்திருந்தது போலவே எம்.டி. வேகமாக எழுந்து ஆரம்பித்தார்.

    "புருஷன் கூட போய் போலீஸ் ஸ்டேஷன்ல நிக்கறது எல்லாம் உங்களுக்கு கவுரவ பிரச்சினை இல்லை... அது பேப்பர்ல நியூஸா வரும்... அது கவுரவ பிரச்சினை இல்லை... கம்பெனிக்காக கொஞ்ச நாளைக்கு ரிசப்ஷன் வேலைய சேர்த்து பார்க்கிறதுக்கு மட்டும் கவுரவபிரச்சினையா?" என கேட்க, அவர் அப்படி தனக்கு நடந்த ஒரு தனிப்பட்ட விஷயத்தை அலுவலக சம்பந்தப்பட்ட விசயத்திற்குள் கொண்டு வந்தது, திவ்யாவுக்கு எரிச்சல் ஏற்றியதால், அவளும் 'சடக்' என்று எழுந்து, 'சார்... என்னால இனி இந்த வேலைய கண்டினியூ பண்ண முடியாது. நான் பேப்பர் போட்டுடறேன் சார்," - என சொல்லிவிட்டு திவ்யா, அவரது பதிலே எதிர்பார்க்காமலேயே அந்த ரூமை விட்டு வெளியேறினாள்.

    அவள் போவதையே முறைத்த பார்வை பார்த்தவர், பக்கத்தில் இருந்த, மற்ற இரு டைரக்டரையும் பார்த்து, "ஏதோ ரவுடிங்க பிரச்சினைன்னு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இருக்கா. அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நமக்கு வேண்டப்பட்டவரு. இவ நம்ம கம்பெனியில வேலை பார்க்கிறானு தெரிஞ்சு, எனக்கு போன் பண்ணி 'சார் உங்க கம்பெனில வேலை பார்க்கிற பொண்ணு...பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்கிறேன் சார்ன்னு' என்கிட்ட வழிஞ்சாரு... கொடுக்க வேண்டியது கொடுத்து கம்பெனி பெயர் வெளிய வராம தடுத்துட்டேன். அதை பத்தி விசாரிக்கலாமுன்னுதான் மெதுவா ஆரம்பிச்சேன். அதுக்குள்ள கோவப்பட்டு, வேலைய விட்டுட்டு போறா... போகட்டும்... வெளியே போனால் தான் இந்த வேலையுடைய அருமை என்னன்னு தெரியும்...!"- என குரலில் வன்மத்தையும் கோபத்தையும் கலந்த எம்.டி.யின் குரல், அந்த அறையை விட்டு சென்று கொண்டிருந்த திவ்யாவின் காதில் விழத்தான் செய்தது.

    'ஒருவரை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்றால், அவரிடம் நேரடியாக அதை சொல்லாமல், சம்பந்தப்பட்டவரே அந்த வேலையை விட்டுவிட்டு போகும்படி அவருக்கு நெருக்கடியை நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்வது தான், மேலிடத்தில் இருப்பவர்கள் கையாளும் டெக்னிக்.' அதைத்தான் வெற்றிகரமாக அந்த எம்.டி.யும் செய்து முடித்தார். அந்த கம்பெனி வேலையை அன்றோடு தலை முழுகினாள், திவ்யா.

    வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த திவ்யாவுக்கு, மனசு முழுக்க கவலை அப்பி கிடந்தது. அண்ணனையை எதிர்த்து, 'என் சொந்தக்காலில் நான் நின்று கொள்வேன். என் காதலுக்கு மட்டும் அனுமதி கொடுங்கள்..." என்று அம்மா அப்பாவையும் சமாதானப்படுத்தி, கல்யாணமும் முடிந்து, பத்து நாட்களுக்குள்ளாக வேலையை விடுவோம் என்று திவ்யா நினைத்து பார்க்கவே இல்லை.

    'இனி தனக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை, டேவிட் சம்பளம் மட்டும்தான்! அதை வைத்து குடும்பத்தை ஓட்ட வேண்டும். சீக்கிரத்தில் தனக்கு இன்னொரு வேலையை பார்க்க வேண்டும். தனக்கு வேலை கிடைக்க தாமதமாகி பணக்கஷ்டம் வந்தால் கூட எந்த காரணத்தைக் கொண்டும் அப்பாவிடம் கையேந்த கூடாது. கேட்டால், அவர் கொடுப்பார் என்றாலும், நாம் அவரிடம் கேட்பது அவ்வளவு நன்றாக இருக்காது.

    இனி எந்தெந்த கம்பெனிகளில் நாம் வேலைக்கு சேர முயற்சிக்கலாம். இப்படி வேலையை விட்டுவிட்டு வந்து விட்டேன் என்பதை டேவிட்டிடம் எப்படி பக்குவமாக சொல்வது'- இப்படி எல்லாம் மனதிற்குள் எண்ணங்களை சுழல விட்டபடியே வீடு வந்து சேர்ந்தாள் திவ்யா.

    வீட்டு வாசல் கேட்டை திறந்து நுழையும் போதே, உள்ளே இருந்து டிரம்ஸ் வாசிக்கும் சத்தம், கூடவே கிட்டார், ப்ளுட், அதோட சேர்ந்து டேவிட் நண்பன் நெல்சன் குரலில்,

    "மடைதிறந்து தாவும் நதியலை நான்... மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்...!"- என்ற பாடல் கேட்க, ஒரு சந்தோஷ சாரலாய் அந்தப் பாட்டு திவ்யாவின் மனசுக்குள் ஒரு சந்தோஷ மழையை பெய்ய வைத்தது என்னவோ உண்மைதான்!

    பாடலைக் கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தாள் திவ்யா.

    ஹாலில் டேவிட் நண்பர்களுடன் அமர்ந்து, இசை பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தான்.

    "ஒண்ணா கூடிட்டீங்களா... மியூசிக் பிராக்டிஸ் நடக்குதா?" என அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்க மனமில்லாமல், தான் வேலையை விட்டு விட்ட விஷயத்தை இப்போது சொல்ல வேண்டாம் என்று ஒத்தி வைத்துவிட்டு, சிரித்தபடி கேட்டாள், திவ்யா.

    அதைக் கேட்டதும் வாசித்த கிட்டாரை கீழே வைத்த படி எழுந்த டேவிட் சொன்னான். "இல்ல... எங்களில் யாருக்காவது ஒருத்தருக்கு, ஏதாவது டிப்ரஷன், அதான் மன அழுத்தம் வந்தா, இல்ல ஒரு மனசங்கடம் வந்துச்சுன்னா, உடனே நாங்க எல்லாம் சேர்ந்து மியூசிக் பிராக்டிஸ் ஆரம்பிச்சுடுவோம்" என கூற, திவ்யா கேட்டாள் "அப்போ உங்கள் நாலு பேருல, யாரோ ஒருத்தருக்கு ஏதோ ஒருபிரச்சினை! அப்படித்தானே? சரி... என்னால முடிஞ்ச சப்போர்ட்ட, நான் செய்றேன்! சொல்லுங்க... யாருக்கு என்ன மன கஷ்டம்? என்ன மன அழுத்தம்...?"

    டேவிட் நண்பர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, "ஏன் தயங்குறீங்க... எதுவா இருந்தாலும் சொல்லுங்க, திவ்யா அழுத்தமாய் கேட்க, இடையில் புகுந்த டேவிட் மெதுவாக, சொன்னான்.

    "ஒண்ணும் இல்ல திவ்யா... எனக்கு வேலை போயிடுச்சு!"

    அவள் அதிர்ந்து போய் "என்ன செய்வது... என்ன பேசுவது?"- என்றே தெரியாமல், அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353

    • மனிதன் தன் உணர்வுகளில் மேலான நிலையை அடையும் பயிற்சி தானே வாழ்க்கை?
    • அகம் சீராக இருந்தால் புறத்தில் நாம் அனுபவிக்கும் வாழ்வும் சீராக இருக்கும். ஏனென்றால் அகமே புறம்.

    தவம் என்பது தன்னை வெல்லல். தொடர்ந்து தவம் செய்வதன் மூலம் ஒருவர் தன்னை வெல்லும் ஆற்றலை மிகுதிப் படுத்திக் கொள்ளலாம்.

    புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று உண்மையாகவே நினைப்பவர்கள் நாள்தோறும் சிறிதுநேரம் தவம் செய்து, அந்தப் பழக்கங்களில் இனி ஈடுபட மாட்டேன் என்ற எண்ணத்தை தவத்தின் இறுதி நிலையில் நெஞ்சில் உறுதிப் படுத்திக் கொண்டால் போதும்.

    மெல்ல மெல்ல மனம் அந்தப் பழக்கங்களைத் துறந்துவிடும். மனத்தை நல்ல வழிகளில் பழக்குவதற்குத் தவத்தைப் போல் உதவிசெய்யும் வேறொரு பயிற்சி இல்லை.

    வேதாத்ரி மகரிஷி `அனைவரும் தவம் செய்யலாம், செய்ய வேண்டும்!` என அண்மைக் காலத்தில் உரத்துக் குரல் கொடுத்தவர். குண்டலினி யோகத்தை எல்லா மக்களுக்கும் கற்பிக்க முனைந்தவர்.

    மூலாதார சக்தியை முதுகுத் தண்டின் கீழ்ப் பகுதியில் இருந்து நெற்றிப் பொட்டில் கொண்டுவந்து நிறுத்தி நாள்தோறும் தியானம் செய்யும் தவமுறைக்குப் புதுப்பொலிவு கொடுத்தவர்.

    அவரது நெறியில் முக்கியமான ஒரு படிநிலை சொல்லப்படுகிறது. அகத்தாய்வு என்பதே அது. நாள்தோறும் மனத்தை நாம் ஆராயும் போது தீய நினைவுகள் தானே மட்டுப்படும்.

    சிலர் நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக நல்ல வழக்கம். புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பை அவரது சமகால வரலாறாகவே படைத்திருக்கிறார்.

    ஆனால் நாட்குறிப்பு எழுதுபவர்கள் அதில் அன்றாடம் நடந்த சம்பவங்களை மட்டும் பதிவு செய்கிறார்கள். அது போதாது. அவர்கள் தங்களின் மன உணர்வுகளையும் பதிவுசெய்ய வேண்டும்.

    இரவு படுக்கப் போவதற்கு முன்னால் அந்த நாள் முழுவதும் நம் மனம் என்னென்ன உணர்வுகளில் திளைத்தது என்பதை ஆராய்ந்து பதிவு செய்ய வேண்டும்.

    தீய நினைவுகள், கோபம், காமம் போன்ற உணர்வுகள் நம் மனத்தில் தோன்றியதா என்பதை ஆய்வு செய்து எழுதும்போது நம் ஆழ்மனம் அந்த நினைவுகளைத் தவிர்க்க வேண்டுமெனத் தானே எச்சரிக்கை கொள்ளும்.

    போகப் போக அத்தகைய உணர்வுகளின் கோரமான பிடியிலிருந்து நாம் விடுபட நம் மனமே நமக்கு உதவும்.

     

    வேதாத்ரி மகரிஷி 

    வேதாத்ரி மகரிஷி சொல்லும் அகத்தாய்வுத் தவம் என்பது சம்பவங்களை ஆராய்வதல்ல. உணர்வுகளை ஆராய்வது. மனிதன் தன் உணர்வுகளில் மேலான நிலையை அடையும் பயிற்சி தானே வாழ்க்கை?

    தவம் ஒரு மனிதனின் முகத்தில் அளவற்ற பொலிவை ஏற்படுத்துகிறது. சிலரைப் பார்த்ததுமே நமக்கு மரியாதை தோன்றக் காரணம் அவர் முகத்தில் தென்படும் தவப் பொலிவை நம் மனம் நாமறியாமலே உணர்வதுதான்.

    ஆரா என்று அழைக்கப்படும் சூட்சுமமான ஒளிவட்டம் தவம் செய்வோர் முகத்தைச் சுற்றிப் பரவுகிறது. அடுத்தவர்கள் அவர்களின் சொல்லுக்குத் தங்களையறியாமலே கட்டுப்படுகிறார்கள்.

     

    ஸ்ரீஅரவிந்தர்

    ஸ்ரீஅரவிந்தர் தெய்வ சக்தியைத் தன்னில் இறக்கிக் கொள்வதற்காக ஓயாமல் தவம் செய்தவர். கொல்கத்தாவில் இருந்த அம்புபாய் புரானி என்பவர் புதுச்சேரி வந்து அரவிந்தரின் குழுவில் சிறிதுகாலம் இணைந்திருந்தார். பின் பணிநிமித்தம் காரணமாக அவர் மறுபடி மூன்றாண்டுகள் கொல்கத்தா சென்றுவிட்டார். அரவிந்தர் பாண்டிச்சேரியிலேயே தவ வாழ்வு வாழ்ந்துவந்தார்.

    மூன்றாண்டுகளுக்குப் பிறகு மறுபடி பாண்டிச்சேரி வந்தார் அம்புபாய் புரானி. ஸ்ரீஅரவிந்தரை தரிசித்தார். புரானிக்குப் பெரும் வியப்பு.

    அரவிந்தர் மாநிறத்தில் தானே இருப்பார்? இப்போது அவர் முகமும் உடலும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறதே? இது எப்படி?

    வியப்போடு கேட்ட புரானியைப் பார்த்துக் கனிவோடு சிரித்தார் அரவிந்தர். `நான் தெய்வ சக்தியை என் உடலில் இறக்குவதற்காகத் தொடர்ந்து தவம் செய்கிறேன் இல்லையா? தெய்வ சக்தி என்னில் மெல்ல இறங்கத் தொடங்கியிருக்கிறது. அது தன் புற விளைவுகளைக் காட்டுகிறது போலும். இந்தப் புற விளைவை அதிகம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை!`

    ஆம். கண்ணாடிப் பெட்டிக்குள்ளே ஒரு வைரத்தை வைத்துவிட்டு அதன் ஒளி வெளியே தெரியக் கூடாதென்றால் சாத்தியமா? அதன் ஒளி சுற்றுப் புறமெங்கும் பரவத்தானே செய்யும்?

    இறைவன் என்ற மாபெரும் வைரத்தை நெஞ்சுக்குள்ளே வைத்துத் தவம் செய்தால் அந்த இறைவனின் பொன்னொளி உடலில் பரவி உடலும் பொன்னிறம் பெறுவது இயற்கை தானே?

     

    ராமகிருஷ்ண பரமஹம்சர்

    ராமகிருஷ்ண பரமஹம்சர் வண்டி கட்டிக் கொண்டு ஒரு வீட்டில் பூஜை செய்யப் புறப்பட்டுப் போனார். பூஜை சில நாட்கள் நடைபெற்றது. எப்போதும் தவத்தில் தோய்ந்து வாழும் மகான் அல்லவா பரமஹம்சர்? பூஜை முடிந்து மறுபடி தன் வீடுசெல்ல வேண்டி வாயிலுக்கு வந்தார்.

    வாயிலில் பெரும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது. பரமஹம்சர் எதற்கிந்தக் கூட்டம் என்று திகைப்போடு உள்ளே திரும்பிவிட்டார். ஏன் இத்தனை மக்கள் வாயிலில் கூடியிருக்கிறார்கள் என்று அந்த இல்லத்தாரைக் கேட்டார்.

    `சுவாமி. தங்கள் முகம் தங்க நிறத்தில் ஜொலிக்கிறதே! அதைப் பார்க்கக் கூடியுள்ள மக்கள் இவர்கள்!` எனப் பணிவோடு பதில் வந்தது. பரமஹம்சர் தன் முகத்தில் கைகளால் அறைந்து கொண்டார்.

    `என் முகத்தின் பொலிவைப் பார்க்கவா இத்தனை கூட்டம்? நான் சொன்ன கருத்தைக் கேட்டுப் பின்பற்ற இவர்கள் வரவில்லையா? காளி! என் பொலிவை நீ எடுத்துக் கொண்டுவிடு!`

    அவர் இப்படிப் பிரார்த்தித்த பின்னர் கொஞ்ச நாளில் அவர் முகம் மெல்ல மெல்லப் பழையபடி மாநிறம் கொண்டதாக மாறிற்று என்கிறது பரமஹம்சரின் திருச்சரிதம்.

    தவம் செய்வது பெரும் முகப்பொலிவைத் தரும். ஆனால் தவத்தின் மெய்யான நோக்கம் அதுவல்ல. அகத்தைப் பொலிவுபெறச் செய்வதே தவத்தின் பயன்.

    அகம் சீராக இருந்தால் புறத்தில் நாம் அனுபவிக்கும் வாழ்வும் சீராக இருக்கும். ஏனென்றால் அகமே புறம்.

    வ.உ.சி. சிறையில் இருந்தபோது மெய்ஞ்ஞானியான ஜேம்ஸ் ஆலனின் நூல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தார். ஜேம்ஸ் ஆலன் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியையும் கவர்ந்த சிந்தனையாளர். வ.உ.சி. மொழிபெயர்த்த நூல்களில் ஒன்றின் பெயர் அகமே புறம் என்பது.

    அகம் தான் புறமாகிறது. அகத்தில் தவம் செய்யும்போது அது புறத்தில் நாம் விரும்பத் தக்க மாறுதல்களை நம்மை அறியாமலே உருவாக்குகிறது.

    `வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

    ஈண்டு முயலப் படும்!`

    என்கிறார் வள்ளுவர். விரும்பிய பயனை விரும்பியவாறு தர வல்லது தவம். எனவே தவம் செய்யுங்கள் என்கிறது வள்ளுவம்.

    தவம் செய்து தாம் விரும்பியதை எல்லாம் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். புராணத்தில் அப்படி வருகிற ஒரு பாத்திரம் விஸ்வாமித்திரர்.

    அவர் பெருந்தவம் நிகழ்த்தி வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர். தம் அபாரமான தவ ஆற்றல் காரணமாக தன்னைச் சரணடைந்த திரிசங்குவுக்காக சொர்க்கத்திற்கு இணையாக இன்னொரு சொர்க்கத்தை அந்தரத்தில் படைத்தவர்.

    சராசரி மனிதர்கள் பெரும் முயற்சி செய்தும் செய்ய முடியாத அபாரமான சாதனைகளை எல்லாம் தவ முனிவர்கள் ஒரு கண்பார்வையில் நிகழ்த்தி விடுவார்கள். உண்மையான தவம் எந்த அற்புதத்தையும் நிகழ்த்த வல்லது.

    அணிமா, மகிமா, லகிமா உள்ளிட்ட அஷ்டமா ஸித்திகளும் தவம் செய்பவர்களுக்குத் தானே வந்தமையும்.

    சரி, புராணப் பாத்திரம் மட்டுமா? அண்மைக் காலத்தில் அப்படித் தவம் செய்து நாம் வியக்கும் வகையில் பெரும் ஆற்றல்கள் பெற்ற யாராவது இருக்கிறார்களா?

    ஏன் இல்லாமல்? அப்படி ஒருவர் இருந்தார். சென்னையில் வாழ்ந்தார். ஆகாயத்தில் பறவையைப் போல் பறந்தார். பறவைச் சித்தர் என்ற பெயராலும் அவர் அழைக்கப்பட்டார். அவரைப் பற்றித் தம் நூலில் பதிவுசெய்கிறார் திரு.வி.க. என்றழைக்கப்பட்ட திரு வி. கல்யாணசுந்தரனார். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி கட்டிடத்தின் மாடியில் நின்று கொண்டிருந்தார் அவர். அப்போது ஒரு கைம்பெண் ஆகாயத்தில் பறந்து வந்து அவரருகே நின்று சற்றுத்தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு மீண்டும் பறந்து சென்றார்!

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஆச்சரியத்தில் ஆழ்ந்த திரு.வி.க., அந்தப் பெண்மணி யார் எனப் பின்னர் விசாரித்தறிந்தார். சக்கரையம்மா என்றழைக்கப்பட்ட அவர், பாரதியாரைப் பாண்டிச்சேரி தலைமறைவு வாழ்க்கைக்குப் பத்திரமாகச் சென்னையில் இருந்து அனுப்பிவைத்த டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்பதைத் திரு.வி.க அறிந்துகொண்டார்.

    இந்த விவரங்களையெல்லாம் திரு.வி.க தம் உள்ளொளி என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். திரு.வி.க. பொய்யே பேசாதாவர் எனப் பலராலும் புகழப்பட்ட பெருமைக்குரியவர். பறவைச் சித்தரான சக்கரையம்மாவின் சமாதியும் அவருக்காக எழுப்பப்பட்ட அழகிய கோவிலும் சென்னை திருவான்மியூரில் இருக்கிறது. சக்கரையம்மாவுக்கு வானில் பறக்கும் சக்தியை எது தந்தது? அவரது குருவான நட்சத்திர குணாம்பாள் உபதேசம் செய்த ஸ்ரீசக்ர மந்திரமும் அந்த மந்திரத்தை ஜபித்து ஓயாமல் சக்கரையம்மா செய்துவந்த தவமும் தான்.

    `செய்கதவம் செய்கதவம் நெஞ்சே

    தவம்செய்தால்

    எய்த விரும்பியதை எய்தலாம்!`

    என்கிறார் பாரதியார்.

    தவம் செய்தால் மறுமைப் பயனை மட்டுமல்ல, இம்மைப் பயனையும் அடையலாம் என்கிறபோது, நாள்தோறும் சிறிதுநேரமாவது ஜபதபங்களைச் செய்து தியானம் செய்து தவத்தில் ஈடுபட முயலலாமே? நாம் அடைய விரும்பும் வெற்றிகளை நாம் செய்யும் தவத்தால் எளிதில் அடையலாமே?

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்.
    • ஜோதிடத்தில் படமெடுத்த நாகத்தை குறிக்கும் நட்சத்திரம் ஆயில்யம்.

    27 நட்சத்திரங்களில் ஆயில்யம் ஒன்பதாவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி புதன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் நீச்சம் அடையும் கிரகம் செவ்வாய். இதன் உருவம் அம்மி பாம்பு என்றும் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் தோற்றம் பாம்பு போல் காணப்படுவதால் சர்ப்ப நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. ஆயில்யம் என்ற வார்த்தையின் அர்த்தம் தழுவிக் கொள்ளுதல் என்பதாகும். இதன் தமிழ் பெயர் கட்செவி. அரவம். பெருமாள் பள்ளி கொண்டு இருக்கும் ஆதிசேஷ வடிவமாகும்.

    ஜோதிடத்தில் படமெடுத்த நாகத்தை குறிக்கும் நட்சத்திரம் ஆயில்யம். இதில் நீச்சமடையும் கிரகம் செவ்வாய் என்பதால் எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து அவர்களை வீழ்த்த ஏற்ற நட்சத்திரம் ஆயில்யம் ஆகும்.

    ஆயில்யம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்.

    தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளை பிறர் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்கமாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைப்பார்கள். அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகவுரவம் பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள். இவர்கள் பழைய சாஸ்த்திரங்கள், பழைய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறினால் பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும் அஞ்சுவார்கள். உயிருக்குச் சமமாக கவுரவத்தைக் காப்பாற்றுவார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும்அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பாவம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

    இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக்காட்டுவார்கள். தேசப்பற்றும் நிறைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தயாராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள்.

    கல்வி

    இவர்கள் சராசரி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுக்கு கல்வியால் பெறும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு அதிகம்.

    கணிதம் சார்ந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் வங்கித் துறை, கணக்காளர், இன்சூரன்ஸ், எழுத்தாளர், பத்திரிகையாளர், யோகா ஆசிரியர் போன்ற துறைகளில் சிறப்பான பலனை பெறுவார்கள்.

    மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவார்கள். என்பதால் சித்த மருத்துவம், மூலிகை, பாரம்பரிய மருத்துவத்தில் சிறந்து விளங்குவதாய் உள்ளது. மருந்து தயாரிப்பு, அவசர கால சேவை, பங்கு வர்த்தகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

    தொழில்

    அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்பு தரும். சட்டத் தொழில் செய்பவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள், ஆன்மீகத் தலைவர்கள், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற அரசு உத்தியோகங்களை அடையலாம். ஜோதிடம், ஆன்மீகம் மாந்திரிகம் போன்றவற்றில் ஈடுபாடு மிக உண்டு.

    கதை, கவிதை, எழுத்து, தகவல் தொழில் நுட்பம், சித்த மருத்துவம், கால்நடை மருத்துவம் இவை அனைத்தும் சிறப்பு தரும். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும் யோகம் உண்டு. தர்ம ஸ்தாபனங்களில் உத்தியோகம் கிடைக்கும். இவர்கள் பேச்சாளர்கள், சிறந்த நுண்ணிய சாஸ்த்திர ஆராய்ச்சியாளர்கள், ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.

    பலர் புத்தக விற்பனையாளர்களாகவும், பள்ளிகள் நடத்துபவர்களாவும், எழுத்தாளர்கள், பேப்பர் கடைகள், அச்சுத் தொழில் ஆகியவையும் இவர்களுக்கு நன்கு அமையும். கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள் போன்ற தொழில்களும் சிறப்புத் தரும். அரசியல் ஈடுபாடும் ஏற்படும். சாணக்கிய தனம் நிறைந்தவர்கள்.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    சிறந்த உழைப்பாளர்கள். தான் நினைத்த உச்சத்தை உழைப்பால் அடைவார்கள். தங்களது கலாசாரத்தை விட்டு வெளியே வரத் தயங்குவதால் இவர்களுக்கு காதல் விவகாரங்கள் வெற்றியைத் தருவது இல்லை. நல்ல வாழ்க்கைத் துணை இயற்கையாகவே அமைந்து விடும். இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும். இளமையில் வறுமையில் வாழ்ந்தாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள். நல்ல பணம் சம்பாதிக்கும் திறமைசாலிகள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்பாவிட்டாலும் தன்னை சார்ந்தவர்களுக்கு வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள். வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்வார்கள்.பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள்

    தசா புக்தி பலன்கள்

    புதன் தசா: இது ஜென்ம தாரையின் நட்சத்திரமாகும். இதன் தசா வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன் தசா காலங்களை அறியலாம். கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். அறிவாளிகளாகவும் ஞானம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். தன்னுடைய முன்னேற்றத்திற்காக யாரையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தன் வலிமையை அறிந்து செயல்படுவார்கள். புதன் பலமிழந்திருந்தால் சிறு வயதில் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி




    கேது தசா: தன தாரையின் நட்சத்திரமாகும். இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். புதன் தசாவை முழுமையாக கடந்தாலும் கல்லூரி வாழ்க்கையையில் கேது தசாவை சந்திப்பார்கள். சிலர் சிறு வயதிலேயே சம்பாதிக்க துவங்குவார்கள். அல்லது தாய், தந்தை நன்றாக சம்பாதிப்பார்கள். நல்ல வசதியான ஆடம்பர வாழ்க்கை உண்டு. ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள். பெற்றோர்கள், பெரியோர்களை மதித்து நடப்பார்கள். சிலர் இந்த காலகட்டங்களில் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள்.

    சுக்ர தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து திரையின் தசாவாகும். இதன் கால அளவு 20. எந்த வயதினராக இருந்தாலும் காதல் தொல்லை உண்டு. சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

    பழமையான விஷயங்களை ஒதுக்குவார்கள். பகட்டுக்காக ஆடம்பர செலவு செய்வார்கள். அதனால் ஏமாற்றத்தை சந்திப்பார்கள் அல்லது காதல் சோகத்தில் முழ்குவார்கள். பெற்றோரை பிரிந்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். பலருக்கு இந்த காலகட்டத்தில் மறு விவாகம் நடக்கும்.

    சூரிய தசா: இது நான்காவதாக வரக்கூடிய சேம தாரையின் தசையாகும். சுக்ர தசாவில் சம்பாதிக்க தவறியவர்கள் இந்த காலத்தில் வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள். வீடு, வாகனம் என சுப விரயங்கள் மிகுதியாகும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

    மேன்மையான பலன்களை பெற முடியும். சில நேரத்தில் கோபப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம் வெளுத்ததெல்லாம் பால் என நம்பக்கூடியவர்கள்.

    சந்திர தசா: இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 10 ஆண்டுகள். நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.

    கையில் உள்ள பொறுப்பை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு, எந்த ஒரு விஷயத்திலும் ஒதுங்கி இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

    செவ்வாய் தசா: இது சாதக தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 7. இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் 60 வயதை கடந்தவராக இருந்தாலும் உத்தியோக காலம் நீட்டிப்படையும். சிலர் ஓய்வு காலத்திற்கு பிறகும் சம்பாதிப்பார்கள். சிலருக்கு இந்த காலகட்டத்தில் சொத்து மற்றும் வாகன வசதி உண்டாகும். வாலிப வயதில் வாழாத வாழ்க்கையை வயோதிகத்தில் அனுபவிப்பார்கள்.

    ராகு தசா:ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு 7-வதாக வரக்கூடியது. ராகு தசா. இது வதை தாரையின் தசாவாகும்.இதன் தசா ஆண்டு 18. சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் நல்ல சொகுசு வாழ்க்கை உண்டு. நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

    ஆயில்யம் நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய நற்காரியங்கள்

    நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

    ஆயில்யம் நட்சத்திரத்தின் சிறப்புகள்

    சத்ரு உபாதை கடன் தொல்லைகளால் துன்பப்படுபவர்கள் தொடர்ந்து 6 மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் ராமேஸ்வரம் சென்று சேது சமுத்திரத்தில் நீராடி ராமேஸ்வரரை வழிபட சத்ரு பாதைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். கொலை பாவம் செய்தவர்கள் இந்த நட்சத்திர நாளில் சேது சமுத்திரத்தில் நீராடி ராமேஸ்வரரை மனதாரப் பிராத்தித்தால் பிரம்மஹத்தி தோஷம் போன்ற கொடூரமான பாவத்திலிருந்து மீள முடியும். நவகிரக சாந்தி செய்ய விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டினம் சென்று கடலுக்குள் அமைந்துள்ள நவகிரகங்களை வழிபட நவகிரகங்களால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும்.

    திருமணத் தடையை சந்திக்கும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் தேவிபட்டினம் சென்று நவகிரக சாந்தி செய்தால் திருமண தடை அகலும். ஜாதகத்தில் நாக தோஷம் சர்ப தோஷம் உள்ளவர்கள் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில் தேவிபட்டினம் சென்று வரலாம். சந்திரனுடைய வீட்டில் அமர்ந்த நட்சத்திரம் ஆயில்யம் என்பதால் இந்த நட்சத்திர நாளில் துர்கையை வழிபட மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கல்வியைக் குறிக்கும் கிரகம் புதன். கல்வியில் தடையை ஏற்படுத்தும் கிரகம் செவ்வாய். ஆயில்ய நட்சத்திரத்தில் செவ்வாய் நீச்சம் அடைவதால் கல்வியில் தடை ஏற்பட்டு மீண்டும் கல்வியை தொடர விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் துவங்கலாம்.

    நட்சத்திர பட்சி:கிச்சிலி

    யோகம்: சூலம்

    நவரத்தினம் : மரகதம்

    உடல் உறுப்பு: காதுகள்

    திசை: தெற்கு

    பஞ்சபூதம் : நீர்

    அதிதேவதை: ஆதிசேஷன்

    நட்சத்திர மிருகம்: ஆண் பூனை

    நட்சத்திர வடிவம்: பாம்பு

    நட்சத்திர விருட்சம் - புன்னை

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை: அஸ்வினி, மகம், மூலம்

    சேம தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

    சாதக தாரை: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    பரம மிக்ர. தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

    பொதுவான பரிகாரங்கள்

    இந்த நட்சத்திரத்தின் தோற்றம் சர்ப்பம். இதில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் இரண்டு சர்ப்பங்கள் பிணைந்த சர்ப்ப சிலைகளை வழிபட பெயர், புகழுடன் வாழலாம். ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.

    6-வது தாரையான சாதக தாரை சித்திரை நட்சத்திர நாளில் சித்திர குப்தனையும், சக்ரத்தாழ்வாரையும் வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கப்பெறுவார்கள்.

    • படத்தின் டைரக்டர் ராஜேந்திரபாபு.
    • ஒரு நாள் என்னை தேடிய சுதீப் ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார்.

    இப்பல்லாம் வெளிப்புற படப்பிடிப்புகள் நடக்கும் போது கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் உடனே கேரவேனுக்குள் சென்று குளு குளு ஏசியில் ஓய்வு எடுத்து கொள்ள முடியும்.

    ஆனால் அந்த காலத்தில் இந்த வசதி எதுவும் கிடையாது. ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட்டுக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் அதுவரை அங்கேயே ஏதாவது மரத்தடிகளில் இருப்போம். அனல் காற்று வீசும். வியர்வையில் மேக்கப் கூட கலைந்து போகும். ஆனால் வேறு வழி கிடையாது.

    வெட்கத்தைவிட்டு சொல்வதென்றால் பாத்ரூம் செல்ல கூட வசதி இருக்காது. மரங்களின் மறைவில் ஒதுங்கி இருக்கிறோம்.

    இந்த மாதிரி சிரமங்களை அனுபவித்த காலத்தில் ஒரு முறை வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது நாற்காலி ஒன்று என் கண்ணில் பட்டது.

    அந்த நாற்காலியை அமர நாற்காலியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பின் பக்கம் சாந்ததால் சாய்வு நாற்காலியாகவும் பயன்படுத்தலாம். அதையே முன்பக்கம் சற்று இழுத்து போட்டால் ஒரு சிறிய கட்டில் போல் பயன்படுத்தவும் முடியும். பார்க்க நன்றாக இருந்தது. எனக்கு படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரொம்ப உதவியாக இருக்கும் என்று நினைத்து உடனே அதை வாங்கி விட்டேன். அதன் பிறகு எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் அந்த நாற்காலியையும் உடன் எடுத்து சென்று விடுவேன். எல்லோருக்கும் சாய்வு நாற்காலியில் நான் அமர்ந்து இருப்பது மட்டுமே தெரியும்.

    தமிழில் கமல்-ராதிகா ஜோடி நடித்த சிப்பிக்குள் முத்து படம் கன்னடத்தில் 'சுவாதி முத்து' என்ற பெயரில் தயாரானது. அந்த படத்தில் நானும் சுதீப்பும் ஜோடி. படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

    அப்போது எனக்கு கன்னடம் சரளமாக பேச வராது. அதனால் டயலாக்குகளை முன்கூட்டியே வாங்கி படித்து பார்த்து புரிந்து கொள்வேன். படத்தின் டைரக்டர் ராஜேந்திரபாபு. அவர் பழைய நடிகை சுமித்ரா அவர்களின் கணவர். அவர் தமிழ் நன்றாகவே பேசுவார். அது எனக்கு கொஞ்சம் சவுகரியமாக இருந்தது. அவ்வப்போது அவரும் வசனங்களை சொல்லித் தருவார்.

    கமல்-ராதிகா நடித்த படத்தின் வாய்ப்பு கிடைத்ததே மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் ராதிகா அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம். அதில் எந்த குறையும் இல்லாமல் நடிக்க வேண்டும் என்ற பயமும் இருந்தது. இதனால் கூடுதல் கவனமாக இருந்தேன். ஷூட்டிங்குக்காக மைசூரு ஸ்ரீரங்க பட்டணத்தில் தங்கி இருந்தோம் அந்த படத்தின் டைரக்டர் ராஜேந்திர பாபு தான்.


    படப்பிடிப்பு காலை 7 மணிக்கு தான் தொடங்கும். ஆனால் அதிகாலை 4 மணிக்கே புரோடெக்சன் யூனிட்டை சேர்ந்தவர்கள் எங்களை எழுப்பி விடுவார்கள்.

    ஏன் சார்... 5 மணிக்கு எழுந்தால் போதுமே. ரெடியாகி 7 மணிக்கு வந்துவிடுவேன். இப்படி 4 மணிக்கே தூக்கத்தை கெடுக்கிறீங்களே என்பேன். ஆனாலும் அவர் விடவில்லை.

    முன்கூட்டியே எழுந்து செல்வதால் படப்பிடிப்பு தளத்தில் சும்மா இருக்கும் போது தூக்கம் வரும். நான் ஓய்வு கிடைக்கும் போது எனது நாற்காலியை எடுத்து சென்று மரங்களின் நிழலில் போட்டு கட்டில் போல் விரித்து போட்டு படுத்து விடுவேன்.

    அதுவும் யாருக்கும் தெரியாத படி ஏதாவது வேன்களுக்கு பின்னால் தான் மறைந்து படுத்து இருப்பேன். அந்த நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விடுவேன்.

    இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது. ஒரு நாள் என்னை தேடிய சுதீப் ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார். 'ஆஹா... இப்படியெல்லாம் நடக்குதா? என்று ஆச்சரியப்பட்டவர் அதன் பிறகு அவருக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மீனா' உங்கள் நாற்காலிகம் மெத்தையை கொஞ்சம் கொடுங்களேன் என்பார்.

    அப்புறம் இது டைரக்டருக்கும் தெரிந்து விட்டது. அவரும் என்னம்மா மீனா எனக்கும் அந்த நாற்காலியை கொஞ்சம் தாயேன் என்று அவ்வப்போது கேட்டு வாங்கி கொள்வார். மொத்தத்தில் படப்பிடிப்பு ரொம்ப ஜாலியாகவே நடந்து முடிந்தது. ஸ்ரீரங்க பட்டணத்தில் இருந்து நானும் சென்னை பட்டணத்துக்கு திரும்பினேன்.

    படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது. கன்னடத்தில் சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

    இன்னொரு சுவாரஸ்யத்துடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்! பை... பை...

    (தொடரும்)


    'சிவப்புகண்' மீனா

    பேய்... இருக்கா...? இல்லையா...?

    நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இன்று வரை இந்த குழப்பம் என்னிடம் இருகிறது.

    கேரள மாநிலத்தில் சோட்டானிக்கரையில் புகழ் பெறற தேவி கோவில் உள்ளது. அங்கு நான் பலமுறை போய் இருக்கிறேன். அங்கு தன்னிலை மறந்து ஆகரோஷமாக பேய் பிடித்ததாக ஆடும் பலரை பார்த்து இருக்கிறேன்.

    இப்போது திடீர் என்று நான் இந்த 'பேய்' பற்றி பேச காரணம் என்றார் 'ஷாக்' என்ற தமிழ் படத்தில் நானும் பிரசாந்தும் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தை தயாரித்ததும் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சார். என்னை குழந்தை பருவத்திலேயே பார்த்தவர் அவர்.

    சிவாஜி சாரின் நெஞ்சங்கள் படத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது தியாகராஜன் சார்தான் வில்லன். அவர்தான் என்னை கடத்தி தூக்கி செல்வார். என்னிடம் ரொம்பவே பாசமாக இருப்பார்.

    ஷாக் படத்தில் நான் பேய் பிடித்து கண்ணை உருட்டி, மிரட்டலாக நடிக்கணும். ரொம்ப வித்தியாசமான பாத்திரம்.

    கண் சிவந்து இருக்க வேண்டும். அதற்காக கண்ணில் கிளிசரின் அடிக்கடி நிறைய போட்டார்கள். கண் சிவந்தது. ஆனால் பெருகி வரும் கண்ணீரை எப்படி தவிர்ப்பது? பொதுவாக அழுது நடிக்கும் காட்சிகளில் கண்ணீரை வரவளைப்பதறகாக கிளிசரின் போட்டுக் கொள்வது உண்டு.

    ஆனால் இந்த படத்தில் கண் கடுஞ்சிவப்பாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக கிளிசரினை அதிகமாக கண்ணில் போட்டதால் கண்ணீரும் அதிகமாக பெருகியது. அவ்வப் போது கேமராவில் இருந்து லேசாக திரும்பி கண்ணீரை துடைத்து விட்டு நடிப்பேன்.

    உண்மையில் சில நேரங்களில் அழுகை காட்சிக்கு எனக்கு கிளிசரினே தேவைப்பட்டதில்லை. காட்சிகளை உள்வாங்கி அதே உணர்வுடன் நடித்தால் தானாகவே அழுகை வந்து விடும். ஆனால் எனக்கு தான் பலர் மத்தியில் கண்ணீர் விட்டு அழுவதற்கு ஒரு மாதிரியாக இருக்கும.

    இந்த ஷாக் படத்தில் என் கண்களை பார்த்து சிவப்பு கண் மீனா என்றே அப்போது கூப்பிடுவார்கள்.

    ×