என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • பொன்னாங்கண்ணி கீரையை சூடான சாதத்தில் பிசைந்து தினமும் ஒரு முறை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை கூர்மையடையும்.
    • இரண்டு உள்ளங்கைகளையும் 10 விநாடிகள் நன்றாக சூடு பறக்க தேய்த்து இருகண்களின் மீது மெதுவாக வைத்து இருக்கவும்.

    கண்கள் நமக்கும் வெளி உலகிற்குமான தொடர்பை "பார்த்தல்" என்ற செயலின் மூலம் ஏற்படுத்துகிறது. தெளிவான கண்பார்வை, ஆரோக்கியமான கண்கள் இவை நம் வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாகும். கண்கள் மிகவும் நுட்பமான வடிவமைப்பும் மென்மையான தன்மையும் கொண்டுள்ளன. ஒரு சிறு துரும்பு நம் கண்களில் விழுந்துவிட்டால் கூட நம்மால் அதை தாங்கமுடிவதில்லை. சிறுது நேரம் தடுமாறி விடுகிறோம்.

    கண்பார்வை கூர்மை என்பது நம் வாழ்க்கை தரத்தையும்,நாம் அன்றாட வாழ்வில் செய்யும் செயல்களின் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது. நம் கண்களை நலமுடன் பேணிக்காப்பது நம் கடமையாகும்.

    நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு சூழ்நிலைகளாலும், புற மற்றும் அக ஆரோக்கிய குறைபாட்டாலும் பல்வேறு பிணிகள் நம் கண்களை பாதிக்கின்றது. அவ்வாறு வெகுவாக காணப்படும் சில கண் பிரச்சனைகளுக்கான எளிய வீட்டு வைத்திய முறைகளையும், பயிற்சிகளையும் இக்கட்டுரையில் காண்போம்.

    ஆரம்ப நிலையில் கண்களில் ஏற்படும் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தாவிடில் அது பிற்காலத்தில் கண்களின் ஒளித்திறனை பாதிக்கக்கூடும். இதனால் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. அந்த வகையில் ஆரம்பகட்ட கண் நோய்களை கீழ்வரும் சில எளிய மருந்துகளை வீட்டிலேயே தயாரித்து உபயோகித்தால் பயன் தரும்.

    கண் குளிர்ச்சிக்கு தைலம்:-

    மிளகு, சீரகம், சுக்கு 1 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்யவும். கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி 1 பிடி எடுத்து அரைத்துக் கொள்ளவும். வெட்டிவேர், நன்னாரிவேர், கஸ்தூரி மஞ்சள் இவைகளை பொடி செய்து கொள்ளவும். 50 மி.லி. பாலுடன் எலுமிச்சை சாறு 5 மி.லி. விட்டு, அரைத்து வைத்த விழுது மற்றும் பொடியை கலக்கவும். 100 மி.லி. நல்லெண்ணயுடன் இந்த பாலை கலந்து அடுப்பிலேற்றி சிறுதீயிலிட்டு தைலமாக காய்ச்சவும். ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

    வாரம் ஒருமுறை 10 முதல் 20 மி.லி. தைலம் எடுத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து இளஞ்சூடான நீரில் தலைக்கு குளிக்கவும்.

    தீரும் நோய்கள்:-

    உடல் சூடு, கண்களில் சிவப்பு தன்மை, கண் எரிச்சல், கண் புகைச்சல், பார்வை மங்கல் தீரும்.

    கண்நோய்க்கு மஞ்சள் துணி:-

    மஞ்சள் கலந்த நீரில் துகள்கள் இல்லாமல் வடிகட்டி வைத்து அதில் மெல்லிய சுத்தமான காட்டன் துணியை நனைத்து காயவைத்து கண்களை துடைக்கவும், ஒற்றி எடுக்கவும் பயன்படுத்தலாம். இதனால் கண் சிகப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீரொழுகுதல் தீரும்

    நேத்திர பூண்டு தைலம்:

    நேத்திர மூலிகையின் இலையை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு இலை மூழ்கும் அளவு நல்லெண்ணைய் ஊற்றி ஒரு துணியால் வேடு கட்டி வெயிலில் 10 நாட்கள் வைத்து பின் வடிகட்டி அந்த தைலத்தை இரண்டு துளிகள் விட்டு வர கண்படலம், பார்வை மங்கல் குணமாகும்.

    பொன்னாங்கண்ணி கீரை:

    பொன்னாங்கண்ணி கீரையை அரிந்து கொள்ளவும். பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சிறிதளவு பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகு, சீரகம், உப்பு சேர்த்து வதக்கவும். பின் அரிந்து வைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து மூடிவைத்து வேக விடவும். கீரை நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

    கீரையை சூடான சாதத்தில் பிசைந்து தினமும் ஒரு முறை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை கூர்மையடையும். விழித்திரையில் உண்டாகும் படலம் கரையும்.

    கண் வறட்சி சரியாக:

    தினமும் 5 முதல் 7 கறிவேப்பிலைகளை பச்சையாக மென்று தின்று வந்தால் கண்களின் வறட்சி சரியாகும்.

    கண்நோய்க்கு படிகார நீர்:

    தண்ணீர் - 250 மி.லி.

    படிகாரம் - 5 கிராம்

    படிகாரத்தை ஒரு துணியில் வைத்து முட்டையாக கட்டி பனங்கள் ஆவியில் காட்டி எடுக்க படிகாரம் சுத்தியாகும். சுத்தி செய்த படிகாரத்தை பொடி செய்து தண்ணீரில் கலந்து இரு முறை வடிகட்டினால் படிகார நீர் தயார். இதை ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம். இதனை நாம் கண்களுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தலாம். காலை இரவு 2 சொட்டுகள் கண்களில் விடலாம். கண்களை கழுவ இதே நீரை பயன்படுத்தலாம்.

     

    இயற்கை மருத்துவர் நந்தினி, 9500676684

    கண் கூச்சம் சரியாக:

    5 மி.லி. தேனுடன் 5 மி.லி. வெந்நீர் கலந்து தினமும் இருவேளை 2 சொட்டுகள் கண்களில் விட கண் கூச்சம் சரியாகும். கண்களில் உள்ள தசைகள் பலம் பெறும்.

    கண்கள் பலம் பெற:

    தான்றிக்காயை மஞ்சள் இழைப்பது போல இழைத்து கண்களை சுற்றி பற்றிட கண்கள் பலம் பெறும். கண்பார்வை கூர்மையடையும்.

    கண் அழற்சி இருந்தால்:

    படுக்கைக்கு போகும்முன் உள்ளங்காலில் பசுவின் நெய்யை நன்றாக தேய்த்து, தவிட்டை பொருத்தி உறங்கி எழுந்து தண்ணீர் விட்டு கழுவித் துடைத்து இழைத்த சந்தனத்தை பூசி வரலாம்

    சித்த மருத்துவத்தில் கண்களுக்கான மருந்துகள்:

    இளநீர் குழம்பு

    பழக்கிராம்பு பக்குவ வெண்ணெய்

    கண்டு பற்பம்

    நாரிகேளஞ்சனம்

    மேற்கண்ட மருந்துகளை சித்த மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று பின் உபயோகிக்கலாம்.

    கண்களின் திறனை அதிகரிக்கும் உணவுகள்:

    கேரட், முட்டை, மீன், மஞ்சள், சர்க்கரைவள்ளிகிழங்கு, தக்காளி, புராக்கோலி, பப்பாளி, பாதாம் பருப்பு, பருப்பு வகைகள், கீரை வகைகள், ஆரஞ்சு போன்றவை.

    கண்கள் ஒளி பெற நிலவை பார்த்தல்:

    கைவிரல்களை பலகணி போல் பின்னிக்கொண்டு இரவில் சந்திரனை அவ்விரலின் இடைவெளியில் சிறிது நேரம் பார்த்திருந்து பிறகு கண்ணில் தண்ணீரை விட்டு கழுவிட்டு வர கண்ணுக்கு ஒளியுண்டாகும்.

    திராடகா பயிற்சி:

    ஒரு விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை இருண்ட அறையில் ஏற்றி வைத்து அதை கண்களுக்கு முன்பாக ஒரு நேர்கோட்டில் வைத்திருக்க வேண்டும் இமைக்காமல் சில நொடிகள் திரியின் மேலே உள்ள சுடரின் பிரகாசமான பகுதியை பார்க்க வேண்டும் பிறகு உள்ளங்கைகளை தேய்த்து சூடாக்கி கண்களின் மீது வைத்து மெதுவாக கண்களை திறக்கவும் இந்த பயற்சியால் கண்கள் அமைதி பெறுகின்றன கண்பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

    கண்களுக்கு பயிற்சி:

    தொடர்ச்சியாக கண்களை உபயோகப்படுத்தும்போது கண்கள் சோர்வடையும். அப்போது இரண்டு உள்ளங்கைகளையும் 10 விநாடிகள் நன்றாக சூடு பறக்க தேய்த்து இருகண்களின் மீது மெதுவாக வைத்து இருக்கவும். இதை 2 முதல் 5 நிமிடங்கள் செய்யலாம். இதற்கு பால்டிங் என்று பெயர்.

    கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இப்படி செய்வதால் கண்கள் வறட்சி அடைவதை தவிர்க்கலாம். கண்களை இறுக்கி பிடித்தலை 5 விநாடிகள் செய்யலாம். ஒரு பொருளை 10 இன்ச் தூரத்தில் வைத்து இருந்து, அதை கண் இமைக்காமல் உற்றுநோக்கி பின் 6 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு பொருளை உற்றுநோக்க வேண்டும். ஒருவர் 20 நிமிடம் தொடர்ந்து கணினி அல்லது கைபேசி திரையை பார்த்து கொண்டிருந்தால் 20 அடி துரத்தில் உள்ள பொருளை 20 நொடிகள் உற்று நோக்கவேண்டும்.

    கண்களை மேலும் கீழும் மற்றும் வலது, இடது பக்கங்களிலும், கடிகார சுழற்சி முறை, எதிர் கடிகார சுழற்சி முறையில் உருட்டி உருட்டி தலையை ஆட்டாமல் சுற்றி பார்க்கவும். பின் கண்களை இறுக்கி பிடித்து சிமிட்டவும்.

     

    கண்களுக்கு 8 பயிற்சி:

    ஒரு சுவரிலிருந்து 10 அடி துரத்தில் நின்று கொண்டு, கண்களை வைத்து சுவரில் ஒரு புள்ளியை மையமாக கொண்டு 8 என்ற எண்ணை போட வேண்டும். இப்படி செய்வதால் கண் தசைகளுக்கு பலம் கிடைக்கிறது.

    • சில பெண்களுக்கு இயற்கையிலேயே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம்.
    • குழந்தையின்மை சிகிச்சைக்காக வெறும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு சில விஷயங்களை நிர்ணயிக்க முடியாது.

    குழந்தையின்மை பிரச்சினையில் பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்களில் ஒன்று, ஆன்ட்ரல் பாலிக்கில் கவுன்ட் (ஏ.எப்.சி) என்பதாகும். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது, பெண்களின் சினைப்பையில் முட்டைகளின் இருப்பை குறிக்கும் முக்கிய விஷயமாகும்.

    இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தால் தான், அந்த பெண்களால் நல்ல முறையில் கருத்தரிக்க முடியும். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக உள்ள பெண்களுக்கு முட்டைகளும் குறைவதால் கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. பெண்களுக்கு ஆன்ட்ரல் பாலிக்கல் எண்ணிக்கை குறைவது ஏன்? அவர்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? அவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

     

    சினைப்பையில் நீர்க்கட்டிகளை தெரிந்து கொள்வது எப்படி?

    ஆன்ட்ரல் பாலிக்கில் என்பது கருமுட்டைகள் இருக்கும் நீர்ப்பைகள் என ஏற்கனவே அறிந்தோம். ஆனால் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை கணக்கீடு செய்யும் போது சில நேரங்களில் எண்ணிக் கையில் சில மாற்றங்கள் ஏற்படும். இதில் சில நீர்க்கட்டிகளாக இருக்கும். இந்த நீர்க்கட்டிகளில் முட்டைகள் இருக்காது.

    இவற்றை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்றால், அதனுடைய அளவில் மாறுபாடுகள் இருக்கும். பல நேரங்களில் அதன் வடிவத்தில் கூட மாறுபாடு இருக்கலாம். சில நேரம் அது ஒரே அளவில் இருந்து கொண்டே இருக்கும். பெரிதாக மாறாது. மேலும் முட்டைகளின் வளர்ச்சியுடன் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். எனவே இவை ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையில் சேராது.

    ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பெண்களுக்கு அது எதனால் குறைகிறது என்று பரிசோதித்து பார்த்தால் அதற்கு பல காரணங்கள் உள்ளன. சினைப்பையை பாதிக்கின்ற நோய்கள், தொற்றுக்கள், எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கர்ப்பப்பை உள்சுவர் வெளிவளர்ச்சி ஆகிய பிரச்சினைகளால் பெண்களுக்கு ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறையலாம்.

    சில பெண்களுக்கு இயற்கையிலேயே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம். அதனால் வயது குறைவாக உள்ள பெண்களுக்கும் கூட முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். எனவே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருக்கிற பெண்கள் நல்ல பலன் கொடுக்கும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள திட்டமிடுவது மிக முக்கியமான அடிப்படையாக இருக்க வேண்டும்.

    சினைப்பைகளில் புத்துணர்ச்சி முறையில் சிகிச்சை:

    அந்த வகையில் இளம்வயது பெண்களுக்கு இயல்பான எண்ணிக்கையில் சினைப்பையில் கருமுட்டைகள் இருந்தால் அவர்களுக்கு ஹார்மோன் கொடுத்து சிகிச்சை அளிப்போம். அந்த ஹார்மோனை குறைந்த அளவில் கொடுப்போம். அப்போது அவர்களுக்கு நன்கு வளர்ச்சி அடைந்த 15 முட்டைகள் வரை கிடைக்கும். அதில் 8 முதல் 10 கரு, நல்ல கருவாக உருவானால் ஐ.வி.எப். வெற்றி விகிதம் 90 சதவீதம் கிடைக்கும்.

    அந்த வகையில் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது மிகவும் முக்கியம். கருத்தரிப்புக்கு அதுதான் ஒரு முக்கியமான அடிப்படையாக கருதப்படும். இந்த பெண்களுக்கு முக்கியமாக முட்டைகள் இருப்பு குறைவாவதற்கான காரணங்களை சரியாக தெரிந்து கொண்டு அந்த காரணங்களை சரிசெய்து ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் போது ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

    ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக உள்ள இளம் வயது பெண்களுக்கு சினைப்பைகளில் புத்துணர்ச்சி முறையில் சிகிச்சை அளிக்கலாம். அதாவது பிரீஆன்ட்ரல் பாலிக்கில் நிலையில் இருக்கிற ஆரம்ப நிலை முட்டைகளை அதிகரிப்பதற்கு ஸ்டெம் செல், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா செலுத்தி சிகிச்சை அளிக்கும் போது ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலமாக ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு முறைகளை செய்வதற்கு ஏற்ப கருமுட்டைகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். முட்டைகளின் தரமும் நன்றாக இருக்கும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கருமுட்டைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஸ்டெம்செல்:

    முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் சில வழிமுறைகளும் உள்ளன. அதற்கு ஓவரியன் ஸ்டிமுலேசன் (சினைப்பை தூண்டுதல்) என்று பெயர். இதில் இரட்டை தூண்டுதல் முறையில் கருமுட்டைகளை அதிகமாக வெளியே எடுத்து உறை நிலையில் வைத்து குழந்தை பேறு பெறுவதற்கான சிகிச்சைகளை அளிக்க முடியும்.

    இந்த வகையில் பெண்களுக்கு ஐ.வி.எப். கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை செய்யும்போது, அதன் பலன் சீராக வருவதற்காக மருந்துகள் அளவை நிர்ணயிப்பதற்கும் இந்த வழிமுறைகளை முக்கியமான விஷயமாக கருதுகிறோம். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களின் சினைப்பைகளின் செயல்பாடு மற்றும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை வைத்து தான் முடிவு எடுப்போம்.

    இதன் மூலமாக கருமுட்டைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, கருத்தரிப்பதற்கான திறனை நிர்ணயிக்க முடியும். ஸ்டெம்செல், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா ஆகியவற்றை செலுத்தி சிகிச்சை அளிக்கும்போது பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது பிரீஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை மற்றும் கருமுட்டைகள் குறைவாக இருக்கும் பெண்களுக்கு முட்டைகள் வளர்ச்சி அடைவதற்கான தன்மைகளும் குறைவாக இருக்கும்.

    அந்த முட்டைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இந்த ஸ்டெம்செல், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா ஆகியவை முட்டைகள் வளருவதற்கு தடையாக உள்ள காரணிகளை சரிசெய்து முட்டைகளின் வளர்ச்சியை தூண்டி அதனால் கரு முட்டைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அடிப்படையான வழிமுறையாக அமைகிறது.

    அந்த வகையில் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவாக இருக்கிற, முட்டைகள் இருப்பு குறைவாக இருக்கிற பெண்களுக்கு முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சினைப்பை புத்துணர்ச்சி முறை மூலமாக முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை யையும் அதிகப்ப டுத்த முடியும். இவை அனைத்துமே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணி க்கை குறைவாக இருக்கும் பெண்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

    இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை கண்டிப்பாக பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் சினைப்பை நோய் உள்ள பெண்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு 35 மற்றும் 40-க்கு மேலே இருக்கும். இந்த அளவுக்கு ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருக்கிற பெண்களுக்கு ஹைப்பர் ரெஸ்பான்ஸ் என்று சொல்வோம். சினைப்பையில் முட்டைகள் வளர்ச்சி அதிக எண்ணிக்கையில் உருவாகி, அதனால் இந்த ஹைப்பர் ரெஸ்பான்ஸ் ஒரு பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் பெண்களுக்கு வயிறு வீக்கம், அதிகமான முட்டைகள் வளர்ச்சி, ஹைப்பர் தூண்டுதல் ஆகியவை அதிகமாக ஏற்படும்.

     

    நல்ல முறையில் குழந்தை பேறு பெறுவது சாத்தியம்:

    முட்டைகளின் எண்ணிக்கை, முட்டைகளின் கருத்தரிக்கும் திறன், வெற்றி விகிதம் எவ்வளவு என்று கணிப்பது, எவ்வளவு ஊசி மருந்துகள் பயன்படுத்தலாம் என்பது பல விஷயங்களுக்கும் அடிப்படையாக அமைவதே இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை தான்.

    ஆனால் குழந்தையின்மை சிகிச்சைக்காக வெறும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு சில விஷயங்களை நிர்ணயிக்க முடியாது. சிகிச்சைக்கு வரும் பெண்களின் வயது மற்றும் அவர்களின் ஏ.எம்.எச். எனப்படும் ஆன்டி முல்லேரியன் ஹார்மோன் அளவு இவை இரண்டும் முக்கியமாக கணிப்பதற்கான குறியீடு ஆகும்.

    பெண்களின் வயது, ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை, ஏ.எம்.எச். அளவு ஆகிய மூன்றையும் வைத்து கணித்து அதன் மூலமாக ஐ.வி.எப். சிகிச்சை அளிக்கும் போது வெற்றி விகிதம் அதிகமாகும். ஆரோக்கியமான முதிர்ச்சி அடைந்த முட்டைகள்கிடைக்கும். அதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். இதை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

    எனவே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது கரு முட்டைகளின் வளர்ச்சியை சரியாக நிர்ணயிக்கக்கூடியது, கணிக்கக் கூடியது. ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை ரொம்ப அதிகமாக இருக்கிற பிசிஓடி பெண்களுக்கு அதனை சரி செய்வதற்கும் முக்கியமான வழிமுறைகள் உண்டு.

    அந்த வகையில் ஒவ்வொரு பெண்களின் ஆன்ட்ரல் பாலிக்கிலும் அவர்களின் முட்டைகளின் இருப்பை குறிக்கிறது. இதனை சீராக கவனித்து சரி செய்தால் இயற்கையாகவோ அல்லது ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு முறை மூலமாகவோ நல்ல முறையில் குழந்தை பேறு பெறுவது சாத்தியமாகும்.

    • சிவபெருமான் மீதான நூல்களை கற்று தேர்ந்ததால் அவரிடம் சைவம் தொடர்பான ஒழுக்கங்கள் மிகுதியாக இருந்தன.
    • திருச்செந்தூர் கலம்பகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த கருத்துக்கள் நிறைந்தது.

    குமரகுருபரரை பேச வைத்து கந்தர்கலி வெண்பாவை இயற்ற வைத்து நாடு முழுவதும் புகழ் பெற செய்த திருச்செந்தூர் முருகன், பகழி கூத்தர் என்பவரை ஆட்கொண்டு திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழை பாட வைத்தான். இவர்கள் இருவர் மட்டுமின்றி மேலும் பல புலவர்களை திருச்செந்தூருக்கு வரவழைத்து பாடல்கள் இயற்ற முருகன் அருள்புரிந்த நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன.

    அதில் சுவாமிநாத தேசிகர் வரலாறு சற்று வித்தியாசமானது. சுவாமிநாத தேசிகர் தென் தமிழ்நாட்டில் பிறந்தவர். இவருக்கு இளம் வயதிலேயே திருவாவடுதுறை ஆதீனத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கு சென்று அவர் ஆன்மீக நூல்களை கற்று தன்னை மேம்படுத்திக் கொண்டார்.

    அவரது அர்ப்பணிப்பு உணர்வை கண்ட திருவாவடுதுறை ஆதீனம் அவருக்கு தீட்சை அளித்தார். அதோடு சைவ சமய கோட்பாடுகளில் மேம்பாடு பெற செய்தார். இதன் காரணமாக சுவாமிநாத தேசிகர் சிறு வயதிலேயே தினசரி ஆன்மீக கடமைகளை நேர்மையாக செய்து வந்தார்.

    சிவபெருமான் மீதான நூல்களை கற்று தேர்ந்ததால் அவரிடம் சைவம் தொடர்பான ஒழுக்கங்கள் மிகுதியாக இருந்தன. அதுமட்டுமின்றி அவரிடம் இயல்பாகவே மற்றவர்களிடம் அன்பு காட்டும் குணமும் இருந்தது. இதன் காரணமாக அவர் திருவாவடுதுறை மடத்தில் ஆதீன தேசிகரிடம் மிக சிறந்த தொண்டராக திகழ்ந்தார்.

    அவருக்கும் திருநெல்வேலியில் வாழ்ந்த மயிலேறும் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. மயிலேறும் பெருமாள் பிள்ளை தமிழில் கல்லாடம் எனும் நூலுக்கு உரை எழுதியவர். சுவாமிநாத தேசிகரின் சமய ஒழுக்கத்தை கண்டு அவர் மிகவும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

    சுவாமிநாத தேசிகருக்கு மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் மயிலேறும் பெருமாள் பிள்ளை மனதில் தோன்றியது. எனவே திருவாவடுதுறை ஆதீனத்திடம் அனுமதி பெற்று அவரை தம்முடன் திருநெல்வேலிக்கு அழைத்து சென்றார். அங்கு தனது வீட்டில் தங்க வைத்து ஒவ்வொரு நாளும் சைவ சமய நூல்களை கற்றுக்கொடுத்தார்.

    ஒவ்வொரு நூல் படித்து முடித்ததும் சைவ சமய கோட்பாடுகளின் நியாயமான சந்தேகங்களை கேட்கச் சொல்லி மயிலேறும் பெருமாள் பிள்ளை தெள்ளத் தெளிவான விளக்கங்களை அளித்தார். இதன் காரணமாக மிகக்குறுகிய காலத்திலேயே சுவாமிநாத தேசிகர் சைவ சமயத்தில் பட்டை தீட்டிய வைரமாக மின்னத் தொடங்கினார்.

    திருநெல்வேலி அருகே செப்பறை என்ற ஊரில் வாழ்ந்த கனகசபாபதி சிவாச்சாரியார் என்பவர் இதை அறிந்து ஆச்சரியப்பட்டார். சமஸ்கிருதத்தில் சிறந்த புலமைப்பெற்று இருந்த கனகசபாபதி சிவாச்சாரியார் நெல்லைக்கு சென்று சுவாமிநாத தேசிகரை சந்தித்து சமஸ்கிருத மொழியில் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவி செய்தார்.

    இதன் காரணமாக சுவாமிநாத தேசிகர் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மிகச்சிறந்த புலமைப் பெற்றவராக மாறினார். திருநெல்வேலியில் சைவ சமய பாடங்களை தெளிவாக கற்று தேர்ந்த பிறகு அவர் மீண்டும் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சென்றார்.

    அவரது சிறப்புகளை அறிந்து திருவாவடு துறை ஆதீன தம்பிரான் மகிழ்ச்சி அடைந்து ஆசி வழங்கினார். அதோடு புதிய நூல்களை இயற்ற அறிவுறுத்தினார். இதன் காரணமாக பல அரிய செய்திகள் கொண்ட "இலக்கண கொத்து" என்ற நூலை சுவாமிநாத தேசிகர் எழுதி முடித்தார். "தச காரியம்" என்ற ஞான நூலையும் எழுதினார். இதையடுத்து அவருக்கு 'ஈசான தேசிகர்' என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

    அவரை மேலும் சிறப்பிக்கும் வகையில் திருநெல்வேலிக்கு சென்று அங்குள்ள திருவாவடுதுறை மடத்தின் பணிகளை கவனிக்குமாறு ஆதீனம் உத்தரவிட்டார். அதை ஏற்று சுவாமிநாத தேசிகர் மீண்டும் திருநெல்வேலிக்கு வந்தார். அதன் பிறகு அவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகள் செய்ய தொடங்கினார்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருச்செந்தூருக்கு சென்று முருகப் பெருமானிடம் மனம் விட்டு பேசுவதை அவர் வழக்கத்தில் வைத்திருந்தார். விசேஷ நாட்கள் மற்றும் உற்சவங்கள் நடக்கும் விழா நாட்களிலும் திருச்செந்தூருக்கு செல்வதை சுவாமிநாத தேசிகர் விரும்பினார்.

    அப்படி ஒரு தடவை அவர் திருச்செந்தூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகள் செய்தார். கருவறை எதிரே நின்று முருகனுடன் மனதுக்குள் உரையாடினார். முருகனோடு இரண்டற கலந்து விட்ட உணர்வை அவர் அப்போது பெற்று இருந்தார். அந்த சமயத்தில் அவரது காதுக்குள் ஒருவர் பேசியது போன்று குரல் ஒலித்தது.

    "என் மீது கலம்பகம் பாடலாமே?" என்று அந்த குரல் கூறியது. சுவாமிநாத தேசிகருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. தனது காதுக்குள் வந்து பேசுவது யார் என்று திரும்பிப் பார்த்தார். யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்த் தார். தனது அருகில் ஒருவர்கூட இல்லை என்பதை உணர்ந்து மெய் சிலிர்த்தார்.

    முருகனை பார்த்தார். முருகன் சிரிப்பது போன்று அவருக்கு தோன்றியது. கலம்பகம் பாட சொன்னது முருகன்தான் என்பதை அவர் அப்போது உணர்ந்தார். அந்த நிமிடமே சுவாமிநாத தேசிகர் மனம் உருகி, கண்ணீர் மல்க திருச் செந்தூர் முருகன் மீது கலம்பகம் எனும் பாமாலை பாடத் தொடங்கினார்.

    கலம் என்றால் 12 என்று அர்த்தம். பகம் என்றால் 6 என்று அர்த்தம். அதாவது 18 உறுப்புகளை கொண்ட சிற்றிலக்கிய வகைகளில் கலம்பகம் ஒன்று. இதை எல்லோராலும் பாடி விட முடியாது. கவிதைகளை சுவைப்பட பாடினால்தான் கலம்பகம் உருவாகும்.

    திருச்செந்தூர் முருகன் ஆசைப்பட்டபடி சுவாமிநாத தேசிகர் கலம்பகம் பாடி முடித்தார். அந்த நூலுக்கு திருச்செந்தில் கலம்பகம் என்றும் அவர் பெயர் சூட்டினார். அந்த கலம்பகம் நூலை திருச்செந்தூர் ஆலயத்தில் வெகுவிமரிசையாக அரங்கேற்றமும் செய்தார்.

    இதை அறிந்த மற்ற தமிழ் புலவர்கள், சான்றோர்கள் திருச்செந்தூர் கலம்பகம் நூலை வாங்கி ஆவலுடன் படித்தனர். அந்த கலம்ப கத்தில் இருந்த பக்தி சுவையையும், இலக்கிய சுவையையும் கண்டு பிரமித்துப் போனார்கள். இது போன்று இன்னொரு கலம்பகம் நூலை எவராலும் இயற்ற முடியாது என்று பாராட்டி புகழ்ந்தனர்.

    திருச்செந்தூர் முருகன் மீது கலம்பகம் பாடப்பட்டு இருப்பது போல தமிழகத்தில் பல்வேறு ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் மீதும் ஏராளமான கலம்பகம் நூல்கள் பாடப்பட்டு இருக்கின்றன. ஆனால் திருச்செந்தூர் முருகன் மீது சுவாமிநாத தேசிகர் பாடிய கலம்பகம் நூல் மட்டுமே இன்றுவரை தனித்துவம் கொண்டதாக இருக்கிறது.

    இதன் காரணமாகத்தான் திருச்செந்தில் கலம்பகம் நூலில் உள்ள பாடல்களில் பக்தி சுவைமிக்க 30 பாடல்களை தேர்வு செய்து அந்த பாடல்களை ஒவ்வொரு நாள் இரவும் திருச் செந்தூர் முருகன் பள்ளியறைக்கு செல்லும்போது ஓதுவார்கள் பாடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இந்த 30 பாடல்களை தினமும் மனம் உருகி பாடுபவர்களும் இருக்கிறார்கள்.

    திருச்செந்தூர் கலம்பகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த கருத்துக்கள் நிறைந்தது. முருகனை சிறப்பித்து பாடும் வரிகள் சிந்தனைக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளன. உதாரணத்துக்கு சில..

    * அலைகளை உடைய கடலைப் போல ஏழுமடங்கு மிகுதியாக உன் கருணையை அடியார்களிடம் செலுத்துகிறாய்.

    * நீ விண்ணாகவும், மண்ணாகவும் இருக்கின்றாய் எல்லார்க்கும் தலைவன் நீ செம்மேனியன் நீ முதற்பொருளாகவும் ஒளி வடிவாகவும் விளங்குகின்றாய்.

    * சுறா மீன்களை வீசும் சங்குகள் ஊரும் கடற்றுறையான திருச்செந்தூரில் இருக்கும் கடப்பம் மாலை அணிந்தவனே எனக்கு உன் தாமரை போன்ற மலரடிகளை தருக என வணங்கி நிற்பேன்.

    * ஊழ்வலியால் கெட்டாலும் வறுமையால் இரந்தாலும் அறிவிலிகளாய் அவன் மீது சொல்லும் மந்திரத்தை மறந்தாலும் அவன் இருக்கும் செந்தில் பதிவை வாயால் கூறுவோர் என்றும் வீடுபேற்றை அடைந்து மகிழ்வர்.

    * எழுதிய சித்திரத்திலுளள விண்மீனை நெல் பொரி என எண்ணிக் கொத்தித் தின்னும் அழகிய கால்களையே ஆயுதமாகக் கொண்ட கோழிக் கொடியை ஏந்திய பெருமானே, குடுமித் தலையை உடைய கூற்றுவன் எதிர்த்து வரும்போது அவனை நெருக்கும் வல்லமை தரும் நீ இருக்கும் செந்தில் பதியும் என் நெஞ்சகத்தே உள்ளது.

    * செந்தில் பதியில் இருக்கும் முருகப் பெருமானைத் தொழாதவர் கொடும்பசியால் பிறரைத் தொழுது சோர்வார்கள்.

    * திருச்செந்தூரில் தென் கலையாகிய முத்தமிழையும் முடமுனி அகத்தியருக்கு ஓதிய குமரகுருபரனே, வறியோர்க்கு கொடுத்து மகிழ்ந்தலையும் ஆறு எழுத்து மந்திரம் ஓதலையும கருதாதவர் பலர் உளர். உன் திருவடிகளை வணங்கவும் மூலாதாரம் முதலிய ஆறு இடங்களையும் நீ பிரியாமல் இருக்கும் உன் கருணை வெள்ளத்தை எனக்கு அருள்க.

    இப்படி நூறு விதமான கருத்துகளை திருச்செந்தில் கலம்பகம் நூல் கொண்டிருக்கி றது. திருச்செந்தூர் கலம்பகம் நூலை யார் ஒருவர் முழுமையான மனதுடன் உணர்வு பொங்க படிக்கிறாரோ அவருக்கு பிறவிப்பி ணிகள் நீங்கி முக்தி கிடைக்கும் என்று சுவாமிநாத தேசிகர் தனது கடைசிப் பாடலில் நிறைவு செய்துள்ளார். திருச் செந்தூர் முருகன் அருளால் உருவான இந்த கலம்பகம் நூல் மிக மிக அரிய பொக்கிஷமாக முருகப் பக்தர்களால் கருதப்படுகிறது.

    இந்த நூலின் சிறப்பை கருத்தில் கொண்டு கடந்த 2008-ம் ஆண்டு சென்னை குமரன் குன்றம் திருப்புகழ் மன்றத்தினர் திருச்செந்தில் கலம்பகம் நூலை பதிப்பித்து வெளியிட்டனர். இந்த நூலை படித்தால் திருச்செந்தூர் முருகன் செய்யும் அற்புதத்தை வாழ்வில் உணர முடியும் என்ற நம்பிக்கையும் பக்தர்கள் மத்தியில் உள்ளது. பல பக்தர்கள் வாழ்வில் திருச்செந்தில் கலம்பகம் நூல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    நீங்களும் படியுங்கள், திருச்செந்தூர் முருகன் உங்கள் வாழ்விலும் மாற்றம் செய்வதை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். திருச்செந்தூர் முருகன் செய்த இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • சைதாப்பேட்டையில் புது வீடு கட்ட முடிவு செய்த போது நிறைய மாடல்கள் காட்டினார்கள்.
    • என்னதான் நடக்கிறது என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை.

    நான் சின்னவளாக இருந்தபோது வீட்டில் நிறைய பூச்செடிகள் இருந்தது. அதில் பூத்து கிடக்கும் பூக்களை பறிக்கும் அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை.

    ஆனால் தலையில் பூ வைப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். பூ கட்டவும் எனக்கு தெரியும். வீட்டில் இருந்து ஸ்டூலை எடுத்து வந்து அதில் ஏறி நின்று பூக்களை பறித்து கட்டி தலையில் வைத்து கொண்டு பள்ளிக்கூடம் செல்வேன். அப்போது நாங்கள் கோடம்பாக்கத்தில் சிறிய வீட்டில் தான் இருந்தோம்.

    தி.நகரில் உள்ள பள்ளியில் தொடக்க கல்வி படித்தேன். வளர்ந்த பிறகும் அந்த தோட்டத்து ஆசையும் என்னை தொடர்ந்தே வந்தது. அழகான வீடு கட்டணும், வீட்டை சுற்றி தோட்டம் இருக்கணும் என்பது என் ஆசையாக இருந்தது.

    சைதாப்பேட்டையில் புது வீடு கட்ட முடிவு செய்த போது நிறைய மாடல்கள் காட்டினார்கள். அதில் தற்போது நாங்கள் குடியிருக்கும் கேரள மாடல் பிடித்திருந்தது. எனவே அந்த மாடலில் வீட்டை தேர்வு செய்து கட்டினோம்.

    எங்கள் வீட்டில் 2 தெரு நாய்களை ஆசை ஆசையாக வளர்த்தேன். அதில் ஒரு நாய்க்கு 'பிராந்தி என்று பெயர். பெயரை கேட்டால் காமெடியாகத்தான் தெரியும். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. என் அப்பாவுக்கு பிடித்த மதுபானம் பிராந்தி. அதனால் அந்த நாய்க்கும் பிராந்தி என்று பெயர் வைத்து விட்டார். அதை பார்த்ததும் நானும் விளையாட்டாக மற்றொரு நாய்க்கு 'விஸ்கி' என்று பெயர் வைத்தேன். ஆனால் அது ஆண் நாய். கம்பீரமாக இருக்கும் எனவே டைகர் என்றே அழைப்பேன்.



    விஜய்யின் 'தெறி' படத்தில் என் மகள் நைனிகா நடிக்க தொடங்கிய கால கட்டம் அது. கோவாவில் ஷூட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கும் நைனிகாவுக்கும் பட தயாரிப்பு நிறுவனம் விமான டிக்கெட் போட்டு இருந்தது. படப்பிடிப்புக்கு புறப்படும் நாளில் வீட்டில் சமையல்காரர்களும் இல்லை. அம்மா மட்டும் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவரையும் நானே டிக்கெட் போட்டு என்னோடு கோவாவுக்கு அழைத்து சென்றேன்.

    நைனிகா சினிமாவில் அறிமுகமான படம் அது. அதிலும் அவள் மிகவும் சின்ன பொண்ணு. எனவே எப்படி நடிக்கப் போகிறாளோ என்று எனக்குத்தான் ஒரே பதட்டமாக இருந்தது. படப்பிடிப்பின் போது அருகில் இருந்தே கவனித்து வந்தேன். அவளுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது ரொம்ப சின்ன டயலாக்கு தான். அதை முன்கூட்டியே அறையில் வைத்து பேச கற்றுக்கொடுத்தேன். ஆனாலும் படப்பிடிப்பின் போது சிறுபிள்ளைதனமாகத்தான் இருந்தாள்.

    ஒரு பெரிய நட்சத்திர நடிகர் விஜய். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குழந்தை தானே என்று நினைத்து எல்லாவற்றையும் சமாளித்து அவளோடு நடித்தது எனக்கு பிரமிப்பை கொடுத்தது. கோவாவில் நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபோது சென்னையில் பெருமழை பெய்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருக்கிறது... என்று தினம் ஒரு செய்தி வந்து கொண்டிருந்தது.

    எங்கள் வீட்டிற்கு எதிர்புறத்தில் இருக்கும் அபார்ட்மென்டில் நைனிகாவின் வகுப்பு தோழியின் வீடு இருக்கிறது. அவர்களிடம் போன் செய்து தான் நிலவரங்களை கேட்டு கொண்டிருந்தேன்.

    அதன் பிறகு மின்சாரமும் தடைபட்டதால் செல்போன் சுவிட்ச் ஆகியிருக்கிறது. எனவே அவர்களிடம் பேச முடியவில்லை. அப்போது வீட்டு வேலைக்காரர்கள் என்னை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்குள் வெள்ளம் வந்து விட்டதாகவும் எங்கள் வீட்டில் தங்கி கொள்ளலாமா என்று அனுமதி கேட்டார்கள்.

    பரவாயில்லை போய் தங்கி கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அன்று இரவில் மீண்டும் போன் செய்து 'அம்மா உங்கள் வீட்டுக்குள்ளும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது' என்றார்கள்.

    ரன்னிங் கமென்ட்ரி போல் மீண்டும் போன் செய்து 'அம்மா போர்டிக்கோவில் இருக்கும் உங்கள் கார்களும் மூழ்கி விடும் போல் இருக்கிறது. நாய்கள் இரண்டும் தண்ணீரில் மூழ்கி செத்து விடக் கூடாது என்று அவிழ்த்து விட்டு விட்டேன். நாங்களும் இங்கு தங்க முடியாது. வேறு எங்காவது செல்லப்போகிறோம் என்று கூறினார்கள்.

    என்னதான் நடக்கிறது என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை. பக்கத்து தெருவில் குடியிருக்கும் லெட்சுமி ஆன்டிக்கு போன் செய்து 'ஆன்டி, வெள்ளம் புகுந்து விட்டதாக கூறுகிறார்கள். அங்கு என்ன தான் நடக்கிறது? என்றேன். அவர் உடனே நீ எங்கே இருக்கிறாய்? என்றார் என்னிடம்.

    நான் கோவாவில் இருக்கிறேன் என்றதும் தப்பித்தீர்கள். அங்கேயே பத்திரமாக இருங்கள். நான் இப்போது தான் படகு மூலம் வெளியேறி கொண்டிருக்கிறேன் என்றார்.



    அச்சச்சோ.... நிலமை ரொம்ப மோசமாக இருக்கும் போலிருக்கே என்று ஒரே பதட்டமாக இருந்தது. உடனே அம்மா சென்னைக்கு கிளம்பினார்.

    ஆனால் சென்னைக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால் கோவாவில் இருந்து பெங்களுருவுக்கு சென்று அங்கிருந்து காரில் சென்னை சென்றார். சென்னைக்கு சென்றாலும் சைதாப்பேட்டை பகுதி தனி தீவுபோல் ஆகிவிட்டதால் வீட்டுக்கு செல்ல முடியாமல் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி இருந்தார். செம்பரம்பாக்கம் அணை தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்பட்டதால் தான் அவ்வளவு வெள்ளம் சென்னையில் குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்ததாக கூறினார்கள். இந்த அளவு வீட்டுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்ததை வாழ்நாளில் இதுவரை சந்தித்தது இல்லை.

    இரண்டு நாள் கழித்து வெள்ளம் வடிந்த பிறகு அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவர் பார்த்த காட்சி அவரை அதிர வைத்து விட்டது.

    அப்படி என்ன காட்சி?

    அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்)

    • ஒரு பொருளையோ அல்லது ஒரு செயலையோ எப்படி நல்லது என்றும் தீயது என்றும் பகுத்துக் காண்பது.
    • நல்லது போலவே பல தீயவைகள் நாட்டில் உண்டு; தீயது போலவே பல நல்லதுகளும் நாட்டில் உண்டு.

    வாழ்க்கையில் நல்லது கெட்டது தெரிந்து கொள்வதற்கு எப்போதும் ஆவலாகக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே வணக்கம்!.

    ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒவ்வொருவர் வாழ்க்கை அனுபவத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும் நல்லது தீயது எனும் இரண்டையும் கடந்தேதான் வாழ வேண்டியிருக்கிறது. நல்ல அறம் சார்ந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் மனிதர் ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருந்தாலும், அதற்கு முன்னதாக எது நல்லது? எது கெட்டது? என்பதைப் புரிந்து கொள்வதிலேயே பாதி வாழ்க்கை கழிந்துபோய் விடுகிறது. அதனால்தான் மகாகவி பாரதியும்,

    "நல்லது தீயது நாம் அறியோம் அன்னை

    நல்லது நாட்டுக! தீயது ஓட்டுக!"

    என்று பராசக்தியிடம் பிரார்த்தனை வைக்கிறார். ஆம் வாழ்க்கையில் எது நல்லது? எது தீயது? யார் நல்லவர்? எவர் தீயவர்? என்று புரிந்து கொள்வதிலேயே பெரும்பான்மைப் பொழுதுகள் குழப்பத்திலேயே கழிந்து விடுகின்றன; பின்னர் நல்ல வாழ்க்கையை எல்லாரும் போற்றும்படி வாழ்வது எப்படி?.

    கற்றறிந்த மேதைகளும், வாழ்ந்து அனுபவப்பட்ட பெரியவர்களும், வாழ்வியலில் சிலவற்றை 'நல்லவை' என்றும் சிலவற்றைத் 'தீயவை' என்றும் வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அவர்களின் மதிப்பீடுகளின் வழி தீயவற்றை விலக்கி, நல்லவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், அறம் சார்ந்த எண்ணங்களோடு ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை நம்மாலும் வாழ முடியும். தீயவற்றை விலக்கக் கற்றுக் கொண்டாலே, அல்லவை தேயத் தொடங்கினாலே, அறம்பெருகிடும்! என்கிறார் வள்ளுவர்.

    ஒரு பொருளையோ அல்லது ஒரு செயலையோ எப்படி நல்லது என்றும் தீயது என்றும் பகுத்துக் காண்பது?. சில விஷயங்கள் அந்தப் பொருள் அளவிலேயே நல்லவையாக இருக்கும்; சில கையாளப்படும் தன்மைகளைப் பொறுத்து நன்மைகளை விளைவிப்பனவாக அமைந்து விடும். எளிதாக அவற்றை நல்லவை என்று ஏற்றுக் கொள்ளலாம். சில, நன்மைக் குணம் சார்ந்தவையாக இருந்தாலும் அவை சிலருக்கோ சில நேர்வுகளுக்கேற்ப நலம் பயக்காதவையாகவும் அமைந்துவிடும். உதாரணத்திற்குத் தேனை எடுத்துக்கொள்வோம்; தேன் உடம்பிற்கு நல்ல மருந்தாகவும் உணவாகவும் அமையக் கூடியதுதான். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கோ அது தீமையை விளைவிக்கும் எனும்போது நன்மைக்குணம் எதிர்முகத் தன்மையதாக மாறிப் போகிறது.

    சிலமனிதர்களை ஆளைப்பார்த்து, நிறத்தைப் பார்த்து, வசதி வாய்ப்புகளைப் பார்த்து நல்லவர் என்றோ, தீயவர் என்றோ திடீர் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

    "கணைகொடிது யாழ்கோடு செவ்விது

    ஆங்கன்ன

    வினைபடுபாலால் கொளல்"

    சுந்தர ஆவுடையப்பன்

    நேராக இருப்பதெல்லாம் நேர்மையானதாக இருக்கும் என்பதில்லை; வில்லில் இருந்து புறப்பட்டு குறிநோக்கி வந்து உயிர்களைக் கொல்லும் அம்பு நேரானதாகத்தான் உள்ளது: ஆனால் அது நேர்மையானது கிடையாது; ஆட்களைக் கொல்லும் நேர்மையற்ற செயலுக்கு அது துணை போகிறது. கோணல்மாணலாக வளைந்திருப்பதெல்லாம் குதர்க்கமாகவே செயல்படும் என்பது இல்லை; வளைந்திருக்கும் யாழ் எனும் இசைக் கருவியில் இருந்து புறப்பட்டு வருகிற இசை மனித இதயங்களை நேர்பண்ணுகிற இசைமருத்துவத்தைச் செய்துவிடுகிறது. எனவே ஆட்களை விட அவர்களின் செயல்களை வைத்தே நல்லது கெட்டது தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

    பொதுவாகவே கருவிகளில் நல்லது கெட்டது பார்த்து ஒதுக்குவதைவிட அவற்றின் மூலம் விளையும் நன்மை தீமைகளைக் கணக்கில் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். சமையல் கூடத்தில் பயன்படுத்தப்படும் கத்தியும், கசாப்புக்கடையில் பயன்படுத்தப்படும் கத்தியும் அடிப்படையில் கத்திதான் என்றாலும் அவற்றினால் விளையும் பயனைப் பொறுத்து அவற்றிற்கு நல்லது கெட்டது முத்திரை குத்தலாம். இன்னும் ஒருபடி மேலேபோய், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் கரங்களிலே உயிர்காக்கும் நோக்கோடு அமர்ந்திருக்கிற கத்தியை எந்த முத்திரை குத்தி நாம் ஆராதிக்கப் போகிறோம்?. ஆக, நன்மை தீமை என்பது கருவிகளில் இல்லை; கையாளும் மனிதர்களைப் பொறுத்தும், கையாளும் சூழல்கள் மற்றும் நோக்கங்களைப் பொறுத்தும் அவை நல்லவையா? தீயவையா? என்று தீர்மானிக்கப்படுகின்றன.

    மனிதர்கள் வாழ்க்கைக்குப் பயன்படுகிற பணம்கூட ஒரு கருவிதான். பணம் நல்லதா? கெட்டதா? என்று கேட்டால், காலம் காலமாக ஞானிகளும் துறவிகளும் பணம் தீயது என்றுதான் கூறியிருக்கிறார்கள். பணம் தீராத ஆசையைப் பெருக்கும்; ஆசை வேண்டாத செயல்களையெல்லாம் பணம் ஈட்டுவதற்குச் செய்யத் தூண்டும் என்று பணத்தை ஒதுக்கக் காரணம் கற்பிப்பர் தத்துவவாதிகள். ஆனாலும் பணம் நல்லது என்கிறார் உலகப்பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகை. வாழ்வில் எவ்வளவு பெரிய பகைவர்களையும் அவர்களின் ஆணவம் அடக்கிப் பணியவைக்கப் பணம் அவசியம் தேவை என்கிறார். மேலும் 'செய்க பொருளை!' என்று கட்டளையிடவும் செய்கிறார்.

    ஒருவருடைய கண்ணோட்டத்தில் நல்லதாகத் தெரிவது, மற்றொருவர் கண்ணோட்டத்தில் தீயதாகத் தோன்றலாம். தெருச் சாலைகளில் வண்ண ஓவியங்களைப் பிரம்மாண்டமாக வரைந்து பரிசாகக் காசுபணம் பெறுவது என்பது, தெரு ஓவியருக்கு நல்லதாகத் தெரியலாம்; ஆனால் அந்தச் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கோ, அல்லது போக்குவரத்துக் காவலர்களுக்கோ அது தீயதாகத் தோன்றும்; சட்டப்படி அது குற்றமாகவும் கூறப்படும். வனங்களில் முளைத்துக்கிடக்கும் புல்வெளிகளைப் பார்த்து, வன விலங்குகளில் உங்களது கண்ணோட்டத்தில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று கேட்கப்பட்டது. புற்கள் தந்த பதில் நம்மைச் சிலிர்க்க வைத்துவிடும். "எங்களைப் பொறுத்த வரை சிங்கம் புலி கரடி போன்றவை நல்ல விலங்குகள்; ஆடு, மாடு போன்றவை கொடிய விலங்குகள்" என்றன புற்கள். புற்களைப் பொறுத்தவரை தங்களைத் தொந்தரவு பண்ணாத, தங்களை உண்ணாத எல்லாமிருகங்களும் நல்ல விலங்குகள்; அவை மனிதர்கள் முதலான மற்ற எல்லா உயிர்களையும் அச்சுறுத்துகிற சிங்கம் புலியாக இருந்தாலும். தங்களை உண்ணுகிற ஆடுகளும் மாடுகளும் கொடிய விலங்குகளாம். எப்படி இருக்கிறது பாருங்கள் கணிப்பு.

    நல்லது தீயது தீர்மானிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் உண்டு. ஒரு பள்ளி வகுப்பறைக்கு ஐந்து ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்; அந்த வகுப்பறையில் யார் சிறந்த நல்ல மாணவன் என்று கேட்டுப்பார்த்தால், ஐந்துபேரும் ஐந்து மாணவர்களின் பெயர்களைக்கூறி அதற்கான பதில்களை அவரவர் கணிப்பில் விளக்கவும் செய்வார்கள். வகுப்பிலேயே முதல் மதிப்பெண் எடுக்கக்கூடிய மாணவன், நேரந்தவறாமல், விடுப்பும் எடுக்காமல் நாள்தோறும் வகுப்புக்கு வரும் மாணவன், பொய்சொல்லாமல் ஒழுக்கமாகப் பணிவாக உள்ள மாணவன், வகுப்பாசிரியருக்கு உதவிசெய்து வகுப்பை அமைதியாகப் பார்த்துக் கொள்ளும் மாணவன், விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவன். இந்தப் பட்டியலில், உண்மையில் எந்த மாணவனை நல்ல மாணவன் கணக்கில் சேர்த்துக் கொள்வது? ஒவ்வொரு நோக்கத்தில் ஒவ்வொரு மாணவனும் நல்லவனாக இருக்கிறானே!.

    "நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்!" என்கிற நாலடியார் இலக்கிய வரி, நெஞ்சத்தால் நடுவுநிலைமை தவறாமல் நல்லது கெட்டது பார்க்கும் தன்மை ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்கிறது. நடுக்கடலில் உருவாகும் புயல், ஒருபக்கம் கரையைக் கடக்கும் பகுதிகளில் பெரும் சேதத்தை உண்டுபண்ணிவிட்டுப் போகிறது. மற்றொரு பக்கம், பிற பகுதிகளில் பரவலாக மழையைப் பொழியச் செய்து நன்மை செய்துவிட்டுப் போகிறது. அப்படியானால் புயல் மனிதர்க்கு நன்மையா? தீமையா?. கணிக்க முடியாத அளவுக்குப் பட்டிமன்றத் தலைப்புப் போல ஆகிவிடுகிறது. தொடர்ந்து பெய்யும் மழையும், அளவுக்கு அதிகமாக அடிக்கும் வெய்யிலும் மக்களால் சபிக்கவே படுகின்றன. ஆயினும் மழையும், வெய்யிலும் பொதுநிலையில் மக்களுக்கு நன்மைகளைத் தானே செய்கின்றன. நன்மை தீமைகளைத் தனிமனித நோக்கில் பார்க்காமல், சமுதாயரீதியில் ஏற்படும் பெரும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு ஒன்றை நல்லது என்கிற முடிவுக்கு வரவேண்டும்; அல்லாத பட்சத்தில் தீயது என்று புறந்தள்ளப்பட வேண்டும்.

    ஒரு பெரிய ஆழமான ஆறு; பெருக்கெடுத்து, பெரும் ஆற்றலோடு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றைக்கடந்து அக்கரையில் இருக்கும் ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்றால், படகுப் போக்குவரத்தில் மட்டுமே சென்றாக வேண்டும். ஒரு பெரிய படகு கிளம்பியது. அதற்குள் எண்ணிக்கையில் அதிகமான இளைஞர் கூட்டமொன்று ஏறியிருந்தது. படகின் ஓரத்தில் சாதுவான ஒரு துறவி அமைதியாக அமர்ந்து கண்களை மூடி மனத்திற்குள் ஜெபதபங்களைச் சொல்லத் தொடங்கியிருந்தார். இளைஞர்கள் அந்தத் துறவியைக் கேலிசெய்து கிண்டல் பண்ணத் தொடங்கினர். மாலை நேரம்; இன்னும் கொஞ்ச நேரத்தில் இரவு வந்து விடும். இரவு முழுவதும் அந்தப் படகில்தான் அவர்கள் பயணம் செய்தாக வேண்டும். ஆயினும், இளைஞர்களின் சேட்டைகள் குறைந்த பாடில்லை; கெட்ட வார்த்தைகள் சொல்லித் துறவியைத் திட்டினர், செருப்பால் துறவியின் தலையைத் தொட்டு, அவரைத் தியானம் பண்ண விடாமல் தொந்தரவு பண்ணிக்கொண்டே வந்தனர்.

    இரவு நன்றாக வந்து விட்டது; படகு போய்க்கொண்டிருந்தது. அப்போது , இருளைக் கிழித்ததுபோல ஒரு மின்னல் வெட்டியது; ஓர் அசரீரி வார்த்தை வானத்தில் இருந்து ஒலித்தது, " என் அன்பிற்குரிய துறவியே! சொல்! இப்போது இந்தப் படகை நான் புரட்டிப் போட்டுவிடவா?". அசரீரியின் குரலுக்கு பதில்சொல்லாமல், கண்களை மூடிய தியான நிலையிலேயே துறவி அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து மனந்திரும்பிய இளைஞர்கள் துறவியின் காலடியில் பொத்துபொத்தென்று விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கிடந்தனர். சிறிது நேரத்தில் கண்விழித்து, தவம்கலைத்த துறவி இளைஞர்களைத் தூக்கிவிட்டார்; அஞ்ச வேண்டாம் என்றார். பிறகு வானத்தை பார்த்துப் பேசினார், "என் அன்பான தெய்வமே! நீ ஏன் திடீரென்று படகைப் புரட்டவா? என்று சாத்தானின் குரலில் பேசினாய்? நீ புரட்ட வேண்டியது இளைஞர்களின் மனத்தை அல்லவா?" என்று கேட்டார்.

    "அது சாத்தானின் குரல்தான். நீ புரிந்து கொண்டாய்! அதனால் விபரீதம் எதுவும் நடக்கவில்லை; நன்மையே நடந்தது. எவன் சாத்தானின் குரலைப் புரிந்துகொண்டு அதற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறானோ, அவனே தெய்வத்தைப் புரிந்துகொள்வான்!" என்றது தெய்வத்தின் அசரீரி. ஆம்!. நல்லது போலவே பல தீயவைகள் நாட்டில் உண்டு; தீயது போலவே பல நல்லதுகளும் நாட்டில் உண்டு. பொது நோக்கில் சமுதாய நன்மைகள் விளைவிக்கும் நல்லவைகளை ஏற்றுக்கொண்டு, தீயவைகள் விலக்கி வாழ்வோம்.

    தொடர்புக்கு 94431 90098

    • ஜெய்பூரில் அமேர் பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் ஆம்பர் கோட்டைக்கு மேலே அமைந்துள்ள கோட்டை இது.
    • ராஜஸ்தான் என்றாலே கைவினைப் பொருள்களின் சிறப்பே ஞாபகத்திற்கு வரும்.

    இந்திய வீரத்தையும் பாரம்பரியத்தையும் அழகையும், கலைகளின் மேன்மையையும் பக்தியின் உச்சத்தையும் கண்டு உற்சாகம் பெற ஒரு இடத்தை இந்தியாவில் சொல்லுங்கள் என்றால் உடனே வரும் விடை ஜெய்பூர்.

    கம்பீரமான இந்த ஊரில் உள்ள கவினுறு காட்சிகள் ஏராளம். முக்கியமானவற்றைப் பார்ப்போமா?

    ஹவா மஹால்:

    ஜெய்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் ஹவா மஹால்.

    தேனடையைப் போலக் காட்சி அளிக்கும் ஐந்து அடுக்கு அரண்மனையான இதை மகாராஜ சவாய் பிரதாப் சிங் 1799-ம் ஆண்டில் கட்டினார். சிவப்பு மற்றும் இளநீல கற்களைக் கொண்டு சிடி பாலஸ் அருகில் இது கட்டப்பட்டது.

    பிரமிட் போல கட்டப்பட்ட இதில் ஜாரோகாஸ் என்று அழைக்கப்படும் 953 விசேஷமான ஜன்னல்கள் பார்ப்போரைக் கவரும் வடிவமைப்பில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜன்னல்கள் வழியே குளிர்ந்த காற்று பாய்ந்து மகாலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

    அரண்மனையில் வாழும் மகளிர் சாதாரணமாக நகர வாழ்க்கையைப் பார்க்க முடியாமல் தனியே அரண்மனைக்குள்ளேயே இருப்பது வழக்கம். அவர்கள் இதில் இருந்து மீண்டு, நகரத்தைப் பார்க்க வழிவகை செய்யும் முக்கிய நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டது.

    அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்ட 50 அடி உயரம் கொண்ட இந்த மகால் 87 டிகிரி சாய்ந்திருக்கும். இங்கு மாடிப்படிகள் கிடையாது. அரண்மனை நாரீமணிகள் நளினமாக நடந்து செல்ல வசதியாக இதில் சரிவுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்லியல் கண்காட்சி ஒன்றும் உள்ளது. ராயல் டோர் என்னும் பிரதான வாயில் வழியே உள்ளே செல்ல வேண்டும்.. இதன் உச்சியில் இருந்து பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு

    ஆம்பர் கோட்டை:

    அமர் நகரில் ஒன்றரை சதுர மைல் பரப்பில் அமைந்துள்ள கோட்டை இது. பவானி என்னும் அம்மனின் பெயரால் இக்கோட்டைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. ராஜபுதன கட்டிடக் கலை அம்சங்களைக் காட்டும் இந்தக் கோட்டை மணல் கற்களாலும் சலவைக் கல்லாலும் கட்டப்பட்டதாகும்.

    கோட்டையில் பல அரண்மனைகளும் ஒரு ஏரியும் உள்ளன.

    ஜெய் மந்திர் எனப்படும் கண்ணாடி மாளிகை உட்பட பல மாளிகைகள் இங்கு உண்டு. இங்குள்ள ஒலி-ஒளி காட்சியை மறக்காமல் அனைவரும் பார்ப்பது வழக்கம்.

    ஆம்பர் கோட்டையின் சுவர்களுக்கு மற்றும் பேசும் சக்தி இருந்தால் அவை ராஜபுதனத்து மன்னர்களின் காலத்தை வென்ற வீர சரித்திரங்களைக் கூறும் என்பது அறிஞர் வாக்கு.

    ஜெய்கர் கோட்டை:

    ஜெய்பூரில் அமேர் பகுதியில் ஆரவல்லி மலைத் தொடரில் ஆம்பர் கோட்டைக்கு மேலே அமைந்துள்ள கோட்டை இது. இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்ற மன்னர் தனது வெற்றியைக் கொண்டாட 1310 அடி உயரமுள்ள மலையில் இந்தக் கோட்டையைக் கட்டினார். கோட்டையின் மேல் உள்ள ஜெய்வானா பீரங்கி உலகின் மிகப் பெரிய பீரங்கிகளில் ஒன்று. கோட்டையின் சுவர்கள் எதிரிகள் இடிக்க முடியாதபடி வலிமை வாய்ந்தவை. உள்ளே லலிதா கோவில் ஆரம் கோவில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது. ஜெய்கர் கோட்டையையும் ஆம்பர் கோட்டையையும் பூமிக்கடியில் உள்ள ஒரு சுரங்கப் பாதை இணைக்கிறது.

    ஒரு போதும் சரிந்து வீழாத கோட்டை இது; இதன் வீர உணர்வு ஒருபோதும் குறைந்ததே இல்லை!

    சிடி பாலஸ் (நகர அரண்மனை):

    மகாராஜ சவாய் ஜெய்சிங் உருவாக்கிய இந்த அரண்மனை வாஸ்து சாஸ்திரப்படி உருவாக்கப்பட்டது. இங்கு முபாரக் மகால், சந்திர மகால், மகாராணியின் அரண்மனை ஆகியவற்றைப் பார்ப்பதோடு மகாராஜா சவாய் மான்சிங் அருங்காட்சியகத்தையும் பார்க்கலாம்.

    ஜெய்பூரின் இதயம் துடிக்கும் இடம் இது தான் என்கின்றனர் பயணிகள்!

    ஜந்தர் மந்தர்:

    திறந்த வெளிக் கோளரங்கமான இதில் மிகப் பெரிய சூரிய கடிகாரம் உள்ளது. வானவியலில் ஆர்வமுள்ளோர் கோள்களைப் பற்றிய ஆய்விற்காக செய்யப்பட்ட பல எந்திரங்களை இங்கு பார்க்கலாம். இது 1734-ல் கட்டப்பட்டது. எதிர்காலம் இறந்தகாலத்தைச் சந்திக்கும் அற்புத இடம் இதுவே என்கின்றனர் அறிஞர்கள்!

    ச.நாகராஜன்

    பாபு பஜார்:

    ராஜஸ்தான் என்றாலே கைவினைப் பொருள்களின் சிறப்பே ஞாபகத்திற்கு வரும். பிங்க் சிடி என்று ஜெய்பூருக்கு ஒரு பெயர் உண்டு. இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனைத்துக் கட்டிடங்களும் இங்கு கட்டப்பட்டிருப்பதால் இதற்கு பிங்க் சிடி என்ற பெயர் வந்தது.

    இங்கு கைவினைப் பொருள்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வாங்கலாம். ஒரு பை நிறைய பாபு பஜாரில் வாங்கும் பொருள்கள் ராஜஸ்தானைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லும்!

    நகார்கர் கோட்டை:

    நகார்கர் கோட்டை ஆரவல்லி மலையில் அமைந்துள்ள இன்னொரு கோட்டையாகும். நகார்கர் என்றால் புலி என்று பொருள். இது முதலில் சுதர்ஷன்கார்க் என்று அழைக்கப்பட்டது. ஜெய்பூரின் வலிமை வாய்ந்த அரணாக இது திகழ்கிறது. அரசர்கள் ஒரு காலத்தில் நடந்த இந்த இடத்தில் பயணிகள் இன்று நடந்து உத்வேகம் பெறுகின்றனர்!

    காலே அனுமான்ஜி ஆலயம்:

    இது ஜெய்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    அனுமார் சூரிய பகவானிடம் அனைத்துக் கலைகளையும் கற்ற பின் அவருக்கு குரு தட்சிணை தர விழைந்தார்.

    சூரிய பகவான் அனுமானிடம் தனது புத்திரரான சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறி அதுவே அவர் தனக்குத் தரும் குரு தட்சிணையாகும் என்றார்.

    தானாக சனீஸ்வரன் தன்னிடம் வருவதில்லை என்றும் தான் அழைத்தாலும் அவர் வருவதில்லை என்றும் சூரிய பகவான் குறிப்பிட்டு ஆகவே எப்படியாவது சனீஸ்வரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு அனுமானிடம் கூறினார்.

    அனுமார் சனீஸ்வரனைத் தேடிப் போனார். ஆனால் அவரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்து அவரை சூரிய பகவானிடம் அழைத்துப் போகத் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

    அனுமான் தனது தந்தையான சூரியனைக் குருவாகக் கொண்டு அவரிடம் வைத்திருக்கும் அசைக்க முடியாத பக்தியைக் கண்டு சனீஸ்வரன் வியந்தார்.

    சூரியனைப் பார்க்க வருவதாக ஒப்புக் கொண்ட சனீஸ்வரன் மனம் மிக மகிழ்ந்தார். தன்னை வழிபடுவோர் அனுமானை வழிப்பட்டாலொழிய தனது அருளைப் பெற முடியாது என்று ஒரு நிபந்தனையைக் கூறிய அவர் தனது கறுப்பு நிறத்தையும் அனுமானுக்கு வழங்கினார். அந்த கறுப்பு நிறத்தைப் பெற்றுக் கொண்ட அனுமான் கறுப்பு நிறமானார்.

    காலே அனுமான் என்றால் கறுப்பு அனுமான் என்று பொருள். ஆகவே இங்கு கோவில் கொண்டுள்ள அனுமானை காலே அனுமான் என்று அனைவரும் துதித்து வழிபடுகின்றனர்.

    எப்போதும் பொதுவாக அனுமான் எல்லாக் கோவில்களிலும் ஆரஞ்சு வண்ணத்திலோ அல்லது சிவப்பு வண்ணத்திலோ தான் காட்சி அளிப்பார். இங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறார்.

    கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களும், கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்று நினைக்கும் பக்தர்களும் இந்தக் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். அனைத்து வியாதிகளையும் போக்குபவராக இந்த அனுமான் இருப்பதாக இவரை இங்கு வழிபடுபவர்கள் கூறுகின்றனர்.

    சனி தோஷம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும் தொழிலில் மேன்மை பெறவும், மனோவியாதிகள் நீங்கி அமைதியான வாழ்க்கையைப் பெறவும் அனுமானை வழிபட வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு.

    அனுமத் ஜெயந்தி தினத்தில் இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர். விட்டது வியாதி; போனது தோஷம் என்பது இங்கு வந்து தொழும் பக்தர்களின் நம்பிக்கை வாக்கு!

    பிர்லா மந்திர்:

    பிர்லா மந்திர் என்று அழைக்கப்படும் லட்சுமிநாராயணன் கோவில் 1988-ல் பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோவிலாகும். வெண்மையான சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் லட்சுமி தேவியும் நாராயணரும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர். சாந்தம், அழகு, இறை வழிபாட்டின் பலன் – இவை அனைத்தையும் ஒருங்கே தருவது பிர்லா மந்திர்!

    ஜல் மகால்:

    ஜல் மகால் என்றால் நீர் அரண்மனை என்று பொருள். இது ஜெய்பூரில் மான் சாகர் ஏரியின் நடுவில் அமைந்துள்ள அழகிய ஒரு அரண்மனையாகும். இதை சவாய் பிரதாப் சிங்க் 1799ல் கட்டினார். ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த அரண்மனை முழுவதும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது, ஏரியில் நீர் முழுமையாக நிரம்பும் சமயத்தில் இதில் உள்ள நான்கு அடுக்குகள் நீரிலே மூழ்க ஐந்தாவது அடுக்கு மட்டும் காட்சி அளிக்கும்.

    ஜல்மஹால், வானம் நீரைத் தொடும் இடம்; சரித்திரம் கவிதை பாடும் இடம்!

    சிசோடியா ராணி அரண்மனையும் தோட்டமும்:

    கூட்டத்தைத் தவிர்த்து அமைதி நாடும் வரும் இடம் இது. ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இது.

    மன்னர் சவாய் ஜெய் தனது உதய்பூர் இளவரசியான தனது இரண்டாவது மனைவிக்குப் பரிசாக 1728-ம் ஆண்டு கட்டியது இது. இந்த ராணி சூரியவம்சத்தின் வழி வந்த சிசோடியா பரம்பரையைச் சேர்ந்தவர். பசுமை வாய்ந்த மரங்களும் மலர்ச் செடிகளும் ஒருபுறம் இருக்க பல அடுக்குகள் கொண்ட அரண்மனையை இன்னொரு புறம் காணலாம்.

    டக் டக் ரைட் (டக் டக் சவாரி)

    ஜெய்பூரில் எல்லா இடங்களுக்கும் செல்ல வசதியாக டக் டக் என்று அழைக்கப்பட்டும் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளன. இந்த டக் டக் சவாரி மூலம் இதன் டிரைவரே திட்டமிட்ட பாதை வழியே ஜெய்பூர் முழுவதையும் சுற்றிக் காட்டி விடுவார். ஒரு நாள் பயணம் இரு நாள் பயணம் என்று நமது வசதிக்குத் தக்கபடி இந்த சவாரியை நாம் அமைத்துக் கொள்ளலாம். இதில் பயணம் செய்வோர் அனைவரும் இதைப் பொதுவாக ரசிக்கவே செய்கின்றனர். ஜெய்பூர் என்பது இவ்வளவு தான் என்று யாரும் முடிவு கட்டி விடக் கூடாது. வீரம் வாய்ந்த ராஜபுதன அரசர்களின் பரம்பரைக்கே உரித்தான ஏராளமான அரண்மனைகள், அழகிய மாளிகைகள், பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், இறைவழிபாட்டுத் தலங்கள் என்று இன்னும் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆங்காங்கே உள்ள அருங்காட்சியகங்கள் பழமையான சிறப்பு வாய்ந்த வரலாறை நமக்கு விளக்கமாகத் தெரிவிக்கும். ஜெய் ஜெய்பூர்!

    • ராமநவமி தினத்தன்று ஏழை-எளியவர்களுக்கு சாதம், நீர் மோர், பானகம், வடை போன்றவற்றை தானம் செய்வதுடன் விசிறிகளையும் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.
    • சீரடியில் ஆரத்தி நடைபெறும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள சாய் தலங்களில் ஆரத்தி நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

    ராம அவதாரம் மிகவும் மகிமை வாய்ந்தது. ஏனெனில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராம அவதாரம் மட்டுமே முழுமையானதாகக் கருதப்படுகிறது.

    பங்குனி மாதம் நவமி திதியன்று ராமபிரான் பிறந்தார். இதனால் அவரது பிறந்த நாள் ''ராம நவமி'' என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்தபோது 5 கிரகங்கள் உச்சத்தில் இருந்தன. எனவே ராமர் ஜாதகத்தை எழுதி பூஜையில் வைத்து வழிபட்டால் கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

    அது போல ராம நாமமும் மகத்துவம் வாய்ந்தது. ராம நவமி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடக்கும் பட்டாபிஷேகத்தை கண்டு களிப்பது மிகவும் நல்லது.

    ஸ்ரீராமஜெயம் என்ற மந்திரத்தை தினமும் 108 தடவை உச்சரித்தால் ஆணவம் உள்ளிட்ட அனைத்து தீய குணங்களும் விலகும். மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் குடி கொள்ளும்.

    ராமநவமி தினத்தன்று ஏழை-எளியவர்களுக்கு சாதம், நீர் மோர், பானகம், வடை போன்றவற்றை தானம் செய்வதுடன் விசிறிகளையும் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

    பொதுவாக அஷ்டமி, நவமி தினங்களில் நாம் எந்த நல்ல செயலையும் தொடங்குவதில்லை. என்றாலும் நவமி திதியில் ராமர் பிறந்ததால் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. இதனால் ராமநவமி தினம் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ராம அவதாரத்துக்குப் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆவணி தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார். அந்த அவதாரம் நிறைவு பெற்று பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் சாய்பாபா அவதாரம் நிகழ்ந்தது. சீரடியில் இருந்தபடி இந்த உலகையே ஆட்சி செய்த சாய்பாபாவின் அவதாரத்தினமாக ராமநவமி தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கணிக்கப்பட்டுள்ளது.

    மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரின் இறுதி இலக்கு என்ன? ஆனந்தமாக வாழ வேண்டும். இறுதியில் மறு பிறப்பு இல்லா முக்தியை பெற வேண்டும் என்பது தான். இந்த இரண்டையும் தரும் கண்கண்ட கடவுளாக, குருவாக, நம் கையை பிடித்து செல்லும் தோழனாக, வழிகாட்டியாக அவர் திகழ்கிறார்.

    நம்மை பிறவிப் பிணியில் இருந்து மீட்டு துயர் துடைக்க வந்த அவதாரமாக அவர் இந்த பூமியில் தோன்றினார். அவர் எங்கு தோன்றினார்? எப்படி தோன்றினார்? எந்த ஆண்டு அவதாரம் எடுத்தார்? அவர் பெற்றோர் யார்? எங்கிருந்து அவர் சீரடிக்கு வந்தார்? எப்படி அவரால் கோடிக்கணக்கான மக்கள் மனதில் கடவுள் அவதாரமாக மாற முடிந்தது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் யாராலும் இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை.

    கடவுள் அவதாரத்தை எப்படி சாமானிய மனிதர்களால் கணக்கிட்டு விட முடியும்? என்றாலும் ராம நவமி தினத்தை சீரடி சாய்பாபாவின் பிறந்த தினமாக-ஜெயந்தி தினமாகக் கொண்டாடும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் சீரடி சாய்பாபாவின் ஜெயந்தி தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் உள்ள சாய் தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.

    "அனைத்து ஜீவராசிக்குள்ளும் கடவுள் இருக்கிறார்" என்பதை பாபா அழுத்தம் திருத்தமாக சொன்னார். அதனால்தான் அவரால் அனைத்து மதங்களுக்கும் தேவையான மரியாதையைத் தர முடிந்தது. இஸ்லாமியர்கள் வந்தால் அவர்களுடன் குர்ஆனில் கூறப்பட்டு இருப்பது பற்றி பேசுவார். விவாதிப்பார்.

    அது போல இந்துக்கள் வந்தால் அவர்களுக்கு ராம மந்திரத்தைப் போதிப்பார்.

    ஒரு தடவை இயேசுநாதர் பற்றி தரக்குறைவாகப் பேசிய பக்தரை கடும் கோபத்துடன் கண்டித்தார். அவரை மன்னிப்புக் கேட்க வைத்தார். இப்படி எந்த மதத்துக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாததால்தான் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சாய்பாபாவை மனதார கடவுளாக ஏற்றுப் பூஜித்துப் போற்றினார்கள்.

    பாபா எப்போதுமே, தான் கடைபிடிக்கும் வாழ்வியல் நடைமுறைகளை தனது பக்தர்களும் உளமாற கடைபிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரால் சீரடி தலத்தில் முஸ்லிம்களின் விருப்பப் பண்டிகையான சந்தனக்கூடு விழாவையும், இந்துக்களின் பண்டிகையான ராமநவமியையும் ஒரே நாளில் சீரும் சிறப்புமாக நடத்த முடிந்தது.

    மத நல்லிணக்க விழாவாக ராமநவமி-உர்ஸ் விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினார். அதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக ஸ்ரீசாய் சத்சரிதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரடி அருகில் உள்ள கோபர்கானில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கோபால்ராவ் குண்ட். இவர் பாபாவின் அதி தீவிர பக்தர்.

    மூன்று பெண்களைத் திருமணம் செய்தும் கோபால்ராவ் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தார். 1897ம் ஆண்டு ஒரு தடவை பாபா வழங்கிய அருளாசியால் அவருக்கு குழந்தை பிறந்தது.

    இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த கோபால்ராவ், தனது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் பாபா பெயரில் உருஸ் எனும் திருவிழா நடத்த விரும்பினார். தாத்யா பாட்டீல், சாமா ஆகியோர் மூலம் பாபாவிடம் பேசி அவர் உருஸ் விழா நடத்துவதற்கான அனுமதியை பெற்றார். அடுத்து எந்த தினத்தில் உருஸ் விழாவை நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அதையும் சாய்பாபாவிடமே கேட்டனர்.

    உடனே பாபா கொஞ்சமும் தயக்கமின்றி ராமநவமி தினத்தன்று உருஸ் திருவிழாவை நடத்துமாறு உத்தரவிட்டார். உருஸ் விழாவுக்கு வந்திருந்த "சாய் சகுணோபாசனா" எனும் பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணராவ் ஜாகேச்வர் பீஷ்மா, உருஸ் தினத்தன்று ராமநவமி பண்டிகையையும் கொண்டாடினால் என்ன என்று மற்றவர்களுடன் விவாதித்தார். பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவரான காகா மாஜினியும் ராமநவமி தினத்தை கொண்டாடலாம் என்றார்.

    அந்த ஆண்டு உருஸ் திருவிழா, ராமநவமி விழாவாகவும், சந்தனக்கூடு விழாவாகவும் களை கட்டியது. பாபாவுக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள்.

    1913-ம் ஆண்டு முதல் ராமநவமி திருவிழா 7 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் திருவிழாவாக மாறியது. 7 நாட்களும் கீர்த்தனைகள் பாடப்பட்டன.

    பாபாவின் அருளால் சீரடியில் நடந்த இந்த விழாக்களில் முதலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். தற்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்கிறார்கள்.

    உருஸ்-ராமநவமி- சந்தனக்கூடு விழாவுக்காக பாபா பயன்படுத்த அழகான குதிரைகள், வெள்ளி ரதம், பல்லக்கு போன்றவை பாபாவுக்கு பணக்கார பக்தர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.

    ஆனால் எந்த ஆடம்பர, அலங்கார பொருளும் சாய்பாபா நடவடிக்கைகளை மாற்றி விடவில்லை. அவர் ஏதும் இல்லாத சன்னியாசி போலவே சீரடி மசூதியில் வாழ்ந்தார். ராமநவமி நாட்களில் சாய்பாபாவுக்கு அழகு நிறைந்த பட்டுச்சட்டைகள், சால்வைகள் அணிவிக்கும் ஒரு புதிய பழக்கம் தோன்றியது. சாய்பாபாவை சீரடி சமஸ்தானத்தின் மகாராஜாவாக கருதி பக்தர்கள் இந்த அன்பளிப்புகளை வழங்கினார்கள்.

    ஆனால் பட்டு சட்டைகள், சால்வைகளை பாபா ஒரு போதும் நிரந்தரமாக அணிந்து கொண்டதே இல்லை. எந்த பக்தர் அந்த பட்டுச்சட்டையை வாங்கி வந்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்து விடுவார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், மறு மலர்ச்சியையும் ஏற்படுத்திய பாபா, இப்போதும் கற்பனைக்கு எட்டாத, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். அவரை நம்பி, அவர் பாதங்களை இறுகப்பற்றி கொண்ட ஒவ்வொரு வரும், இந்த பிறவியை இன்னலின்றி கடப்பது உறுதி.

    அவரது நாமத்தை தினமும் உச்சரிப்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். "ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்" என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள். பாபாவை அவர்கள் கண்கண்ட தெய்வமாக பார்க்கிறார்கள். அவர்கள் வாழ்வில் பாபா இரண்டற கலந்துள்ளார்.

    பொதுவாக சாய்நாதரின் அருள் பெற தினசரி வழிபாடு, விரதம், 4 கால ஆரத்தி செய்வதுண்டு. இதில் 4 கால ஆரத்தி மிகவும் சக்தி வாய்ந்தது. சீரடி சாய்பாபா உயிரோடு இருக்கும்போதும் 4 வேளை ஆரத்தி அவருக்கு காட்டப்பட்டது. அதே போன்று சீரடி சாய்மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது.

    சீரடியில் ஆரத்தி நடைபெறும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள சாய் தலங்களில் ஆரத்தி நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த 4 வேளை ஆரத்தியை, செய்வதும், ஆரத்தியில் கலந்து கொள்வதும் சிறப்பான வாழ்வை தரும் என்பது உறுதி.

    ஆரத்தி மூலமாக சத்குருவான சாய்பாபாவை வணங்கினால் வாழ்க்கையில் ஒழுக்கமும், பாதுகாப்பும் தேடி வரும். சாய்பாபாவுக்கு தினமும் ஆரத்தி காட்டுவதை பழக்கப்படுத்திக் கொண்டால் நமக்குள் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    நிறைய பக்தர்கள் வாழ்வில் இந்த ஆரத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காகட ஆரத்தி நாம் நலமாக இருக்க உதவுகிறது. மதிய வேளை ஆரத்தி நமது வாழ்வில் எந்த ஒரு சிறு துன்பம் வருவதையும் தடுத்து நிறுத்துகிறது. மாலை நேர தூப ஆரத்தி, நமது மனம் போன போக்கில் போகாமல் சாய்நாதரை சரண் அடைய உதவுகிறது.

    இரவு நேர சேஜ் ஆரத்தி நாம் தினமும் பெறும் நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக உள்ளது. ஆரத்தி செய்யப்படும் இடங்களிலும், ஆரத்தி செய்பவர்களிடமும் நான் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்று சாய்நாதர் பல தடவை உறுதிபட கூறியுள்ளார்.

    எனவே அவரது அவதார திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) சாய்நாதரை ஆரத்தி செய்து வழிபடுபவர்களுக்கு அளவில்லாத நன்மைகளும், புண்ணியமும் தேடி வரும் என்பது உறுதி.

    • நொய்யரிசியை அல்லது வேறு சிறுதானிய அரிசியை உடன் சேர்த்து கெட்டிக் கூழாகக் காய்ச்சலாம்.
    • கேழ்வரகினை தானியமாகவே ஊறவைத்து அரைத்து வடித்துப் பாலெடுத்து அதைக் காய்ச்சி ஊட்டினால் மெலிந்த குழந்தைகள் நல்ல சதையூட்டம் பெறுவார்கள்.

    கூழ்களின் தலைவன் யாரென்றால் கேழ்வரகுக் கூழ் என்றே சொல்லலாம். சிறுதானியங்களில் உறைந்துள்ள வெப்பத் தன்மையையும், பெருந்தானியங்களுக்குரிய உடல் உறுதித் தன்மையை வழங்கும் கனிமச் சத்துக்களையும், காய்கறிகளுக்குரிய நார்த் தன்மையையும் ஒன்றாகக் குவித்து வைத்திருப்பது கேழ்வரகு. இதனை வட தமிழகத்தில் கேவுறு என்றும், தென் மாவட்டங்களில் கேப்பை என்றும், கொங்குப் பகுதியில் ஆரியம் என்றும் அழைப்பர். ராகி என்பது கிட்டத்தட்ட பொதுப்பெயராக எங்கும் விளங்கி வருகிறது.

    இன்று எந்திரத்தில் இட்டு அரைப்பது போல் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி திருகையில் இட்டு மாவாக அரைக்கும்பொழுது அதன் சத்துக்கள் சிதையாமல் முழுமையாகக் கிடைக்கும். கையால் சுற்றும் கல் திருகையின் மேல்பாகத்தில் கெட்டியான துணியை ஒட்டிக் காய வைப்பார்கள். அப்பொழுது கேழ்வரகுத் தானியம் மென்மையாக அரைபடும். சூடு ஏறாமல் மாவாக்கப்படுவதால் நுண்சத்துக்கள் சிதைக்கப்படுவதில்லை.

    எப்பொழுது அரைபடும் பொருளின் மீது செயற்கையான சூடேற்றப்படுகிறதோ அப்பொழுது அதன் இயல்பான சத்துக்கள் சிதைக்கப்பட்டு விடும். அதனால் தான் சட்னியாகட்டும், இறைச்சி மசாலாவாகட்டும் அம்மியில் அரைத்து சமைக்கப்படும் பொழுது அதன் சுவை மிகுதியாக தென்படுகிறது. மிக்சியில் அரைக்கப்படும் சட்னி ஒருமணி நேரத்தில் நுரைகட்டத் தொடங்குவதைப் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு பொருளிலும் அதன் மூலப்பண்பு சிதைக்கப்படுகிற பொழுது மிகவேகமாக வீரியமும், சத்துக்களும், சுவையும் இழந்து மக்கிப்போகத் தொடங்கும். அதனால்தான் கைத்திருகையில் அரைக்கும் பொழுதுகூட சூடு ஏறக்கூடாதென்று கல்லின் ஒருபாகத்தில் துணியை ஒட்டிவைத்து அரைத்தார்கள் நம் முன்னோர்கள்.

     

    கேழ்வரகினை சூடேற்றாமல் அரைத்துப் பதமாகச் சற்றுக் கெட்டியாகக் காய்ச்சிய கூழ், கைப்படாமல் எடுத்துக் கரைக்கக் கரைக்க நான்கைந்து நாட்கள் வரைக் கெடாமல் இருக்கும். சில நேரங்களில் தாழியில் உள்ள கெட்டிக் கூழின் மேல்பாகத்தில் நூலாம்படை போலப் பூஞ்சை படிந்து இருக்கும். அதனை மேலேடு எடுத்து அகற்றி விட்டுக் கீழ்ப்பகுதியைப் பார்த்தால் கெடாமல் இருக்கும். அந்த அளவிற்குக் கெட்டுப்போகாத வீரியம் உடையது கேழ்வரகு.

    மற்றெல்லாத் தானியங்களும் எவ்வளவு பக்குவமாகப் பாதுகாத்தாலும் அதிகபட்சம் ஓராண்டிற்கு மேல் பாதுகாக்க முடியாது. நெல்லை அரிசி ஆக்காமல் இருந்தால் ஓரிரு ஆண்டுகள் பாதுகாக்கலாம். ஆனால் உமி நீக்கிய தானியம் யாவும் வெகு சீக்கிரத்தில் அதன் இயல்பை இழந்து விடும். ஆனால் கேழ்வரகினை தாளோடு அறுத்து அப்படியே மூன்று மாதம், ஆறுமாதம் வைத்திருந்து பின்னர் கதிரில் இருந்து மணியை நீக்குவார்கள். கேழ்வரகினைத் தானியமாக்கிய பின்னரும் மிகச் சாதாரணமாக நான்கைந்தாண்டுகள் வைத்திருக்க முடியும். நம்மக்கள் பஞ்ச காலத்திற்காகப் பாதுகாத்து சேமித்து வைக்கும் தானியம் கேழ்வரகு தான்.

    நன்றாக விளையும் காலத்தில் பத்துப் பதினைந்து குடும்பங்கள் தாங்கள் விளைவித்த கேழ்வரகினை மரக்காலில் அளந்து சுண்ணாம்புக் கோடுகள் இட்டு சுவற்றில் குறித்து வைத்துக் கொள்வார்கள். ஈரத்தன்மை குறைவாக உள்ள மேட்டுப்பாங்கான நிலத்தில் 10,12 அடி ஆழ, அகலத்திற்குக் குழிவெட்டி அதில் அகலகலமான பலகைக் கல் பதித்து ஒன்று கூட்டிய கேழ்வரகினைக் கொட்டி மேலே தாளை இரண்டு மூன்று அடுக்காக அடுக்கி, அதன் மீது புறவெப்பம் குளிர்ச்சி பாதிக்காத வண்ணம் மண்சேறு, சாணி கொண்டு பூசிக் காயவிட்டு அதன் மீது பலகைக் கல்லினை வைத்து அதன் மீது மண்ணைக் கொண்டு மூடி விடுவார்கள். சேமித்த நிலத்தடிக் கிடங்கினை அடையாளத்திற்குக் கல் நட்டு வைப்பார்கள். தொடர்ந்து மழை பெய்யாத பஞ்ச காலங்களில் உணவுக்கும், விதைக்காகவும் மேற்படி தானியத்தை அவரவர்க்கு உரிய அளவில் பிரித்துக் கொள்வார்கள். நம்மக்கள் தானியக் கணக்கு, பால் கணக்கு அளவினைக் குறிக்கப் பயன்படுத்திய முறையில் தான் இன்றைய சினிமாவில் திரைக்கலைஞர் சூரி அவர்களின் பரோட்டா பந்தயத்திற்கு கரும்பலகையில் கோடு கிழித்து குறித்து வைத்ததைப் பார்த்திருப்பீர்கள்.

     

    போப்பு, 96293 45938

    அக்காலத்தில் குறுநில மன்னர்களுக்குள் போர் நடக்கும் பொழுது எதிரிகளைக் கொல்வது மட்டுமில்லாமல் அவர்களது சொத்துக்களை நிர்மூலமாக்கி விடுவார்கள். அப்பொழுது தான் மறுபடியும் அவர்களது குலம் தழைத்து தம்மைப் பழிவாங்க முடியாது என்பது அவர்களது திட்டம். சொத்துக்களை அபகரிப்பதோடு இன்னும் ஒருபடி மேலேறி முன்பத்தியில் சொன்னவாறு தானியக் கிடங்குகளையும் கொள்ளையடிப்பார்கள். அல்லது மேல் கல்லை அகற்றி விட்டு உள்ளே நெருப்பைப் போட்டு விட்டுப் போய்விடுவார்கள்.

    நம் முன்னோர்களில் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவர்கள் இருந்தார்களோ அவ்வளவு கொடூர மனம் படைத்தவர்களும் இருந்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. சரி இப்பொழுது கூழ்க் கதைக்கு வருவோம். கேழ்வரகுத் தானியம் எப்படி நீண்ட வருடங்களுக்குக் கெடாமல் நீடித்திருக்குமோ கெட்டியாகக் காய்ச்சி வைத்த கூழும் மூன்று நான்கு நாட்களுக்கும் கெடாது இருக்கும்.

    நல்ல உழைப்பாளிகளுக்கு உழைப்பதற்குரிய ஆற்றலை வழங்குவதோடு வியர்வையாக வெளியேறும் நீரினை உடனுக்குடன் ஈடுசெய்வது கூழே ஆகும். கடந்த வாரங்களில் பார்த்ததைப் போல செரிமான மண்டலத்தில், இரைப்பையில், சிறு, பெருங்குடல்களில் நன்மை தரும் நுண்ணுயிர்ப் பெருக்கத்திற்குத் துணைசெய்வது கேழ்வரகுக் கூழ். இத்தானியத்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்தும், மாவுச்சத்தும் நுண்ணுயிர்ப் பெருக்கத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. அதனால் தான் நம் மக்கள் உழைக்கிற நாட்களில் தம்மிடம் என்னென்ன தானியங்கள் இருந்தாலும் கேழ்வரகுக் கூழிற்கே முதன்மையிடம் கொடுப்பார்கள். கூழ்வார்த்தல் சடங்கில் இடம்பெறும் கூழ் கேழ்வரகுக் கூழேயாகும்.

    கெட்டியாகக் காய்ச்சி கரைத்துக் கரைத்துக் குடிக்க பொருத்தமானது கேழ்வரகுக் கூழ் எனினும் இம்மாவு பலவகைகளிலும் நமது உடலுக்கு நலம் பயக்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

    நொய்யரிசியை அல்லது வேறு சிறுதானிய அரிசியை உடன் சேர்த்து கெட்டிக் கூழாகக் காய்ச்சலாம். அவ்வாறு காய்ச்சும் போது கேழ்வரகு மாவு தானும் கெடாததுடன் தன்னுடன் கூட்டுச் சேர்த்த தானியத்தையும் கெடாமல் வைத்திருக்கும். மண்ணும், சிமண்ட்டும் சேர்த்த கலவையுடன் ஜல்லியோ, உடைத்த செங்கல்லோ சேர்க்கும்போது அது கட்டிடத்திற்கு வலிமை சேர்ப்பது போல துணை தானியம் சேர்க்கும் பொழுது கேழ்வரகு மாவு அபார சக்தியை வழங்கும்.

    வெயில் காலத்திற்குக் காய்ச்சி ஆறிய கூழ் என்றால் குளிர் காலத்திற்கு துணை தானியம் சேர்த்து கெட்டியாகக் கிண்டி எடுக்கும் கேழ்வரகுக் களியாகும். கடின உழைப்பாளிகள் என்றால் கேழ்வரகுக் களியோடு கருவாட்டுக் குழம்பு அல்லது பருப்புடன் கூடிய கீரைக்குழம்பு போன்றவை மிகவும் பொருத்தமாக இருக்கும். உடல் உழைப்புக் குறைவானவர்கள், குழந்தைகள் என்றால் நல்ல சூடான களியோடு எள்ளெண்ணையும், கருப்பட்டி (பனைவெல்லத்) தூளும் மிகவும் பொருத்தமாக இருக்கும் மட்டுமல்ல, குழந்தைகள் விரும்பி உண்பார்கள். சதைப்பற்றுப் பெருக சூடான களி மிகவும் நல்லது. போக கேழ்வரகின் வறல் பண்பினை நல்லெண்ணை ஈடுசெய்யும். தோளுக்கு மினுமினுப்பு கொடுக்கும். சிலருக்கு கேழ்வரகுக் களி சாப்பிட்டால் மலம் இறுகி விடும். அவர்களுக்கு நல்லெண்ணை, வெல்லம் காம்பினேசன் உதவிகரமாக இருக்கும். மலத்தை இளக்கும். ஒருவாரம், 10 நாட்கள் காய்ச்சலில் விழுந்து மீண்டவர்கள், உடலில் நீரும், சதையும் வற்றித் துவண்டு போய் இருப்பார்கள். இந்த நிலையில் உள்ளோர் உடனடியாக சக்திபெற சுடச்சுடக் காய்ச்சிய கூழில் வெல்லப்பொடி தூவி தேக்கரண்டியில் எடுத்துக் குடிக்கலாம். தொடர்ந்து சளி, இருமல் இருக்குமானால் சுடு கூழ் நீர்க்கக் காய்ச்சும்போது அதில் நான்கைந்து சிட்டிகை சுக்குத் தூளும், மிளகுத் தூளும் போட்டுக் காய்ச்சிக் குடிக்க கபாலத்தில் உறைந்த சளி இளகி இறங்கும். நெஞ்சுஞ்சளி கட்டாது.

    அடிக்கடி சளித்தொல்லைக்கு உள்ளாவோர், மூச்சிரைப்புப் பிரச்சினை இருப்பவர்கள் இப்படி சுடு கூழும் சாப்பிடலாம், களியும் சாப்பிடலாம். அதை விட அதிகப் பொருத்தமானது கேழ்வரகுப் புட்டு. மார்புப் பகுதியில் சளி இறுகித் தொல்லைக்கு உள்ளாவோர், எலும்புருக்கி (டி.பி) நோய்க்கு ஆட்பட்டோருக்கு கேழ்வரகு அரிய மருந்தாகும். இந்நோய்ப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் மேலே சொன்னபடி நல்லெண்ணையோ, நெய்யோ பொருத்தமான விதத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

     

    கேழ்வரகினை தானியமாகவே ஊறவைத்து அரைத்து வடித்துப் பாலெடுத்து அதைக் காய்ச்சி ஊட்டினால் மெலிந்த குழந்தைகள் நல்ல சதையூட்டம் பெறுவார்கள். பால்மாவு, வணிகச் சத்துப் பால்மாவுகள் குழந்தைகளுக்கு பொதபொதவென்று பிராய்லர் கோழி போலச் சதையைப் பெருக்குமே ஒழிய சத்திருக்காது. அடிக்கடி நோய்க்கு உள்ளாவார்கள். எந்த நேரமும் மருந்தும், ஊசியும், ஆண்டி பயாடிக்குமாக மருத்துவமனையும் வீடுமாக இருக்க நேரிடும். ஆனால் மேற்படி முறையில் கேழ்வரகினை அரைத்துக் காய்ச்சிய கூழ் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும். வளரும் போதே தசைநார்கள், நரம்பு மண்டலம் வலுப்பெற்று ஊக்கமுடன் வளர்வார்கள்.

    ஐயாம் ஏ கேழ்வரகுப் பாய், ஐ ஆம் ஏ கேழ்வரகுக் கேர்ள் என்று முழக்கமிடலாம்.

    நரம்பு மண்டலம் வலுப்பெற்றால் எலும்பு மண்டலமும் வலுப்பெறும். இது பிற்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக அமையும்.

    கேழ்வரகு மாவரைக்கும் திருகையை இன்று நாம் அருங்காட்சியகத்தில் கூடப் பார்க்க முடியாது. அந்தளவிற்கு அந்நியமாகி விட்டது நம்மிடம். கேழ்வரகு மாவினை அரவை எந்திரத்தில் அரைத்தாலும் பாதகமில்லை, மாவினைப் புளிக்க வைத்துக் காய்ச்சிக் குடித்தல் அதிக நன்மை பயக்கும். இன்று பரவலாக தள்ளுவண்டிக் கடைகளில் விற்கப்படும் கூழும் கூட பிற நவீன உணவுகளை விட எவ்வளவோ நன்மை செய்யும் உணவாகும்.

    ராகியின் பயன்பாடு குறித்துத் தொடர்ந்து பார்க்கலாம்.

    • சிலப்பதிகாரம் இன்னும் தமிழகத்தில் சரியாகப் பரவவில்லை என்ற கருத்து பல தமிழ் அறிஞர்களிடையே உண்டு.
    • செல்லப்பன் தன் பேச்சில் ஒருபோதும் நாகரிகமில்லாத நகைச்சுவையைக் கலக்க மாட்டார்.

    பழகுவதற்கு இனிய பண்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பழந்தமிழ் அறிஞரான சிலம்பொலி செல்லப்பன் அவர்கள்.

    கொள்கை வேறுபாடுகளையோ அரசியல் சார்ந்த கட்சி வேறுபாடுகளையோ ஜாதி சமய வேறுபாடுகளையோ பொருட்படுத்தாமல் எல்லோரையும் மனித நேயத்தோடு அணுகும் பக்குவமும் முதிர்ச்சியும் உள்ள தமிழறிஞராக விளங்கினார் அவர்.

    அவரை நாத்திகர் என்று கருதுபவர்கள் உண்டு. ஆனால் அவர் நாத்திகர். தன்னைப் பற்றி அவரே ஒருமுறை தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    `என்னை நாத்திகன் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட குறுகிய வட்டத்தில் என்னை அடக்க இயலாது. மதம் வழிபாடு சடங்கு போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது உண்மைதான். ஆனால் நமக்கு மேற்பட்ட ஏதோ ஓர் இறைச்சக்தி இருக்கிறது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு!` என்று தன் கோட்பாட்டை விளக்கியுள்ளார்.

    இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவியாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். தாய் பெயர் பழனியம்மாள். தந்தை பெயர் சுப்பராயன்.

    செல்லப்பன் இளமையிலேயே ஏராளமான தமிழ் நூல்களைத் தாமே விரும்பிப் பயிலத் தொடங்கினார். வாழ்நாள் முழுதும் அவர் பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக் கொண்டே இருந்தார்.

    எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இயங்கினார். ஏராளமான மேடைகளில் தொடர்ந்து பேசியதால் பெரிதும் பேச்சாளர் என்றே அறியப்பட்டார்.

    சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சீறாப்புராணம், தேம்பாவணி, வைணவத் தமிழ், பாரதிதாசன் பாடல்கள் என எண்ணற்ற தலைப்புகளில் அவர் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. `சங்க இலக்கியத் தேன், நல்ல குறுந்தொகையில் நானிலம், சிலப்பதிகாரச் சிந்தனைகள், பெருங்கதை ஆராய்ச்சி, பெருங்குணத்துக் கண்ணகி` முதலிய பற்பல நூல்களின் ஆசிரியர் அவர்.

    பக்தி இலக்கியத்திலும் சிலம்பொலி செல்லப்பன் ஆழங்கால் பட்டவர் என்பது பலர் அறியாதது. `கற்பனைக் களஞ்சியம்` துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய பிரபுலிங்க லீலையின் சிறப்புகள் குறித்து அவர் மேடையில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் பேசியிருக்கிறார். தேம்பாவணி, சீறாப்புராணம் ஆகியவை பற்றியும் பேசியிருக்கிறார். தமிழில் படைக்கப்பட்டுள்ள எல்லா வகை இலக்கியங்களையும் ரசிக்க வேண்டும் என்பதே அவர் கொள்கை.

    ம.பொ.சி. அவர்களின் சிலப்பதிகாரப் பேச்சு புகழ்பெற்றது. அதுபோல் செல்லப்பனாரின் சிலம்புச் சொற்பொழிவும் வியக்க வைப்பது. ம.பொ.சி.யைச் சிலம்புச் செல்வர் என்றார்கள். செல்லப்பனார் சிலம்பொலி என அழைக்கப்பட்டார்.

    ஒரு பள்ளியில் நடந்த சிலப்பதிகார விழாவுக்கு சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை வந்திருந்தார். அங்கு வரவேற்புரை ஆற்றியவர் செல்லப்பன். அவரது செந்தமிழில் பெரிதும் ஈர்க்கப்பட்டார் சேதுப்பிள்ளை.

    `செல்லப்பன் தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன். நயத்தக்க நல்லப்பன். இன்றுமுதல் இவர் சிலம்பொலி செல்லப்பன்` என மனமாரப் பாராட்டினார். அன்றுமுதல் இவருக்குச் சிலம்பொலி என்ற பெயர் நிலைத்துவிட்டது. பின்னர் சிலம்பொலி செல்லப்பன் என்றே அவர் பெயர் வழங்கப்படலாயிற்று.

    சிலப்பதிகாரம் இன்னும் தமிழகத்தில் சரியாகப் பரவவில்லை என்ற கருத்து பல தமிழ் அறிஞர்களிடையே உண்டு. அந்தக் கருத்து உண்மைதான். கோவை நஞ்சுண்டன் போன்றவர்கள் இளங்கோ மன்றம் வைத்து சிலம்பைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

    நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் பெருமையைத் தமிழகத்தில் பரப்பியவர்களில் தலையாய இடம் பெறுபவர் சிலம்பொலி செல்லப்பன்.

    சிலம்பொலியார் ஆகச் சிறந்த சொற்பொழிவாளர். இன்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பொதுமக்களைக் கவரும் விதத்தில் சொற்பொழிவு செய்பவர்கள் மிகக் குறைவு.

    ஆய்வு மாணவர்கள் கேட்கிற மாதிரி பண்டிதத் தமிழில் சொற்பொழிவு செய்ய ஒரு சிலர் இருக்கக் கூடும்.

    பழந்தமிழ் இலக்கியத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்கிற வகையில் ஜனரஞ்சகமாகப் பேசிய சிலம்பொலி செல்லப்பன் போன்றவர்களின் பணி இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவைப்படும் ஒன்று.

    இன்றைய சொற்பொழிவாளர்கள் பலர் வாழ்வியல் சொற்பொழிவுகளாகச் செய்யத் தொடங்கி விட்டார்கள். பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்களோடு சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் பெரிதும் குறைந்துவிட்டார்கள்.

    சொற்பொழிவாளர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இருந்தால் தானே அவ்விதம் மேற்கோள் தர இயலும்?

    சிலம்பொலியார் பேச்சில் சங்கப் பாடல்களும் காப்பிய வரிகளும் இடைக்கால இலக்கியங்களும் ஒரு சிறு நினைவுப் பிசகும் இல்லாமல் கடகடவென்று மேற்கோள்களாக வந்து மழையாய்க் கொட்டும்.

    முத்து மாலையில் இடையிடையே பவழத்தைக் கோப்பது மாதிரி, அவர் எண்ணற்ற இலக்கிய மேற்கோள்களைத் தம் பேச்சில் ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் தொடுத்துக் கொண்டே இருப்பார் அவர்.

    எந்த ஒரு சிறுகுறிப்பும் அவர் கையில் இருக்காது. கேட்பவர்கள் பிரமித்து அமர்ந்திருப்பார்கள். செல்லப்பனாரின் அரிய நினைவாற்றல் அவருக்கு இயற்கை கொடுத்த கொடை.

    செல்லப்பன் தன் பேச்சில் ஒருபோதும் நாகரிகமில்லாத நகைச்சுவையைக் கலக்க மாட்டார். ஊனமுற்றோரைக் கிண்டல் செய்வது, பெண்களைக் கேலி பேசுவது போன்றவை அவர் பேச்சில் ஒருபோதும் இருந்ததில்லை. நாட்டுப்புற இலக்கியத்தின் மீது அவருக்கு நாட்டமிருந்தது. எனவே நாட்டுப்புறப் பாடல்களையும் தனிப் பாடல்களையும் அவர் தம் பேச்சில் குறிப்பிடுவதுண்டு.

    வல்லிக்கண்ணனைப் போலவே சிலம்பொலியாரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களுக்கு அணிந்துரை வழங்கிய பெருமைக்குரியவர். வல்லிக்கண்ணன் தற்கால இலக்கியப் படைப்புகளுக்கு அணிந்துரைகளை வாரி வழங்கினார் என்றால், செல்லப்பன் பழந்தமிழ் இலக்கிய விளக்க நூல்களுக்கு அணிந்துரைகளை அள்ளித் தந்தார்.

    இந்தச் செயலை வாழ்நாள் முழுதும் விடாமல் அவர் செய்துவந்தார். அதனால் `அணிந்துரை நாயகர்` என்றே பலரால் போற்றப்பட்டார்.

    இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் அணிந்துரைகளை எழுதித் தருவது ஒரு பெரிய தமிழ்ப் பணி என்று சொல்லத் தேவையில்லை. இவரது அணிந்துரை ஆறு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

    காப்பியம், மரபுக்கவிதை, புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு, குழந்தை இலக்கியம், தன் வரலாறு உள்ளிட்ட பல துறைகளில் இவரது அணிந்துரைத் தொகுப்பு நூல் அமைந்துள்ளது. பல்லாண்டு கால உழைப்பின் பயன் அது.

    இந்நூல் திறனாய்வு என்னும் வகைப்பாட்டில், தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    பழந்தமிழ்க் கடலில் மூழ்க விரும்புபவர்கள் இவரது அணிந்துரைகளைப் படித்தாலே போதும். வேறு எந்த நூலையும் படிக்கத் தேவையில்லை. அந்த அளவு தகவல் களஞ்சியங்களாக அவை திகழ்கின்றன.

    கணிதம் கற்றவர். அவ்வகையில் உயர்நிலைப் பள்ளியில் ஒரு கணித ஆசிரியராகத் தான் தம் பணிவாழ்வைத் தொடங்கினார். அவரிடம் கணிதம் பயின்ற மாணவர்கள் அவர் கணிதத்தைக் கரும்பைப் போல் இனிமையாகக் கற்றுத் தருவார் என அவரது கற்பிக்கும் ஆற்றலைப் புகழ்கிறார்கள். கணக்காசிரியராக இருந்தவர், பின்னர் பதவி உயர்வு பெற்றுத் தலைமை ஆசிரியரானார். அதன்பின் மாவட்டக் கல்வி அலுவலர் ஆனார். தமிழக அரசு அவருக்கு உள்ளாட்சித் துறையில் உயர் அலுவலர் பதவி வழங்கியது.

    தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பதிப்புத் துறையின் இயக்குநராகவும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் தொடர்ந்து தமிழ் வளர்க்கும் முக்கியப் பொறுப்புகளை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறையில் ஆட்சிச் சொல்லகராதியை நடைமுறைப்படுத்தினார். அயல்மொழிச் சொற்கள் பலவற்றிற்கு நல்ல தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள் ஏற்படுவதற்கு வழிவகை செய்தார்.

    இவரது அர்ப்பணிப்போடு கூடிய உயரிய தமிழ்ப் பணிகளால் தமிழ் தழைத்தது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

    உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்கள் இவர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. அந்த மலர்களைக் கண்ணைக் கவரும் சித்திரங்களோடு அழகிய தொகுப்பு மலர்களாகக் கொண்டுவந்த பெருமை சிலம்பொலியாருடையது. இன்றும் சிலம்பொலியாரின் தொகுப்புப் பெருமைக்கு அவை சான்றாகத் திகழ்கின்றன.

    திருவள்ளுவர் திருநாளில் தமிழக முதல்வரின் தலைமையில் விழா எடுத்துத் தமிழை வளர்ப்போருக்குப் பல விருதுகளை அளிக்கச் செய்தவர் இவரே. இன்று சிறுகதை, நாவல், நாடகம், மரபுக் கவிதை, புதுக்கவிதை போன்ற பல துறைகளில் அரசு விருதுகள் வழங்கப்படுவதற்கு செல்லப்பனாரின் முயற்சியே காரணம்.

    சிலம்பொலியாரின் அன்பு மகள் மணிமேகலை, தந்தைக்குப் பேருதவி செய்து அவரை இறுதிவரை கவனமாகப் பராமரித்தார். தன் தந்தை பேசும் எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் அவர் தவறாமல் தந்தையுடன் வருவார்.

    இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட தந்தைக்கு உரிய நேரத்தில் தேவையான மாத்திரைகளை எடுத்துத் தந்து அவர் உடல் நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வார். தந்தையின் ஆற்றல்களை மதிக்கும் இத்தகைய மகப்பேறும் ஒரு நற்பேறுதான்.

    தம் 91 வயதில், 2019 ஏப்ரல் ஆறாம் தேதி, சிலம்பொலி செல்லப்பன் காலமானார். அன்று அவர் அஞ்சலிக்காகக் கூடிய பெருங்கூட்டத்தால் சென்னையே குலுங்கியது என்று சொல்ல வேண்டும். அந்தப் பெருங்கூட்டத்தில் பலதரப்பட்ட கொள்கையுடையவர்கள் இருந்தார்கள்.

    அவர் அத்தனை பேரின் மனங்களையும் கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி, தன் அன்பால் வென்றிருந்தார். பழந்தமிழ் இலக்கியச் சொற்பொழிவுத் துறையில் நெடுங்காலம் மின்னிய ஒரு நட்சத்திரத்தைக் கண்ணீரோடு எல்லோரும் வழியனுப்பி வைத்தார்கள்.

    இப்போது சிலம்பொலியாரைப் போல் அற்புதமாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பேசுவதற்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது ஒரு கேள்வி.

    அப்படிப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பேசினாலும் அதை ரசிப்பதற்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது அதை விட முக்கியமான அடுத்த கேள்வி!

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • மேரி அழுகையுடன் அப்படியே சாய்ந்து ஒரு பாறையில் அமர்ந்தாள்.
    • ராஜேஷ் தைரியமாய் நிற்க, டேவிட் ‘டிரிக்’கரில் விரல் வைக்க, அழகர் உள்பட மொத்த போலீஸ் டீமும் பதறியது.

    அழுதபடியே தொடர்ந்து பேசினாள் மேரி... "உங்கள காப்பாத்தணும்னு தனி ஆளா போலீஸ் ஸ்டேஷனுக்கு, வந்தேன். வந்து பார்த்தா உங்களை மிரட்டி கார்ல ஏத்தி.. ராஜேஷோட ஆளுங்க எங்கேயோ கொண்டு போக போறாங்கன்னு யூகிச்சு யாருக்கும் தெரியாம டிக்கியில ஏறி... இவ்ளோ தூரம் மூச்சுவிட முடியாம சிரமப்பட்டு நீங்க வந்த கார்லதான் நானும் வந்தேன்.. கடைசியில பார்த்தா எல்லாத்துக்கும் காரணம் என் அப்பான்னு நெனைக்கிறப்போ நெஞ்சுக்குழில நெருப்ப வெச்ச மாதிரி இருக்குப்பா…" தலையில அடித்தபடி மேரி அழ, தேவசகாயம் மவுனமாய் நின்று கொண்டிருந்தான்.

    டேவிட்டின் துப்பாக்கி முனை எப்போது அழுத்தப்படுமோ என்ற பயத்தில், ராஜேஷ் மற்றும் அவன்கூட வந்தவர்கள் வெலவெலத்து போய் நின்று கொண்டு இருந்தனர்.

    மேரி அழுகையுடன் அப்படியே சாய்ந்து ஒரு பாறையில் அமர்ந்தாள். இப்போது பெருமாள் வெடித்தான்.

    "தேவசகாயம்.. நானும் கட்சியில் இருக்கிறதால, எங்கட்சிக்கு பிடிக்காதேன்னு, என் தங்கச்சி திவ்யா வேற மதத்துகாரனை காதலிக்கிறான்னு தெரிஞ்சதும் எதிர்ப்பு தெரிவிச்சேன், அவங்க கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தடுக்க ரொம்ப முயற்சி பண்ணேன். இன்னும் சொல்லப் போனா அவங்க கல்யாணத்தை நிறுத்த நான் முயற்சி பண்ணதுதான் இந்த கதையோட ஆரம்ப அத்தியாயமே. ஆனா- பாருங்க.. ஆரம்பத்துல இருந்து எதிர்த்த நான், டேவிட்டும், திவ்யாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு தெரிஞ்சதும், ஒதுங்கிட்டேனே தவிர இப்படி உங்கள மாதிரி திட்டம் போடல. உங்க வயசுக்கு நீங்க மத்தவங்களை வாழ்த்தணும். இப்படி வாழவேண்டியவங்க வாழக்கையில வீணா விளையாடி, உங்க மானத்தை மட்டுமல்ல...மரியாதையையும் இழந்து நிக்குறீங்க. சே.. உங்களை பார்க்கவே அருவருப்பா இருக்குது சார்..!" பெருமாள் முகம் சுழித்து, வெறுப்பை உமிழ்ந்தான்.

    டேவிட்டின் நண்பர்கள் நெல்சன் முன் வந்து, "அப்பான்னுதான் உங்களை கூப்பிடுவோம். அதுக்கு காரணம், நீங்க டேவிட்டோட அப்பா அப்படிங்கிறதால மட்டுமல்ல. உங்க வயசுக்கு நாங்க குடுத்த மரியாதைதான் இது. நானும் கிறிஸ்டியன்தான் சார். ஆனா, உங்களுடைய மதவெறி ஆபத்தான, அசிங்கமான ஒரு குணம். இதே டேவிட் இடத்துல நான் இருந்தா எடுக்கிற முடிவு வேற மாதிரி இருந்திருக்கும்.."

    அவன் சொல்லி முடிக்கவும் ராஜேஷ் கத்தினான். "என்னடா.. ஆளு ஆளுக்கு இதான் சமயம்னு அந்தாளை பிடிச்சு உலுக்குறீங்க.. ஆமாய்யா அந்த தேவசகாயம் என்கூட சேர்ந்து திட்டமிட்டு, இந்த தில்லாலங்கடி வேலை செஞ்சது தப்புதான்! அதுக்கு என்ன பண்ண போறீங்க.. எங்க தைரியம் இருந்தா.. அந்த டேவிட் கையில துப்பாக்கி இருக்குல்ல.. டொப்பு டொப்புனு என்னையும், அந்த தேவசகாயத்தையும் சுடச்சொல்லுங்களேன்.."

    பெருமாள் டேவிட்டை பார்க்க, டேவிட் ராஜேஷை முறைத்தான்.

    "என்னயா டேவிட் முறைக்கிற. நியாயப்படி பார்த்தா உன் பொண்டாட்டிய நான் கடத்தி இருக்கேன், அது என்னவோ சொல்வாங்களே என்ன அது..?" யோசித்த ராஜேஷ், நினைவுக்கு வந்தவனாய் தொடர்ந்தான்.

    "ஆங்.. நீ தொட்டு தாலி கட்டின, உன் பொண்டாட்டி தாலிய, கட் பண்ணி பார்சல் அனுப்பினவன் நான். கொச்சையா சொல்லனும்னா தாலிய அறுத்து எரிஞ்சவன் நான். நியாயப்படி பார்த்தா நான்தான் முதல் குற்றவாளி. உங்க அப்பா ரெண்டாவது குற்றவாளி. புரியுதா..?" - எகத்தாளமாய் ராஜேஷ் பேசினான்.

    டேவிட்டின் கண்கள் சிவந்தது. ராஜேஷ் தொடர்ந்தான்.

    "அதனால… நீ ஆம்பளையா இருந்தா என்னை ஒரு புல்லட்டால சோலிய முடுச்சுட்டு, இன்னொரு புல்லட்டால உன் அப்பனையும் முடுச்சுடு. கோர்ட்ல கேட்டா யாரோ சொன்னாங்களே.. அது மாதிரி தற்காப்புக்கு சுட்டேன்னு சொல்லிக்கோ… சுடு… சுடு… சுடு… சுடுமா..!"தன் சட்டைப்பட்டனை திறந்து மார்பை காட்டினான் ராஜேஷ்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    டேவிட்டின் ரத்தம் சூடேறியது. துப்பாக்கியை அவன் நெஞ்சுக்கு நேராக நீட்டினான். - திவ்யா திகைத்து போய் பார்க்க.. டேவிட்டின் நண்பன் தியாகு கத்தினான்.

    "சுடுறா.. மாப்பிள்ளை இவன் எல்லாம் பூமிக்கு பாரம்தான்.."

    ராஜேஷ் தைரியமாய் நிற்க, டேவிட் 'டிரிக்'கரில் விரல் வைக்க, அழகர் உள்பட மொத்த போலீஸ் டீமும் பதறியது.

    "சுடுறா.. மாப்ளே.." - செந்தில் குரல் கொடுத்தான்.

    இப்போது, ட்ரிக்கரை அழுத்தப்போன டேவிட், துப்பாக்கியை கீழ் இறக்க, எல்லோரும் அவனையே பார்க்க, டேவிட் பேசினான்.

    "நான் எப்பவுமே தப்பு செய்ற மனிதர்களை மன்னிக்கணும்னு நெனைக்கிறவன். காரணம் - பயம் இல்ல பக்குவம். அவங்க அவங்களுக்கு ஒரு நியாயம், ஒரு காரணம் அவங்க பண்ற செயலுக்கு வச்சிருப்பாங்க. அது தப்புன்னு அவங்க உணரனும்னா, அவங்களுக்கு தண்டணை தர்றதை விட மன்னிக்கிறது தான் சரி..!" சொன்ன டேவிட் தொடர்ந்தான்.

    "ராஜேஷ் விளையாட்டுல கூட சில சமயம் இந்த விளையாட்ட விளையாட வேண்டாம்னு முடிவு எடுக்கணும். தப்பா விளையாடி தோற்கறதை விட, விளையாடாம இருக்கிறது கூட ஒரு வகையில் வெற்றிதான்..!" டேவிட் சொல்லி முடிக்கவும், அவன் கையில் இருந்த, ரிவால்வர் பறிக்கப்பட்டு, ராஜேஷ் மார்பின் மீது 'படபட' வென்று குண்டுகள் பாய, ராஜேஷ் சரிந்து விழுந்தான்.

    ஒரு கணம் 'என்ன நடந்தது' என அனைவரும் யூகிக்கும் போதுதான் தெரிந்தது ராஜேஷை சுட்டு விட்டு, குண்டுகள் தீர்ந்து துப்பாக்கியுடன் தேவசகாயம் நின்றுகொண்டு இருந்தார்.

    "அவசரப்பட்டுடீங்களே அப்பா.." டேவிட் அழும் குரலில் சொன்னான். "இல்லே டேவிட்.. இப்பதான் நிதானமா செயல்பட்டு இருக்கேன். மதம் என்னை மனுஷனா நடக்க விடலை… உன் கல்யாணம் எனக்கு பிடிக்கலேன்னா நான் ஒதுங்கி போயிருக்கணும்.. இப்படி தரம் தாழ்ந்து இந்த ராஜேஷ் கூட சேர்ந்து செயல்பட்டு இருக்க கூடாது. என்ன நீயும், திவ்யாவும் மன்னிச்சுடுங்க.. கண்ணீர் மல்க, தன் உதடு வெடிக்க பேசினார் தேவசகாயம்.

    ஏதோ சொல்ல, டேவிட் வாயை திறக்க முயல, அவன் வாயை பொத்தி, "எதுவும் சொல்லாத டேவிட்.. நான் வாழத்தகுதி இல்லாத ஒரு ஆளு.." - சொன்னவர், அடுத்த கணம் யாரும் எதிர்பார்க்காமல், அந்த காட்டு பகுதியில் இருந்து இறங்கி, ரோடு நோக்கி ஓடினார். என்ன? ஏது? என்று உணரும் முன் ரோட்டில் படுவேகமாய் வந்த லாரியின் குறுக்கே பாய்ந்தார். 'ஐயோ' என்ற ஒட்டுமொத்த பேரின் கூக்குரல் காடு எங்கும் ஒலிக்க, உடல் சிதறி உருக்குலைந்தார் தேவசகாயம்.

    அதே நேரம்! டேவிட் நண்பர்கள் கொடுத்த தகவல்படி போலீஸ் படைகள் வேனில் வந்து இறங்கவும் சரியாய் இருந்தது.

    ஆயிற்று! ஒரு வருஷம் ஓடிப்போனது!

    எல்லாம் முடிந்து, தேவசகாயம் மாலையுடன் போட்டோவாய் தூங்கிக் கொண்டிருந்தார். நடந்த சம்பவங்களை எல்லோரும் மறந்து அவர் அவர் வேலைகளில் ஈடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். போலீஸ், கோர்ட் என விசாரித்து ராஜேஷின் கூட்டாளிகள் ஜெயில் தண்டனை பெற்றுவர, அழகர் தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். வழக்கு போய் கொண்டிருக்கிறது.

    அதே குறுக்குத்துறை முருகன் கோவில்.

    சாமி கும்பிட்டுவிட்டு வெளிப்பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர் திவ்யாவும், டேவிட்டும். இருவரும் இப்போது இருவேறு கம்பெனிகளில் வேலைகிடைத்து, போய் வந்தாலும், பகுதி நேரமாய், இன்னும் தங்களது 'திவ்ய கானங்கள் வைப்ஸ்' இசைக்குழுவை நடத்திக்கொண்டு இருந்தனர். இருவருக்குமே நேரம் கிடைப்பது அரிதாய் இருந்தாலும் மாதா மாதம் ஒரு இரண்டாம் செய்வாய்க்கிழமை இந்த குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு வருவதை மட்டும் தவற விடுவதே இல்லை.

    தன்னை பெரிய ஆபத்தில் இருத்து காப்பாற்றியது இந்த முருகன்தான் என்பதில் திவ்யாவுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. அவள் நம்பிக்கையை மதித்து டேவிட்டும் அவளுடன் வருகிறான். அதேபோல, டேவிட்டின் நம்பிக்கைக்காக வாரம் தவறாமல் அவனுடன் ஞாயிற்றுகிழமை சர்ச்சுக்கு செல்ல திவ்யாவும் தவறவிடுவதில்லை.

    அப்போது பைக்குகள் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, டேவிட் நண்பர்கள் நெல்சன், தியாகு, செந்தில் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் ஓடி வந்தனர்.

    "என்னடா… ரொம்ப சந்தோஷமா வர்ரீங்க… என்ன விஷயம்?"

    "மாப்ளே.. நாம எதிர்பாராமலே பெங்களூர்ல நமக்கு ஒரு கச்சேரி புக் ஆகிருக்குடா…"

    - நெல்சன் மூச்சு வாங்க சொன்னான்.

    "ஆமாம்., மாப்ளே நாம வாங்குற தொகையை விட ரெண்டு மடங்கு.." - செந்தில் குதித்தான்.

    "ஆரம்பத்துல பிரியா கச்சேரி பண்ணோம்.. இப்போ ரெண்டு மடங்கு சம்பளம்.. இதான் மாப்ளே வளர்ச்சி…" - தியாகு சொன்னான்.

    அனைவரின் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடியது. இப்படித்தான் 'முதல் வெளியூர் கச்சேரி' என்று மேலூர் போகும் சமயம் திவ்யாவை ஆபத்து சூழ்ந்தது. இம்முறை பெங்களூர் செல்லப்போகும் அவளை எந்த ஆபத்தும் நெருங்காது என திவ்யா நம்பினாலும், அவள் மனசுக்குள் ஒரு பயம் வரத்தான் செய்தது. ஆனால் - மகிழ்ச்சியில் டேவிட் அவளை பார்த்து "உசுரே நீதானே…" என விசிலில் பாடி, தோளை அணைத்தான்.

    (முற்றும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • மடையில் இருந்து வெளிவரும் நீர் ஒரு தொட்டியில் தேங்கி அதன் மூன்று புறங்களிலும் வெளியேறும்.
    • கோதையாருக்கு பல துணை நதிகள் உள்ளன.

    ஆய்நாட்டில் நீர்நிலைகள் அனைத்தும் கரையார்கள் எனும் மருதநில மீனவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். கரையார், மருத நிலத்தின் நீர் நிலைகளில் மீன் பிடித்தலும், மடை திறப்பதும் போன்ற மரபுத் தொழிலை செய்பவர். மன்னன், வணிகன், வேளார்களை உள்ளடக்கிய கட்டமைப்பின் நீர் ஆதாரம் என்பது நாட்டின் அடிப்படை தேவை அல்லவா. ஓடும் நதியில் இருந்து கால்வாய் வெட்டி அதை நாட்டின் அகழியோடும், இயற்கையாய் அமைந்த நீர் நிலைகளோடு இணைக்க அவ்வகை நீர் நிலைகளை பேணி பராமரிக்க கரையார்கள் நீர் துறையில் இருப்பார்கள்.

    கரையார்கள் நீர் நிலைகளில் இருக்கும் மடைகளைத் திறந்து பல பெரிய நிலபரப்புகளில் இருக்கும் உழவு நிலத்திற்கு நீரை பாய்ச்சிவிட்டு, பின்னர் அடுத்த நிலப்பரப்புகளுக்கும் செல்லும். நீர் பாசனத்தில் இருந்து மடை வழியாக வெளியேறும் நீர் தங்கு தடையில்லாமல் அனைத்து உழவு நிலங்களுக்கும் சென்றுகொண்டு இருக்கும். அதனால் நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் தங்கிக் கொள்ளும். பெரிய அளவில் கடலில் சென்று கலப்பதில்லை.

    மடையில் இருந்து வெளிவரும் நீர் ஒரு தொட்டியில் தேங்கி அதன் மூன்று புறங்களிலும் வெளியேறும். அவ்வகை மடைகளை திறந்தும், அடைக்கவும் செய்யும் கரையார்கள் நீரோடு முட்டி மோதும் பெரிய மாவீரர்களாகவும், தெளிவாக நீரின் நுணுக்கத்தை அனு அனுவாக அறிந்தும் வைத்திருப்பார்கள்.

    குழித்துறையார், திருவட்டாறு அருகே பரளியாரும் கோதையாரும் இணைந்ததால் உருவானது. கோதையாருக்கு பல துணை நதிகள் உள்ளன. இதில் சித்தார் முக்கிய துணை நதி. குழித்துறையாற்றின் முக்கிய நதியின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த ஆறு குமரிநாட்டுக்கு மேற்கே தேங்காப்பட்டினம் அருகே அரபிக்கடலில் சங்கமிக்கிறது. மகேந்திரகிரி மலைகளின் வடக்கே உள்ள மலைகளில் பரளியாறு உருவாகிறது.

    இயற்கையின் காட்சிகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே. ஒரு கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் ஆரம்பித்த அடை மழை, அந்த மாதம் முழுவதும் விடாமல் பெய்துகொண்டே இருந்தது. ஏரி, குளம் எல்லாம் ரொம்பிடிச்சி. மழையும் விடற மாதிரி தெரியல. ஏரியில் கடல் போல ஒரே அலையா அடிச்ச வேகத்துல ஏரிக்கரை ஒடையற மாதிரி இருக்குது. அந்த ஏரியின் காவக்காரர் வயசான தாத்தா, ஏரி ரொம்பற வேகத்தைப் பார்த்த அவருக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. எப்படியாவது அரண்மனைக்குச் சேதி தெரியணும்னு துடிக்கிறாரு.

    இங்க அப்பிடியே விட்டுட்டு போயிட்டா ஏரிய யார் பாத்துக்கறதுன்னு நெனச்சி ஆள் யாராவது வந்தா தேவலையேன்னு வேண்டிக்கிறார். யாரும் வர்ற மாதிரி தெரியல. என்ன செய்யறதுன்னு நெனச்சிக்கிட்டே தலையில ஒரு சம்பு கூடைய கவுத்துக்கிட்டு காவ காத்துட்டு இருக்கறாரு. வெகு நேரம் ஆனதுக்கப்பறம் அச்சத்துல நாக்குழற காப்பாத்து தாயின்னு கதற ஆரம்பிச்சுட்டார். அப்பதான் அந்த அதிசயம் நடந்துச்சி.

    அவரு பேத்தி மாதிரி பாவாடை சட்டை போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு சிரிச்சுக்கிட்டே அங்க வருது. தூக்கு போசியோட வந்த பொண்ணு, தாத்தா கஞ்சி எடுத்திட்டு வந்திருக்கேன் குடின்னு சொன்னபோது தாத்தாவும் கஞ்சிய வேக வேகமா குடிக்கிறதப் பார்த்த அந்த சின்னப்பொண்ணு, ஏன் தாத்தா ஒரே பதட்டமா இருக்கிற என்ன பிரச்சனைன்னு கேட்குது. அதுக்கு தாத்தா பாத்தியாம்மா மழை இப்படி பிச்சிக்கிட்டு போகுது? ஏரியும் ரொம்பிப் போச்சி, மழை வேற நிக்காம பேஞ்சிக்கிட்டே இருக்குது. இப்படியே போனா ஏரி ஒடஞ்சிடும். இந்தச் சேதிய அரசவைக்கு தெரியப்படுத்தணும்.

    என்னால தனியா இத சமாளிக்க முடியாது. நிறைய ஆட்களை கூட்டிட்டு வரணும், அதான் எப்படி ஏரிய விட்டுட்டுப் போறதுன்னு தெரியாம இருக்கிறன்மான்னு தாத்தா சொல்றாரு. அதுக்கு அந்தச் சின்னப் பொண்ணு அப்பிடியா தாத்தா நீங்க வேணுமுன்னா போய்ட்டு வாங்க இந்த ஏரிய நீங்க வரும்வரை ஒடையாம நான் பாத்துக்கறன்னு சொல்லுது.

    ஆனால் தாத்தாவோ ஏம்மா நீயோ சின்னப் பொண்ணு. என்னாலயே முடியல நீ எப்படிமா பாத்துக்கவன்னு கேட்கறாரு. அதுக்கு அந்தப் பொண்ணு, இல்ல தாத்தா நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க. நான் பாத்துக்கறன்னு சொல்லுது. சரி இந்த நேரத்துல இந்தப் பொண்ண விட்டா வேற வழியில்லை என்ன செய்யிறது. அந்த இரவு நேரத்துல தலையில சம்பு கூடையைக் கவுத்துகிட்டு கௌம்பினவரு, பொழுது விடியற நேரமாயிடிச்சின்னு வேகவேகமா ஓடுராறு.

    இதுக்கு நடுவுல நல்லா தூங்கிக்கிட்டு இருந்த செம்பவளம் திடீர்னு எழுந்து உட்கார்ந்துகிட்டு, அப்பா, அப்பான்னு புலம்ப ஆரம்பிக்க, எல்லோரும் ஓடிவந்து சுற்றி நின்னு என்னன்னு கேட்கப்போக, அவளும் தான் கனவு கண்டதாகச் சொன்னாள். அந்தக் கனவுல அடை மழை விடாது பெய்யற மாதிரியும், ஏரி நிரம்பி வழியிற மாதிரியும், கன்னியாத்தா (சாமி) வந்து ஏரிய காக்கற மாதிரியும், ஏரிய காவக் காத்தவரு இங்க வந்து ஏரி ரொம்பி, ஒடையிற மாதிரி இருக்குதுன்னு செய்தி சொல்லற மாதிரியும், எல்லாருக்கும் செய்தி சொல்லிட்டு ஏரிக்கு திரும்பிப் போற மாதிரியும், இவர் போனவுடனே கன்னியாத்தா அங்கிருந்து போயிடற மாதிரியும், உடனே ஏரிக்கரை உடைந்து ஊரே வெள்ளத்தில் மூழ்கிப்போயிடற மாதிரியும் தெரியுதுன்னு சொல்லி துடிச்சிப்போனா. விடியற்கால நேரத்துல கண்ட கனவு பலிக்குமே, மழை வேற விடாம பேஞ்சிக்கிட்டே இருக்குதே கடவுளே என்று பரபரக்க ஆரம்பித்துவிட்டோம்.

    பவளசங்கரி

    கொஞ்ச நேரம் கூட இல்லை, செம்பா கனவு கண்டது போல ஏரிய காத்த காவக்காரன் வீட்டு வாசல்ல நின்னு அய்யா அய்யான்னு கூப்பிடறாரு. வெளியில வந்து பார்த்து என்ன ஆச்சின்னு கேட்டதுக்கு காவக்காரனோ நெறைய மழை பேஞ்சி ஏரி ரொம்பி வழியிது, இப்படியே போச்சின்னா ஏரி உடைந்து ஊரே அழிஞ்சிடும், உடனே ஆட்களை கூட்டிட்டுப் போவணும் ஏரிக்கரைய பலப்படுத்தணுமுன்னும், ஏரியில் ஒரு சின்னப் பெண்ணான தன் பேத்திய காவலுக்கு விட்டுட்டு வந்திருக்கேன்னும் சொல்றாரு.

    யாருக்கும் ஒன்னும் புரியல, செம்பா கனவுல கண்ட மாதிரியே இருக்குதேன்னு நெனச்சி அடுத்து நடக்கப் போவதை எண்ணி எல்லோரும் குழம் பிப்போய் நின்னாங்க. சாமிதான் செம்பாவின் கனவில வந்து நடக்கப்போறத சொல்லி எச்சரிக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டோம். சரி அதுக்கு நாம என்ன பண்ணனும், என்ன பரிகாரம் பன்னா ஏரி மடைய உடையாமல் பாதுகாக்க முடியும்ன்னு கேக்கறாரு அரசர். அதுக்குள்ள எல்லாருக்கும் செய்தி தெரிஞ்சி ஊரே ஒன்னு கூடி, என்ன செய்யிலாம்னு அதிர்ந்து போய் நின்னாங்க.

    அப்பதான் செம்பா மடமடவென்று காரியத்தில் இறங்கினாள். ஊரிலுள்ள இளந்தாரிகள், வேலை தெரிஞ்சவங்க, ஆண்கள், பெண்கள் என அனைவரையும் சேர்த்துக்கொண்டு ஏரிக்கரையை நோக்கி விரைந்து செல்கிறாள். கன்னிமார் சாமியையும், குல தெய்வம் ஆயிரை அம்மனையும் வேண்டிக்கொண்டு களம் இறங்கினார்கள்.

    ஏரிய காவல் காத்த சின்னப்பொண்ணு தன்னுடைய கால் கட்டைவிரலை எடுத்து ஏரி உடைகிற இடத்தில வச்சிருந்தது. ஏரிக்கரை உடையாமல் அப்படியே இருந்திடுச்சு. ஊர் சொல்லப்போன காவக்கார தாத்தா வருவார்ன்னு பார்த்த சின்னப்பொண்ணு காவக்காரன், ஊர் மக்களுடன் சேர்ந்து வருவதைப் பார்த்தவுடன் அப்படியே மறைந்து போயிடிச்சி. உண்மையில் காவக்காரனின் பேத்தி அவங்க வீட்டில் தான் இருந்தாள். அப்படீன்னா அங்கு ஊரைக்காக்க வந்தது கன்னிமார் சாமிதான்னு புரிஞ்சிக்கிட்டோம்.

    தெய்வாதீனமாக மழையும் சற்று ஓய்ந்தது. செம்பா தலைமையில் ஊர் ஒன்றுகூடி இரண்டு நாட்கள் விடாமல் போராடி ஏரிக்கரையை சரி செய்தார்கள். கன்னியாத்தா சிலை ஒன்றையும் அங்கு வச்சிருக்காங்க. இந்த கன்னியாத்தாவால் தான் ஏரி உடையாமல் இருக்குது. கன்னியாத்தா மட்டும் இங்க இருந்து போயிட்டா ஏரி உடைந்து ஊரே அழிஞ்சிடும். சிலை வடிவுல கன்னியாத்தா அங்கேயே நிரந்தரமா தங்கிப்பிட்டா. ஊர் மக்கள் செம்பாவையும் கன்னியாத்தாவாகவே பார்க்கத் தொடங்கிட்டாங்க.

    அன்றுதான் பத்து வயதே நிரம்பிய அந்தப் பெண் குழந்தை செம்பவளத்தாயி என்று ஊரே கொண்டாடும் நிலைக்கு உயர்ந்து நின்றாள். மாரியன்னை வழிபாடுகளில் ஒரு பகுதியாக அன்று கன்னிமார் பூசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏழு கன்னிப் பெண்களை அமர வைத்து அவர்களை சப்த கன்னியரான, பிராமி, வைணவி, மகேசுவரி, கவுமாரி, வாராகி, மகேந்தரி, சாமுண்டி என்ற ஏழு அன்னையாக எண்ணி அலங்கரித்து, அவர்களுக்கு பூசை செய்வது வழக்கம். அன்று அந்த பூசையில் நடு நாயகமாக சென்று அமர்ந்து கொண்டவள் செம்பவளம். கடுமையான விரதம், பல மணி நேர பூசை என ஒரு சிறு பெண்ணிற்கு மிக சிரமமான விசயம் என்று எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கத் தயாராக இல்லை. கன்னியாத்தாவாகவே காட்சியளித்த செம்பாவைப் பார்த்து ஊரே அதிசயித்தது.

    தொடருவோம்...

    coraled@gmail.com

    • 25 முதல் 32 வயது பெண்களுக்கு 2 சினைப்பையிலும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 15 முதல் 25 வரை இருந்தால் நல்ல விஷயம்.
    • 20 முதல் 25 ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருந்தால் 10 முதல் 15 நல்ல முதிர்ச்சி அடைந்த முட்டைகள் கிடைக்கும்.

    குழந்தையின்மை பிரச்சினையில் பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்களில் ஒன்று, ஆன்ட்ரல் பாலிக்கில் கவுன்ட் (ஏ.எப்.சி) என்பதாகும். இன்றைக்கும் குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் நிறைய நோயாளிகள், டாக்டர் என்னுடைய ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 5 தான் இருக்கிறது, 6 தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

    ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது என்ன?

    ஆன்ட்ரல் பாலிக்கல் என்பது சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் இருக்கும் திரவம் நிறைந்த சிறிய பைகள் ஆகும். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை, ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனுக்காக, சினைப்பையில் முட்டைகள் இருப்பை (ஓவரியன் ரிசர்வ்) குறிக்கும் ஒரு முக்கியமான விஷயம் ஆகும். ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கருமுட்டைகள் அவர்களுடைய சினைப்பையில் இருக்கும். இந்த சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் இருக்கும் திரவம் நிறைந்த சிறிய பைகளின் எண்ணிக்கை தான் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பதாகும்.

    இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை, அளவில் சரியாக இருந்தால், அந்த பெண்களால் நல்ல முறையில் கருத்தரிப்பதற்காக வாய்ப்புகள் அதிகம். இயல்பான ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்றால் என்ன? அதை எப்படி எண்ணுவோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இயல்பான ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை, வயதுக்கு ஏற்ப அளவில் மாறுபடும்.

    25 முதல் 32 வயது பெண்களுக்கு 2 சினைப்பையிலும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 15 முதல் 25 வரை இருந்தால் நல்ல விஷயம். இது நன்றாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை கொடுக்கும். தோராயமாக ஒரு சினைப்பையில் 8 முதல் 10 ஆன்ட்ரல் பாலிக்கில் இருக்க வேண்டும். 2 சினைப்பையையும் சேர்த்து பார்க்கும் போது 20 முதல் 25 இருக்கலாம். இது இயல்பான தன்மையாகும்.

    35 வயதுக்கு மேலே உள்ள பெண்களுக்கும் இதுபோன்று ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருக்கலாம். ஆனால் 2 சினைப்பையிலும் சேர்த்து 5-க்கு கீழ் இருந்தால் மிகவும் மோசமான நிலையாகும். இதை எந்த மட்டத்தில் அளவீடு செய்கிறோம் என்றால், பொதுவாக மாதவிடாய் வந்த 2-வது நாள், 3-வது நாளில் இந்த அளவீட்டை எடுப்போம். சினைப்பையில் இருக்கிற 2 எம்எம் முதல் 10 எம்எம் அளவு கொண்ட பாலிக்கில்களை அல்ட்ரா சவுண்ட் மூலமாக அளவீடு செய்வோம்.

    சில நேரங்களில் நன்றாக வட்டமாக இருக்கும் பாலிக்கிலுக்கு ஒரு அளவீடு இருக்கும். கொஞ்சம் வடிவம் மாறி இருந்தால் இரண்டு புறத்தையும் அளவீடு எடுத்து சராசரியை பார்ப்போம். இந்த வகையில் எத்தனை எண்ணிக்கை அளவில் பாலிக்கில் இருக்கிறது என்பதை முறையாக எண்ணி அந்த பாலிக்கில் எண்ணிக்கையை பொருத்துதான் இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை நாங்கள் குறிக்கிறோம்.

    ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை முன்பே கணிப்பது ஏன்?

    பொதுவாக இந்த ஆன்ட்ரல் பாலிக்கல் எண்ணிக்கையை எதற்காக முன்பே கணிக்கிறோம் என்றால், ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனை அறியவும், முட்டைகளின் எண்ணிக்கை தெரிந்து கொள்ளவும் இதனை கணிக்கிறோம். சில நோயாளிகள் எல்லா பாலிக்கில்கள் உள்ளேயும் முட்டை இருக்குமா என்று கேட்பார்கள். ஆனால் எல்லா பாலிக்கில்கள் உள்ளேயும் முட்டை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

    உதாரணத்துக்கு 10 பாலிக்கில்கள் இருக்கிறது என்றால், அதில் 7 முதல் 8 முட்டைகள் கிடைக்கலாம். அதாவது 72 முதல் 80 சதவீதம் வரை முட்டைகள் இருக்கலாம். எனவே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 25 ஆக இருந்தால், அந்த பெண்ணுக்கு 15 அல்லது 16 முட்டைகள் நன்றாக கிடைக்கும்.

    அந்த வகையில் தான் இயல்பான ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 20 முதல் 25 வரை கொண்ட பெண்களுக்கு கருத்தரிக்கும் திறனுக்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறோம். ஒருவேளை அவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு ஐ.வி.எப். செய்தாலும் அதன் பலன் நன்றாக இருக்கும்.

    இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை பொதுவாக எந்த நாட்களில் பார்க்க வேண்டும், எதற்காக பார்க்க வேண்டும் என்கிற விஷயங்களில் சில தெளிவுகள் தேவை. இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை முதலில் பெண்களின் சினைப்பையில் பிரீஆன்ட்ரல் பாலிக்கில் ஆக இருக்கும்.

    பின்னர் அந்த பிரீஆன்ட்ரல் பாலிக்கில் சினைப்பையில், ஆன்ட்ரல் பாலிக்கில் ஆக உருமாறும். ஒரு பெண்ணின் சினைப்பையில் பல கோடி முட்டைகள் இருக்கும். தாயின் வயிற்றில் பெண் குழந்தை உருவாகி 5 வார கருவாக இருக்கும் போதே அந்த குழந்தையின் சினைப்பையில் முட்டைகள் உருவாகிவிடும். இந்த முட்டைகள் வளர்ச்சி அடைந்து பின்நாளில் இயல்பான நிலைக்கு வரும்.

     

    வயதுக்கு ஏற்ப ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை எத்தனை இருக்க வேண்டும்?

    பிரீஆன்ட்ரல் நிலையில், அதாவது 2 மில்லி மீட்டருக்கு குறைவாக இருக்கும் முட்டைகள் ஸ்கேன் செய்து பார்த்தால் தெரியாது. பின்னர் இந்த முட்டைகள் ஒவ்வொரு மாதமும் வளர்ச்சி அடையும். வளர்ச்சி அடையும் இந்த முட்டைகள் 2 மில்லி மீட்டர் முதல் 10 மில்லி மீட்டர் அளவில் இருப்பதுதான் பின்நாளில் கருமுட்டைகளாக உருவாகும்.

    கருப்பையில் முட்டைகள் இருப்பு என்பதை 2வது அல்லது 3வது நாளில் பார்க்கும்போது, அந்தந்த மாதங்கள் வருகிற காலத்தில் குறிப்பிட்ட முட்டைகள் உருவாகி இருக்கும். அதில் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்ட சில முட்டைகள் தான் இயற்கையாக வளரும்.

    நாம் செயற்கை கருத்தரிப்பு செய்வதற்காக மருந்துகள், மாத்திரைகள் கொடுக்கும் போது இந்த முட்டைகளின் எண்ணிக்கையை தூண்டு வதற்கு தான் மருந்துகளை கொடுக்கிறோம். அதனால் முட்டைகள் தூண்டப்படுதல் அதிகமாகிறது. முட்டைகள் தூண்டப்படும் போது உருவாகிற கருவின் திறனும் அதிக மாகும். கருத்தரிப் பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். இதைத்தான் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையின் அடிப்படையாக கருதுகிறோம்.

    பொதுவாக இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை எந்த அளவு இருக்க வேண்டும் என்றால், இயல்பான வயதில் 25 என்று சொல்கிறோம். இதுவே 37, 38 வயது ஆகும் பெண்களுக்கு இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 10க்கு கீழே வரும். அது ஓரளவு நல்ல நிலை தான். இதுவே 5-க்கு கீழே வந்தால் அவர்களுக்கு மோச மான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் முட்டைகள் குறைவதால் பெண்கள் கருத்த ரிப்பதில் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

    சில நேரங்களில் இருக்கிற எல்லா ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையும் முட்டைகளாக உருவாவது இல்லை. எனவே தான் 7 அல்லது 8 ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருந்தால் இவர்களுக்கு 4 முதல் 5 முட்டைகள் உருவாகலாம். இதன் பலன் பொதுவாக மோசமாக இருக்கும் என்று சொல்கிறோம்.

    அந்த வகையில் வயதுக்கேற்ற வகையில் இது மாறுபடும். இளம் வயது பெண்களுக்கு ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 10க்குள் இருந்தால் இவர்களுடைய முட்டைகள் இருப்பு எல்லைக்கோட்டில் இருக்கிறது என்று அர்த்தம்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை வைத்து ஐ.வி.எப். சிகிச்சை:

    அந்த வகையில் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது ஒரு பெண்ணின் சினைப்பையின் முட்டைகள் இருப்பை குறிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை வைத்துதான் பொதுவாக ஐ.வி.எப். சிகிச்சை கொடுக்கும் போது முட்டைகளின் எண்ணிக்கை எத்தனை கிடைக்கும்? எந்த அளவுக்கு அந்த முட்டைகள் வளரும்? அதில் எத்தனை முட்டைகள் கருவாகும் என்கிற கணிப்பு மதிப்பீடாக இதை நாங்கள் கருதுகிறோம்.

    எனவே 20 முதல் 25 ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருந்தால் 10 முதல் 15 நல்ல முதிர்ச்சி அடைந்த முட்டைகள் கிடைக்கும். இந்த முதிர்ச்சியடைந்த முட்டைகள் நன்றாக இருந்தால்தான் இதன் மூலம் உருவாகிற கருவின் கருத்தரிப்பு திறனும் அதிகமாகும்.

    எனவே கருத்தரிக்கும் விஷயத்தை இந்த முட்டைகளின் எண்ணிக்கைகளை வைத்துதான் முடிவு செய்ய முடியும். அந்த வகையில் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்யும் போது, அதற்கான தூண்டுதல் கொடுக்கிற மருந்தின் அளவுகளையும் இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை வைத்துதான் நாங்கள் நிர்ணயிக்கிறோம்.

    பொதுவாக சினைப்பையில் இயல்பாக முட்டைகள் இருப்பு கொண்ட இளம் பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட நாளிலேயே தூண்டுதல் கொடுத்தால், குறிப்பிடத்தக்க அளவில் கருமுட்டைகள் வளரும். அதன் மூலம் முதிர்ச்சியடைந்த நல்ல முட்டைகள் கிடைக்கும். நிறைய ஊசி மற்றும் நிறைய மருந்துகள் கொடுப்பதால் மட்டும் முட்டைகளின் வளர்ச்சி தூண்டப்படுவது இல்லை.

    ஆனால் சில காலகட்டங்களில் குறிப்பாக வயதான பெண்களுக்கு முட்டைகள் குறைவாக இருந்தால் அவர்களுக்கு மருந்துகளின் அளவை அதிகப்படுத்துவோம்.

    இந்த வகையில் சில மருந்துகளின் அளவை நிர்ணயிப்பதற்கும், அதைப்பொருத்து அவர்களுடைய எதிர்வினை எப்படி முன்னேற்றம் அடையும், எத்தனை முதிர்ச்சி அடைந்த முட்டைகள் வரும் என்பதை கணிப்பதற்கும், இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை ரொம்ப முக்கியமான ஒன்றாகும்.

    பெண்களுக்கு ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம்? அவர்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? அவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    ×