என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற சாக்சி மாலிக், ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறவுள்ள நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்துகிறார்.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, துடுப்பு படகு, ஜூடோ, ஆக்கி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், கோல்ப், வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர். 118 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு இரண்டு பதக்கமே கிடைத்துள்ளது. பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தெலுங்கானாவை சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளி பதக்கமும், பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ பிரிவில் அரியானாவை சேர்ந்த சாக்சி மாலிக் வெண்கல பதக்கமும் வென்றனர்.
கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், வெண்கல பதக்கம் வென்ற சாக்சி மாலிக், ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறவுள்ள நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்துகிறார்.
மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் 0-3 என்ற கணக்கில் மங்கோலிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் 0-3 என மங்கோலிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
ரியோ ஒலிம்பிக்கின் கடைசி நாளான இன்று ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவு ப்ரீஸ்டைல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதற்காக தகுதிச் சுற்றில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் மங்கோலிய வீரரான கான் ஜோரிக்கை எதிர்கொண்டார்.
இதில் 0-3 என யோகேஷ்வர் தத் தோல்வியடைந்து வெளியேறினார். இவரது தோல்வியால் மல்யுத்தத்தில் சாக்சி மாலிக் வெண்கலத்துடன் இந்தியா திருப்பதியடைந்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. கடைசி நாளில் யோகேஷ்வர் தத்ததும் ஏமாற்றியதால் இந்தியா தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலத்துடன் திருப்பதியடைய வேண்டியதாயிற்று.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி நாளான இன்று 12 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
ரியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் 12 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆண்களுக்கான மராத்தான் பந்தயம் நடக்கிறது.
ஆண்கள் கைப்பந்து இறுதி ஆட்டம் இரவு 9.45 மணிக்கு நடக்றிது. இதில் பிரேசில் - இத்தாலி அணிகள் மோதுகின்றன.
ரிதம்பிக் ஜிம்னாஸ்டிக், சைக்கிளிங் மவுன்டயன் பிரிவில் தலா ஒரு தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது.
ஹேண்ட்பால் இறுதிப் போட்டி இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதுகின்றன. மல்யுத்தம் போட்டி யில் 2 தங்கமும், குத்துச் சண்டையில் 4 தங்கமும் வழங்கப்படுகிறது.
மல்யுத்தத்தில் 65 கிலோ மற்றும் 97 கிலோ பிரிவிலும், குத்துச்சண்டை பெண்கள் 75 கிலோ பிரிவிலும், குத்துச் சண்டை ஆண்கள் 52 கிலோ, 64 கிலோ, 91 கிலோ ஆகிய பிரிவிலும் நடக்கிறது.
ஆண்களுக்கான கூடைப் பந்து இறுதிப் போட்டி நள்ளிரவு 12.15 மணிக்கு நடக்கிறது. இதில் செர்பியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட இறுதிப்போட்டி இன்று காலை நடந்தது. இதில் ஜில் ராபர்ட்ஸ், மெரிட், டோனி மேக்குய், அர்மென் ஹால் ஆகியோரை கொண்ட அமெரிக்க அணி தங்கம் பதக்கத்தை கைப்பற்றியது.

அந்த அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 57.30 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தது. வெள்ளி பதக்கத்தை ஜமைக்கா அணி வென்றது. அந்த அணி 2 நிமிடம் 58.16 வினாடியில் கடந்தது. வெண்கலத்தை பனாமஸ் அணி (2 நிமிடம் 58.49 வினாடி) கைப்பற்றியது.
இன்று நடந்த பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தியது. கோர்ட்னி, நடாஷா ஹேஸ்டிங், பிரான்சிஸ், பெலிக்ஸ் ஆகியோரை கொண்ட அமெரிக்க அணி 3 நிமிடம் 19.06 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. வெள்ளி பதக்கத்தை ஜமைக்கா அணியும் (3 நிமிடம் 20.34 வினாடி) வெண்கலத்தை இங்கிலாந்தும் (3 நிமிடம் 25.88 வினாடி) வென்றார்.

ஆண்கள் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயத்தில் இங்கிலாந்து வீரர் முகமது பரக் தங்கம் வென்றார். 13 நிமிடம் 03.30 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தார். முகமது பரக்குக்கு இது 2&வது தங்கமாகும். ஏற்கனவே 10 ஆயிரம் ஓட்டத்திலும் தங்கம் வென்ற இருந்தது.
பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமன்யா தங்கம் (1 நிமிடம் 55.28 வினாடி) தங்கம் வென்றார். புரன்டியன் வீராங்கனை பிரன்சினி நையன்சபா வெள்ளி பதக்கத்தையும் கென்யாவின் மார்கெரட் வயம்புயூ வெண்கலத்தை வென்றனர்.
பெண்கள் உயரம் தாண்டுதலில் ஸ்பெயின் வீராங்கனை ரூத் மெய்டியா தங்கம் வென்றார். பல்கேரியாவின் டேமிரோபோ வெள்ளியும், குரோஷியாவின் விலாசிக் வெண்கலத்தையும் கைப்பற்றினர்.
ஆண்கள் ஈட்டி எறிதலில் ஜெர்மனி வீரர் தாமஸ் ரோலர் தங்கம் வென்றார். அவர் அதிகபட்சமாக 90.30 மீட்டர் வீசினார்.
வெள்ளி பதக்கத்தை கென்யாவின் ஜூலியஸ் ஹிகோவும் வெண்கலத்தை டிரினிடாட் டொபாந்கோ வீரர் வால்கோட்டும் வென்றனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் இந்தியாவுக்கு 3-வது பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, துடுப்பு படகு, ஜூடோ, ஆக்கி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், கோல்ப், வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர். 118 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு இரண்டு பதக்கமே கிடைத்துள்ளது. பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தெலுங்கானாவை சேர்ந்த பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 58 கிலோ பிரிவில் அரியானாவை சேர்ந்த சாக்சி மாலிக் வெண்கல பதக்கம் வென்றார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.பெண்கள் பெற்ற 2 பதக்கம் மூலமே இந்தியாவின் மானம் காக்கப்பட்டது.

மல்யுத்த வீரர் யோகேஷ்வர்தத் பங்கேற்கும் 65 கிலோ பிரிவு பிரீஸ்டைல் இன்று நடக்கிறது. லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ பிரிவில் வெண்கலம் வென்று முத்திரை பதித்த அவர் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை பெற்று கொடுப்பாரா? என்று கோடிக்கணக்கான இந்தியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவர் தகுதி சுற்றில் மங்கோலிய வீரர் கான் ஜோரிக்கை சந்திக்கிறார். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் பெற்றது. இந்த போட்டி இந்தியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. கடைசி நாளில் யோகேஷ்வர்தத் தங்கம் வென்றால் மட்டுமே ஈடு செய்ய இயலும். நிறைவு நாளில் எல்லோரது எதிர்பார்ப்பும் அவர் மீதே இருக்கிறது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றுதந்த சாக்ஷி மலிக் ஆகியோருக்கு துபாயில் வாழும் பிரபல தொழிலதிபர் 75 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்க தீர்மானித்துள்ளார்.
துபாய்:

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த முக்கட்டு செபாஸ்டியன் அங்கு பண்ணை தொழில் நடத்தி வருவதுடன், பெங்களூரில் கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
துபாய் நாட்டிலும் சில தொழில்களை நடத்திவரும் இவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றுதந்த சாக்ஷி மலிக் ஆகியோருக்கு துபாயில் வாழும் பிரபல தொழிலதிபர் 75 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்க முன்வந்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி காட்டிய இந்த இரு வீராங்கனைகளையும் ரொக்கப் பரிசின் மூலமாக நான் கவுரவிக்க விரும்புகிறேன். நான் மிகப்பெரிய பணக்காரன் அல்ல; ஆனால், என்னால் இயன்றவரை ஏதாவது செய்ய விரும்புகிறேன்.
எனவே, பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுதந்த பி.வி.சிந்துவுக்கு 50 லட்சம் ரூபாயும், மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்றுதந்த சாக்ஷி மலிக்குக்கு 25 லட்சம் ரூபாயும் அளிக்க தீர்மானித்துள்ளேன்.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்த வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் கேரள மாநிலம், கொச்சி நகரில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். அந்த விழாவில் இவர்களுக்கான ரொக்கப் பரிசு வழங்கப்படும் என துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முக்கட்டு செபாஸ்டியன் தெரிவித்தார்.

நான் சிந்துவின் ரசிகராக இப்போது மாறி விட்டேன் என்று ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது தனக்கு பெருமிதம் அளிப்பதாக சிந்துவின் தாயார் கூறியுள்ளார்
சென்னை:
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவின் தாயார் பி.விஜயா நேற்று ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இறுதிப்போட்டி முடிந்ததும் சிந்து என்னிடம் பேசினார். கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்தார். அவரிடம் ஆட்டத்தை பற்றி எதுவும் நான் பேசவில்லை. ‘கவலைப்படாதே சிந்து. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். இதுவே பெரிய விஷயம். நீ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி எங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்து விட்டாய்’ என்று கூறி தேற்றினேன். அதன் பிறகு அவர் சகஜ நிலைக்கு திரும்பினார்.
அவர் நாளை (திங்கட்கிழமை) தாயகம் திரும்புகிறார். மாநில அரசு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. அவர் வீட்டுக்கு வந்ததும் அவருக்கு பிடித்த மைசூர்பாகு, பிரியாணி உள்ளிட்டவை செய்து கொடுப்பேன்.
நான் சென்னையில் 18 ஆண்டுகள் இருந்துள்ளேன். எனக்கு நன்கு தமிழ் தெரியும். சிந்து சில வார்த்தைகள் தமிழில் பேசுவார். அதே சமயம் தமிழில் மற்றவர்கள் பேசினால், புரிந்து கொள்வார்.
நடிகர் ரஜினிகாந்த், சிந்துவை பாராட்டியதோடு ‘நான் சிந்துவின் ரசிகராக இப்போது மாறி விட்டேன்’ என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் எவ்வளவு பெரிய மனிதர். மிகப்பெரிய நடிகரான அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் எனது மகளின் ரசிகர் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை படித்ததும் உண்மையிலேயே நெகிழ்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
இவ்வாறு பி.விஜயா கூறினார்.

ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜெர்மனி பெண்கள் அணி முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்றது.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜெர்மனி பெண்கள் அணி முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்றது.
ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, சுவீடனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தோல்வி கண்ட சுவீடன் அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே 3 முறை வெண்கலப்பதக்கம் வென்றுள்ள ஜெர்மனி அணி தங்கப்பதக்கத்தை வெல்வது இதுவே முறையாகும். அத்துடன் ஒலிம்பிக் மற்றும் உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 3-வது அணி என்ற பெருமையையும் ஜெர்மனி பெற்றது. முன்னதாக நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் கனடா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சிந்துவுக்கு பணம், கார், வீடு என போட்டி போட்டு பரிசுகளை வழங்குகிறார்கள். இதுவரை அவருக்கு ரூ.13 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி நாளையுடன் நிறைவு பெறுகிறது.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 2 பதக்கங்களே கிடைத்து உள்ளன. பதக்க ஏக்கத்தை தணித்த இருவருமே பெண்கள் ஆவர்.
பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங் கனை பி.வி.சிந்து 21-19, 12-21, 15-21 என்ற செட் கணக்கில், உலக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங் கனை கரோலினா மரினிடம் போராடி தோல்வி கண்டார். 2-வது இடம் பிடித்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.
ஒலிம்பிக் வரலாற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்து தான். இதனால் ஒட்டுமொத்த தேசமும் அவரை பாராட்டி கொண்டாடுகிறது.
வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள 21 வயதான சிந்து, பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ரூ.13 கோடிக்கும் அதிகமாக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் வசிக்கிறார். சிந்துவின் வசிப்பிடம் தெலுங்கானா என்றாலும், அவர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரா? அல்லது ஆந்திராவைச் சேர்ந்தவரா? என்று ஒரு பக்கம் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் இவ்விரு மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு பரிசுகளை அறிவித்து உள்ளன.
தெலுங்கானா பிரிவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அணிக்காக போட்டிகளில் பங்கேற்றவர் சிந்து. ஒலிம்பிக்கில் பதக்க மங்கையாக உருவெடுத்துள்ள அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் ரூ.3 கோடி தொகை, மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதியில் 9 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனை, குரூப்-1 நிலையில் உள்ள அரசு பணி ஆகியவை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.
சிந்து தனக்கு விரும்பிய பணியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சிந்துவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்து இருந்த தெலுங் கானா அரசு, அந்த தொகையை தற்போது ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறது. அத்துடன் அவருக்கு 3 ஆயிரம் சதுர அடி நிலமும் வழங்குவதாக அறிவித்துள்ள தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், சிந்து விரும்பினால் தெலுங்கானா அரசு பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார்.
மேலும், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது.
அத்துடன் நாளை (திங்கட்கிழமை) தாயகம் திரும்பும் சிந்துவுக்கு பிரமாண்டமான வரவேற்பு விழா நடத்தவும் தெலுங்கானா அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
டெல்லி மாநில அரசு தனது பங்களிப்பாக சிந்துவுக்கு ரூ.2 கோடி வழங்குவதாக கூறி உள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பி.வி.சிந்து ஐதராபாத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் உதவி மேலாளராக (விளையாட்டு) பணியாற்றுகிறார். இதனால் அவருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன சேர்மன் வரதராஜன் அறிவித்து உள்ளார். மேலும், சிந்துவுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
மேலும் சிந்துவுக்கு அரியானா மாநில அரசு ரூ.50 லட்சமும், மத்திய பிரதேச அரசு ரூ.50 லட்சமும், இந்திய பேட்மிண்டன் சங்கம் ரூ.50 லட்சமும் வழங்க இருக்கின்றன. வெள்ளிப்பதக்கம் பெற்றதன் மூலம் மத்திய அரசின் வெகுமதி ரூ.50 லட்சம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பரிசு ரூ.30 லட்சம் ஆகியவையும் சிந்துவுக்கு கிடைக்கும்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், நடிகருமான விஜய் சந்தர் அளித்த பேட்டியில், ‘ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவின் பெயரில் 2 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பத்திரத்தை எங்கள் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சிந்துவிடம் வழங்குவார். இந்த நிலம் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் பண்ணை வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது’ என்றார்.
இது தவிர, விளம்பரத்துக் காக சிந்துவை ஒப்பந்தம் செய்ய பல்வேறு நிறுவனங்கள் காத்து இருக்கின்றன. அவரது மெச்சத்தகுந்த சாதனைக்காக கார், நகை, வீடுகளை வழங்கவும் பல தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஐதராபாத் பேட்மிண்டன் சங்கம் பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் வழங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற (வெண்கலம்) முதல் இந்தியர் என்ற சாதனைக்குரிய, அரியானாவைச் சேர்ந்த 23 வயதான சாக்ஷி மாலிக்குக்கும் பரிசுகள் குவிகின்றன.
டெல்லி மாநில அரசு சார்பில் சாக்ஷி மாலிக்குக்கு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. அரியானாவின் ரோட்டக் நகரில் உள்ள சாக்ஷியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்த டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா, பின்னர் இந்த பரிசு அறிவிப்பை வெளியிட்டார்.
சாக்ஷியின் தந்தை சுக்பிர் மாலிக், டெல்லி போக்கு வரத்து கழக பேருந்தில் கண்டக்டராக வேலை பார்க்கிறார். சாக்ஷியின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் அவரது தந்தை சுக்பிர் மாலிக்கையும் கவுரவப்படுத்த விரும்பிய டெல்லி அரசு, அவருக்கு பதவி உயர்வு வழங்க முடிவு செய்து இருக்கிறது.
சாக்ஷி மாலிக்குக்கு, அரியானா அரசு பாராட்டு விழா நடத்தி ரூ.2½ கோடி வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா அரசும் சாக்ஷிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்து உள்ளது.

ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
ரியோ:
ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் பிரேசில் அணியும் ஜெர்மனி அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 26-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கேல் அடித்து அசத்தினர். பதில் கோல் அடிக்க போராடிய ஜெர்மனி அணி இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்தது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதனால் பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. இதில் பிரேசில் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
கால்பந்து அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள பிரேசில் அணி ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு தெலுங்கானா அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.
அவ்வகையில், ஆந்திர மாநில அரசு அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, புதிதாக உருவாகி வரும் தலைநகர் அமராவதியில் 1000 சதுர யார்டு வீட்டு மனையும், குரூப்-1 நிலையில் அரசு பணியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், சிந்துவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன், 1000 சதுர யார்டு வீட்டுமனையும் வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. பயிற்சியாளர் கோபிசந்துக்கு ஒரு கோடி ரூபாயும், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ஒரு கோடி ரூபாயும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிந்து விரும்பினால் அரசு வேலை வழங்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறினார். நாளை மறுநாள் ஐதராபாத் வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாநில அரசு அறிவித்த புதிய விளையாட்டுக் கொள்கையின் அடிப்படையில், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என செய்தி வெளியானது. ஆனால், தற்போது அமைச்சரவைக் கூட்டத்தில், கூடுதல் பரிசுத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது பிரிட்டன் பெண்கள் ஹாக்கி.
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை தங்கப் பதக்கம் வாங்கிய நடப்பு சாம்பியன் நெதர்லாந்து அணியுடன் பிரிட்டன் அணி மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் போட்டியின் நேரம் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 3-3 கோல்கள் அடித்து சமநிலைப் பெற்றிருந்தது.
இதனால் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரிட்டன் 2-0 என வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. ஹாட்ரிட் சாதனை படைக்க முடியாமல் நெதர்லாந்து ஏமாற்றம் அடைந்து வெள்ளிக் பதக்கத்தோடு திருப்தி அடைந்தது.
முன்னதாக, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணி, நியூசிலாந்தை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.