என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக் 2016: இன்று கடைசி நாளில் 12 தங்கத்துக்கு போட்டி
ரியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி நாளான இன்று 12 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.
ரியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் 12 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆண்களுக்கான மராத்தான் பந்தயம் நடக்கிறது.
ஆண்கள் கைப்பந்து இறுதி ஆட்டம் இரவு 9.45 மணிக்கு நடக்றிது. இதில் பிரேசில் - இத்தாலி அணிகள் மோதுகின்றன.
ரிதம்பிக் ஜிம்னாஸ்டிக், சைக்கிளிங் மவுன்டயன் பிரிவில் தலா ஒரு தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது.
ஹேண்ட்பால் இறுதிப் போட்டி இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதுகின்றன. மல்யுத்தம் போட்டி யில் 2 தங்கமும், குத்துச் சண்டையில் 4 தங்கமும் வழங்கப்படுகிறது.
மல்யுத்தத்தில் 65 கிலோ மற்றும் 97 கிலோ பிரிவிலும், குத்துச்சண்டை பெண்கள் 75 கிலோ பிரிவிலும், குத்துச் சண்டை ஆண்கள் 52 கிலோ, 64 கிலோ, 91 கிலோ ஆகிய பிரிவிலும் நடக்கிறது.
ஆண்களுக்கான கூடைப் பந்து இறுதிப் போட்டி நள்ளிரவு 12.15 மணிக்கு நடக்கிறது. இதில் செர்பியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

Next Story