என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியோ ஒலிம்பிக்: 4x400 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்கா ஆதிக்கம்
    X

    ரியோ ஒலிம்பிக்: 4x400 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்கா ஆதிக்கம்

    ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட இறுதிப்போட்டி இன்று காலை நடந்தது. இதில் ஜில் ராபர்ட்ஸ், மெரிட், டோனி மேக்குய், அர்மென் ஹால் ஆகியோரை கொண்ட அமெரிக்க அணி தங்கம் பதக்கத்தை கைப்பற்றியது.
    ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட இறுதிப்போட்டி இன்று காலை நடந்தது. இதில் ஜில் ராபர்ட்ஸ், மெரிட், டோனி மேக்குய், அர்மென் ஹால் ஆகியோரை கொண்ட அமெரிக்க அணி தங்கம் பதக்கத்தை கைப்பற்றியது.

    அந்த அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 57.30 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தது. வெள்ளி பதக்கத்தை ஜமைக்கா அணி வென்றது. அந்த அணி 2 நிமிடம் 58.16 வினாடியில் கடந்தது. வெண்கலத்தை பனாமஸ் அணி (2 நிமிடம் 58.49 வினாடி) கைப்பற்றியது.

    இன்று நடந்த பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தியது. கோர்ட்னி, நடாஷா ஹேஸ்டிங், பிரான்சிஸ், பெலிக்ஸ் ஆகியோரை கொண்ட  அமெரிக்க அணி 3 நிமிடம் 19.06 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. வெள்ளி பதக்கத்தை ஜமைக்கா அணியும் (3 நிமிடம் 20.34 வினாடி) வெண்கலத்தை இங்கிலாந்தும் (3 நிமிடம் 25.88 வினாடி) வென்றார்.

    ஆண்கள் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயத்தில் இங்கிலாந்து வீரர் முகமது பரக் தங்கம் வென்றார். 13 நிமிடம் 03.30 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தார். முகமது பரக்குக்கு இது 2&வது தங்கமாகும். ஏற்கனவே 10 ஆயிரம் ஓட்டத்திலும் தங்கம் வென்ற இருந்தது.

    பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமன்யா தங்கம் (1 நிமிடம் 55.28 வினாடி) தங்கம் வென்றார். புரன்டியன் வீராங்கனை பிரன்சினி நையன்சபா வெள்ளி பதக்கத்தையும் கென்யாவின் மார்கெரட் வயம்புயூ வெண்கலத்தை வென்றனர்.

    பெண்கள் உயரம் தாண்டுதலில் ஸ்பெயின் வீராங்கனை ரூத் மெய்டியா தங்கம் வென்றார். பல்கேரியாவின் டேமிரோபோ வெள்ளியும், குரோஷியாவின் விலாசிக் வெண்கலத்தையும் கைப்பற்றினர்.

    ஆண்கள் ஈட்டி எறிதலில் ஜெர்மனி வீரர் தாமஸ் ரோலர் தங்கம் வென்றார். அவர் அதிகபட்சமாக 90.30 மீட்டர் வீசினார்.
    வெள்ளி பதக்கத்தை கென்யாவின் ஜூலியஸ் ஹிகோவும் வெண்கலத்தை டிரினிடாட் டொபாந்கோ வீரர் வால்கோட்டும் வென்றனர்.
    Next Story
    ×