என் மலர்

  செய்திகள்

  ஒலிம்பிக் கால்பந்தில் முதல் முறையாக தங்கம் வென்று பிரேசில் சாதனை
  X

  ஒலிம்பிக் கால்பந்தில் முதல் முறையாக தங்கம் வென்று பிரேசில் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரேசில் அணி முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
  ரியோ:

  ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் போட்டியை நடத்தும் பிரேசில் அணியும் ஜெர்மனி அணியும் மோதின.

  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 26-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கேல் அடித்து அசத்தினர். பதில் கோல் அடிக்க போராடிய ஜெர்மனி அணி இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்தது.

  ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

  இதனால் பெனால்டி முறை கொண்டுவரப்பட்டது. இதில் பிரேசில் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

  கால்பந்து அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள பிரேசில் அணி ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

  Next Story
  ×