என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காத மத்திய அரசு- விஜய்
    X

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காத மத்திய அரசு- விஜய்

    • 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம்பெறவில்லை.
    • புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மத்திய அரசை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-

    * புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

    * 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை.

    * புதுச்சேரியில் ஒரு ஐ.டி. கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.

    * காரைக்கால், ஏனாம், மாஹேவில் முன்னேற்றம் இல்லை, சுற்றுலா தளமான புதுவையில் பார்க்கிங் வசதி இல்லை.

    * ஒரு அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கி நீக்கப்பட்டு வேறு அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாள் ஆகியும் பதவி தரப்படவில்லை.

    * 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம்பெறவில்லை.

    * புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டி உள்ளது.

    * புதுச்சேரி கடனை குறைத்து பொருளாதாரத்தை வளர்க்க போதிய திட்டங்கள் வகுக்க வேண்டும்.

    * இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது.

    *மற்ற மாநிலம் போல அரிசி, பருப்பு வழங்கும் முறையை புதுச்சேரியில் சீராக்க வேண்டும்.

    * வரும் புதுச்சேரி தேர்தலிலும் த.வெ.க.வின் கொடி பட்டொளி வீசி பறக்கும்.

    * நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம் என்றார்.

    Next Story
    ×