என் மலர்
புதுச்சேரி
கொம்பாக்கத்தில் செய்யப்பட அடிப்படை வசதிகள் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதியில், புதுவை நகராட்சியின் கீழ் வரும் கொம்பாக்கம் வார்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நகராட்சி அஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதுவை நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற் பொறியாளர் சிவபாலன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கொம்பாக்கம் பேட், சிவகிரி நகர், துர்கா நகர், லஷ்மி நகர், ஒட்டம்பாளையம், செட்டிக்குளம், குப்பம் பேட் உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், மின்தகன மேடை, மார்க்கெட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஸ்மார்ட் சிட்டி மற்றும் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியின் கீழ் பணிகளை மேற்கொள்ள சிவா எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார். அப்போது மேற்கண்ட பணிகளை விரைந்து முடித்திட ஆய்வு மேற்கொண்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யுமாறு சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் ம.தி.மு.க. கபிரியேல், வீரசெல்வம், சத்தியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, ஜீவா, ஜெகன், மோகன், சுரேஷ், ரமேஷ், ஜனா, அருண், பரதன், தேசிகன், ராஜேந்திரன், விஸ்வநாதன் உள்ளிட்ட தொகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
சர்வாதிகாரப் போக்கோடு செயல்படும் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும் என இந்திய கம்யூ. வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திறக்கப்பட்ட கல்லூரிகளுக்கு 80 சதவீதம் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து உள்ளது. இந்த நிலையில் புதுவை மத்திய பல்கலைகழகம் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு ஆன்லைன் இல்லாமல் நேரடி தேர்வுகளை எழுத உத்தரவிட்டுள்ளது.
அண்டை மாநிலமான தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளில் பருவ முறை தேர்வை ஆன்லைனில் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. புதுவை சட்டக்கல்லூரியும் ஆன்லைனில் தேர்வு நடத்துகிறது. உத்தரவு பிறப்பிக்கும் மத்திய பல்கலைக்கழகம் கூட ஆன்லைனில் தேர்வுகள் நடத்துகிறது. இந்த நிலையில் இணைப்பு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மத்திய பல்கலைக் கழகம் ஏன் ஓரவஞ்சனை செய்கிறது?-
இதனால் புதுவையில் உள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக் கான மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத ஒரு வார காலமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். போராடும் மாணவர்கள் கவர்னர், முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட்டார்கள். அவர்களும், மாணவர்களின் கோரிக்கைகள் நியாய மானது என்று சொல்லி மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்தார்கள்.
கல்வி அமைச்சர் நேரடியாகவே துணைவேந்தர் குர்மித் சிங்கை சந்தித்து முறையிட்டார். கவர்னர் தமிழிசை துணைவேந்தர் குர்சித் சிங்கிடம் பேசி நேரடி தேர்வை ரத்து செய்ய அறிவுறுத்தனார். ஆனால் துணைவேந்தர் முறையிட்ட மாணவர்களை மிரட்டி உள்ளார். மேலும் துணைவேந்தர் குர்மித் சிங் புதுவை அரசு, கவர்னரின் அறிவுறுத்தல்களை மதிக்காமல், ஆணவப்போக்கோடு செயல்படுகிறார்.
இதுவரை ஆன்லைன் தேர்வுக்கான உத்தரவு பிறப்பிக்கவில்லை. கவர்னர் உடனடியாக இந்த பிரச்சனைகளில் தலையிட்டு துணைவேந்தர் குர்மித் சிங்கை எச்சரிக்கை செய்து மாணவர்களின் நியாயமான கோரிக்கையான ஆன்லைனில் தேர்வு எழுதும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.
உப்பளம் தொகுதியில் தண்ணீர் திருவிழாவை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் முழுவதும் தண்ணீர் திருவிழா தற்போது நடை பெற்று வருகிறது. 2 நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்து என 7 நீர் குடங்கள் ஒவ்வொரு நீர் நிலைகளான குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு சென்று நீர் கலக்கும் நிகழ்ச்சி கடந்த 2-ந் தேதி சதுப்புதில் நாள் தினத்தில் நல்லாட்சிக்கான கூட்டு இயக்கம் மூலம் தொடங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக புதுவை நகராட்சிக்குட்பட்ட உப்பளம் தொகுதி தமிழ்தாய் நகரில் உள்ள பொறையாத்தம்மன் குளத்தில் நீர்குடம் பயணத்தை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். மேளதாளம் தப்பாட்டம் முழங்க வீதி வழியாக ஊர்வலமாக நீர்குடத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது-.
இதில் அங்கன்வாடி ஊழியர் லலிதா வரவேற்றார். குளங்கள் காப்போம் குழு கார்த்திகேயன், சூர்யா ஆகியோர் தண்ணீரின் அவசியம் குறித்து விளக் கினர். தண்ணீரின் சிக்கனம், வருங்கால தலைமுறையினருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசினார்.
இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் காந்தி, பன்னீர்செல்வம், ஞானவேல், சங்கரநாராயணன், பத்மநாபன் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அனைவரும் தண்ணீரின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதன் பின் ஊசுடு ஏரியில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் பொறையாத்தம்மன் கோவில் குளத்தில் கலக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள் சாரதா, சூசை மேரி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், கிளை செயலாளர் செல்வம், காலப்பன், ரகுமான், மோரீஸ் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
புதுவையில் 5 வயதுக்குட்பட்ட 86 ஆயிரம் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக இந்தியாவில் ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து இந்தியாவில் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி 23-ந் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இது குறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. இதற்காக போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடக்கிறது. அதன்படி புதுவை மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் என 453 மையங்களில் 876 குழுக்களை கொண்டு 86 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.
முகாமினை முன்னிட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரி, இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் அதிகம் கூடும் மற்றும் கடந்து செல்லும் இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாம், போகோ லேண்ட், போத்தீஸ் ஆகிய இடங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
புதுச்சேரி - தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக்கோவில், திருக்கனூர், குருமாம்பட்டு ஆகிய இடங்களில் முகாம் அமைத்து போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. நடமாடும் போலியோ வாகனம் மூலமாகவும் புதுச்சேரி பகுதியிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்த வருடம் அதிக இடம்பெயரும் மக்களையும் இனம் கண்டு அவர்களுக்கு முழுமையாக போலியோ சொட்டு மருந்து சென்றடையை வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலியோ சொட்டு மருந்து குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் துறை செயலாளர் உதயகுமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, ஆனந்தலட்சுமி, ராஜாம்பாள், ரகுநாதன், மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக இந்தியாவில் ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து இந்தியாவில் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி 23-ந் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இது குறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது. இதற்காக போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடக்கிறது. அதன்படி புதுவை மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் என 453 மையங்களில் 876 குழுக்களை கொண்டு 86 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.
முகாமினை முன்னிட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரி, இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் அதிகம் கூடும் மற்றும் கடந்து செல்லும் இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாம், போகோ லேண்ட், போத்தீஸ் ஆகிய இடங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
புதுச்சேரி - தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக்கோவில், திருக்கனூர், குருமாம்பட்டு ஆகிய இடங்களில் முகாம் அமைத்து போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. நடமாடும் போலியோ வாகனம் மூலமாகவும் புதுச்சேரி பகுதியிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இந்த வருடம் அதிக இடம்பெயரும் மக்களையும் இனம் கண்டு அவர்களுக்கு முழுமையாக போலியோ சொட்டு மருந்து சென்றடையை வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலியோ சொட்டு மருந்து குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் துறை செயலாளர் உதயகுமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, ஆனந்தலட்சுமி, ராஜாம்பாள், ரகுநாதன், மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மூலக்குளம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலகுளம் மேட்டுப்பாளையம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் லாரிகள் நிறுத்தும் முனையம் அருகே உள்ள தனியார் மதுபான கடை அருகே குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் எஸ் ஐ கலையரசன் தலைமையில்லான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது 26 மற்றும் வானர பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் வயது 28 மற்றும் உருளையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் வயது 29 என்பதும் விசாரணையில் தெரியவந்தது அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய மந்திரிக்கு ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டுத்தெருவை சேர்ந்த வீரமணி, செல்வமணி, திலீபன், ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய 5 மீனவர்களும், தமிழகத்திலுள்ள நாகை தரங்கம்பாடியைச் சேர்ந்த 8 மீனவர்களும் 23-ந் தேதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மீனவர்களின் குடும்பத்தினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மீட்க கோரினர்.இந்த நிலையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களையும், அவர்களின் படகையும் இலங்கையில் இருந்து மீட்க வேண்டும்
மீனவர் நலன் கருதி அதிமுக்கியத்துவம் தந்து இலங்கை அரசிடம் பேசி வலியுறுத்தி அனைவரையும் உடனே விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காமராஜர் நகர் தொகுதி பா.ஜனதா பிரமுகர் அஸ்வின்குமாருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் அஸ்வின்குமார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை பா.ஜனதாவில் இணைத்துக்கொண்டு கட்சி பணிகளை செய்து வருகிறார். மேலும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தல் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமாரின் பரிந்துரையின் பேரில் அஸ்வின்குமாருக்கு மாநில பா.ஜனதா இளைஞரணி செயலாளர் பதவியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வழங்கியுள்ளார்.
புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அஸ்வின் குமாருக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவி நியமனத்திற்கான சான்றிதழை பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன் அஸ்வின் குமாருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன், காமராஜர் நகர் பா.ஜனதா நிர்வாகி தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இளம்வயதில் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டு சீரிய முறையில் கட்சி பணியாற்றி வரும் அஸ்வின்குமாருக்கு மாநில பா.ஜனதா இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டதற்கு பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுவையில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 12, ஏனாமில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 15, காரைக்காலில் 2, மாகியில் 2 பேர் என 19 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 26, காரைக்காலில் 11, மாகியில் 2 பேர் என 39 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 690 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 528 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர். புதுவையில் 105, காரைக்காலில் 64, ஏனாமில் 9, மாகியில் 5 பேர் என 183 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 202 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 960 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 85 ஆயிரத்து 584 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் இருந்து தமிழகத்திற்கு காரில் மது பாட்டில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் மதுவிலக்கு சப்--இன்ஸ் பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சாதாரண உடையில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புவையில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்ததில் டிரைவரின் கால் பகுதியில் இருந்து 25 மது பாட்டில்களும், காருக்கு பின்னால் உள்ள பகுதியில் 50 மது பாட்டில்களும் காரின் என்ஜினில் 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களும் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் மதுபாட்டில் கடத்தியவர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த புத்திர கோட்டை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கூரியர் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
சேதராப்பட்டு:
வில்லியனூரை அடுத்த அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் புதுவையில் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ந் தேதி இரவு வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற இவர் சேந்தநத்தம் சுடுகாட்டு பகுதியில் பாட்டிலால் குத்தப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டும் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் சீனிவாசன் சேந்தநத்தம் சாராய கடைக்கு மது குடிக்க சென்ற போது, சீனிவாசனை 2 பேர் அழைத்து சென்று பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்து பணத்தை பறித்து சென்று தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.
இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். முக்கிய கொலை யாளியான சேந்தநத்தம் கிராமத்தை சேர்ந்த புகழ் (22) என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓடையில் மண்ணை கொட்டி ஆக்கிரமித்ததாக இன்ஸ்பெக்டரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடி சுனாமி குடியிருப்பில் இருந்து ஆரோவில் செல்லும் சாலையின் அருகே ஓடை செல்கிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனிநபர்கள் ஓடையில் கற்களை கொட்டி தடுத்து அங்குள்ள மரங்களை வெட்டியதாக சின்னமுதலியார் சாவடிகுப்பம் தி.மு.க. கவுன்சிலர் வீரப்பன் தலைமையில் அப்பகுதி பஞ்சாயத்தார்கள் மற்றும் பொது மக்களும், இதேபோல் சின்ன முதலியார் சாவடி கவுன்சிலர் சரவணன் தலைமையில் ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்களும், சம்பவ இடத்தில் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வானூர் தாசில்தார் உமா மகேஸ்வரன், கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஓடையில் மண் கொட்டிய இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் ஆரோவில்லில் இருந்து சின்னமுதலியார் சாவடி வழியாக மழை, வெள்ளம் காலங்களில் தண்ணீர் இந்த ஓடை வழியே சென்று தான் கடலில் கலக்கிறது. இந்த ஓடை ஏற்கனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் மண்ணை கொட்டி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஊர் பொதுமக்களிடம் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சின்ன முதலியார் சாவடி சுனாமி குடியிருப்பு அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் பெயரிலான சொத்துக்கு வங்கிகளில் அடமான கடன் மறுப்பு குறித்து தி.மு.க. புகார் அளித்துள்ளது.
புதுச்சேரி:-
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கிகளில் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை அடமானம் வைத்து, தொழில் தொடங்கவோ, வீட்டு மனைகளை அடமானம் வைத்து அதில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கோ அல்லது வேறு சில குடும்ப தேவைகளுக்காகவோ கடன் கேட்டால் தர மறுக்கின்றனர்.
முழு முத்திரைத்தாள் கட்டணத்தையும் செலுத்தி விட்டு சொத்து பத்திரங்களை எடுத்து வந்தால்தான் அடமானம் ஏற்றுக்கொண்டு, அந்த சொத்தின் மீது கடன் தருவோம் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர்.
இது பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்யும் நோக்கில் அரசு கொண்டுவந்துள்ள 50 சதவீத முத்திரைத்தாள் கட்டண தள்ளுபடி திட்டத்திற்கே எதிரானது. எனவே அரசு முத்திரை தாள் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியில் பெண்கள் பெயரில் பதிவு செய்துள்ள சொத்துக்களை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் உள்ளிட்டவைகளை வங்கிகள் தடையின்றி வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும். அல்லது வங்கி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.






