என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் மது பாட்டில் கடத்தியவரையும், அவரை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
    X
    காரில் மது பாட்டில் கடத்தியவரையும், அவரை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    கார் என்ஜினில் வைத்து மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

    புதுவையில் இருந்து தமிழகத்திற்கு காரில் மது பாட்டில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:


    கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் மதுவிலக்கு சப்--இன்ஸ் பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார்  சாதாரண உடையில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புவையில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்ததில் டிரைவரின் கால் பகுதியில் இருந்து 25 மது பாட்டில்களும், காருக்கு பின்னால் உள்ள பகுதியில் 50 மது பாட்டில்களும் காரின் என்ஜினில் 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களும் இருந்தன. இதனை போலீசார்  பறிமுதல் செய்தனர். 

    பின்னர் நடத்திய விசாரணையில் மதுபாட்டில் கடத்தியவர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த புத்திர கோட்டை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 40) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து  கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×